Saturday, July 26, 2008

நான் ஏன் புகைக்கிறேன்...?

உன்னை
மறப்பதற்காக்ப்
புகைக்க வில்லை!
உன்னை
நினைப்பதற்க்காக..!

என்றோ
நீ
சொன்னாய்!
புகை பழக்கத்தை
தூக்கி எரியச் சொல்லி!
அன்றே
துறந்தேன்
அதை!
என்னையே
தூக்கி எறிந்தாய்!
அதன் பின் தான்
எடுத்தேன்
இந்த புகைச் சுருளை!


நான்
உள்ளே
இழுப்பது
புகையை அல்ல!
உன் மூக்கை
மூக்கால்
உரசும் போது
என் மேலுதட்டில்
முட்டும்
உன்
உஷ்ணக் காற்றை!

நான்
வெளியே
விடுவதும்
புகையை அல்ல!
என் ஆவியை..!

புகை
உடல் உறுதிக்கு
கேடு!
சிகரெட் பாக்கெட்
சொன்னது!
ஆனால்
உன் நினைவுகளுக்கல்ல!
இது நான்
சொல்வது!

"தம்மடித்தால்
நுரையிரல்
கெட்டுப் போகும்"
டாக்டர் சொன்னார்!
உன்னைக்
காதலித்த பின்
என் இதயமே
கெட்டுப் போய் விட்டதே!
பின்
நுரையிரல் மட்டும்
இருந்து
என்ன பயன்?

ஒரு நாள்,
புகைக் கூட்டங்களுக்கு
நடுவே
திரைப்பட
கனவுக் காட்சியில்
காதலன் காதலியாக
நம்மை
நினைத்துக்
கொள்ளுவேன்!

சில நாட்களில்
ஏன் நீ
என்னை
ஏமாற்றினாய்?
ஏன் நீ
என்னை
உண்மையாக
காதலிக்கவில்லை?
எப்படி
உன்னால்
அவனோடு
சந்தோஷமாக
வாழ முடிகிறது?
இது போன்ற
விடை தெரியாத
கேள்விகளுடன்
அடுத்த தம்மை
ப்ற்ற வைத்துக்
கொள்கிறேன்!

2 comments:

Vijay said...

என்ன ஒரு கவிதை, இப்படி கவிதை எழுதியும் ஒரு பொண்ணு வரல... ?

நவநீதன் said...

பாஸ்... பொண்ணு வராமலே இப்படி ஒரு கிறுக்கல்...
வந்துட்டா அவ்வளவுதான் பாஸ்...