Saturday, July 26, 2008

புரியாத புதிர்

மார்கழி மாதம்
மனம் குளிரும்படி
குளியலாடி,
வானவில்லை
வளைத்து
கோலமிட்டுக்
கொண்டிருந்தாள்
அவள்...!

பார்த்தவுடன்
பைத்தியம்
பிடித்தவன்
போலானேன்!
ஆம்!
காதல்
பைத்தியம்...!

அவளை
அங்கே
எதிர்பார்க்க வில்லை!
கல்லூரியில்
கண்ணுங் கருத்துமாய்
கவனித்துக்
கொண்டிருந்தாள்
பாடத்தை!

லேட்டாய்
போனதால்
திட்டு வாங்கினாலும்
அவளின் சிரிப்பால்
அரை நொடிப் பொழுதில்
அதனை
மறந்தேன்!

உணவு இடைவேளையில்
புத்தகம் கேட்டேன்!
புன்னகை தந்தாள்!

கண்டு கொள்ளாமல்
போனாலும்
வலியச் சென்று
பேசினால்
காந்தப் பார்வையும்
மயக்கும் புன்னகையும்
கலந்த
"பளிச்" என்ற
பதில் வரும்!

பிறகு
நிறைய
பேசினோம்!
சிலசமயம்
தேவையாலும்!
பல சமயம்
தேவையில்லாமலும்!

அவளிடம்
காதலைச்
சொன்னேன்!
மௌனமாய்
இருன்தாள்!
மௌனம்
சம்மதமா?
பிறகு
போய்விட்டாள்!
சம்மதமில்லையோ?

அதற்குப் பிறகும்
வலியச் சென்று
பேசினால்
தடையில்லாமல்
பேசுகிறால்!
எதுவும்
தெரியாதவள்
போல!

எப்போதாவது
காதலைப்
பற்றி
பேசும் போது
மட்டும்
லாவகமாய்ப்
பேச்சை
மாற்றிவிடுகிறாள்!

என்னைக்
காதலிக்கிறாளா?
இல்லையா?
புதிராய் அவள்!
புரியாமல் நான்!!

No comments: