Monday, October 24, 2011

குறிப்பறிதல் - சவால் சிறுகதைப் போட்டி -2011SP கோகுல் அந்த குறிப்பை என்னிடம் நீட்டினார். நான் அதை வாங்கி பார்த்தேன்.
Mr. கோகுல்...
S W H2 6F - இதுதான் குறியீடு. கவனம்.
-விஷ்ணு.

விஷ்ணு ஒரு உளவாளி. அவனுடன் நான் பல வழக்குகளில் வேலை செய்திருக்கிறேன். ஏற்கனவே ஏகப்பட்ட கேஸ் பெண்டிங்குல இருக்கு... இதுல இன்னொன்னா? எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்குவான்னு நல்லா தெரிஞ்சு வச்சுருக்காரு என்று மனதில் நினைத்துக்கொண்டே ஒரு சல்யூட்டை வைத்து விட்டு வீட்டுக்கு கிளம்பினேன்.
***
வீட்டில், கூரியர் வந்திருந்தது. உள்ளே ஒரு குறிப்பு.
Sir,
எஸ்.பி.கோகுலிடம் நான் தவறான குறியீடை தான் கொடுத்திருக்கிறேன்.
கவலை வேண்டாம்.
-விஷ்ணு
இதில் தவறான குறியீடை "தவறான குறியீடு" என்று நீங்கள் புரிந்துகொண்டால் அது தவறான புரிதல். குழப்பாதே என்கிறீர்களா? தவறான குறியீடு என்றால் எங்களுடைய சங்கேத வார்த்தையில் மிரர் இமேஜ். அதாவது கண்ணாடியில் இந்த குறியீட்டை பார்த்தால் என்ன கிடைக்குமோ அது தான் குறியீடு. ஆக, நிஜமான குறியீடு 2 W HS d7 .
அனால் எதற்காக விஷ்ணு இரண்டு குறிப்புகள் அனுப்ப வேண்டும்? அதுவும் தவறான ஒன்றை SP-க்கும் இன்னொன்றை எனக்கும்? ஏன்டா இவன் இப்பிடி யோசிக்குரான்னு பாக்குறீங்களா? எங்க முதல் வேலையே சந்தேகப்படுறது தான்.... ஏன்னா, நான் போலீஸ்காரன்.
இரண்டு குறிப்புகளையும் வைத்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருந்த போதே அந்த போன் வந்தது. விஷ்ணுவிடமிருந்து தான்.
"எங்கே?"
"ஹோட்டல் ஹீரா இன்டர்நேசனல் ரூம் நம்பர் 305 "
"பொருள்?"
"கரும்பு சக்கை"
"எப்போ?"
"நாளைக்கு சாயுங்காலம் ஆறு மணி"
"கன்பார்ம்டு ?"
"எஸ். கன்பார்ம்டு"
விஷ்ணு சொன்ன ஒரு விஷயம் கூட உண்மையில்லை. என்ன பாக்குறீங்க? கடேசியாக நான் கன்பார்ம்டு என்று கேட்டதற்கு எஸ் என்று மட்டும் சொல்லியிருந்தால் விஷயம் உண்மை என்று அர்த்தம். "எஸ் கன்பார்ம்டு" என்று சொல்லியதால் விஷயம் உண்மையில்லை. அவன் எதோ சிக்கலில் இருக்கிறான். அவனை எப்படியாவது காப்பாத்தனும்.
***
மறு நாள். ரிப்போட்டர் என்னை பார்த்து, "எப்படி சார் கண்டுபுடிச்சீங்க?"
"விஷ்ணு ஆபத்துல மாட்டியிருக்கான்னு தெரிஞ்ச வுடனே, நடந்ததெல்லாம் ஒரு நாடகம்-ன்னு நல்லா தெரிஞ்சுடுச்சு. போலிச திசை திருப்புறதுக்காக இதை பண்ணிருக்காங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன்.
உடனே எல்லா போலிஸ் ஸ்டேசனுக்கும் தகவல் அனுப்பி எல்லா செக் போஸ்ட்லயும் தீவிரமா செக் பண்ண சொன்னேன். அதுல போதை மருந்தை கடத்திகிட்டு இருந்த ஒரு ஆள் சிக்கினான்"
" போதை மருந்தோட மதிப்பு எவ்ளோ இருக்கும் சார்?"
"சுமார் 50 லட்சம்."
"அப்புறம் விஷ்ணுவை எப்டி சார் காப்பாத்துனீங்க?"
"போதை பொருள் கடத்துனவன பிடிச்சு போலிஸ் பாணில விசாரிச்சதுல இருந்து விஷ்ணு இருக்குற இடம் தெரிஞ்சது. "
"இதுல SP கோகுல் எப்டி சம்பந்த பட்ருக்கார்-ன்னு கண்டுபிடிச்சீங்க சார்?"
"விஷ்ணுவை காப்பாத்தி அவர்கிட்ட விசாரிக்கும் போது அவர் எந்த குறிப்புமே அனுப்பலைன்னு தெரிஞ்சது. அவர துப்பாக்கி முனையில போன் பண்ண வச்சிருக்காங்க. இதுல குறிப்பிடத்தக்க விஷயம் ஒரு குறிப்பை என்கிட்ட கொடுத்தது SP கோகுல் தான். அதனால CM கிட்ட ஸ்பெஷல் பெர்மிசன் வாங்கி, அந்த குறிப்பு எப்டி வந்ததுன்னு கோகுல்கிட்ட விசாரிச்சப்போ ஒரு பெரிய போதை மருந்து கும்பலே இதுக்கு பின்னாடி இருக்குங்கிறது தெரிய வந்தது. கும்பல்ல இருக்குற பல பேர் தலை மறைவாயிட்டாங்க. அவங்கள புடிக்க ஸ்பெஷல் டீம் அமைச்சிருக்கோம். "
"நன்றி சார்"

***

"குற்றம் நடந்தது என்ன" நிகழ்ச்சியில் என்னோட கதை தான் ஓடிக்கொண்டிருந்தது. அதை மனைவியுடன் ரசித்து பார்த்துக்கொண்டே, "task done " என்றொரு மெசேஜ்-ஐ தட்டி விட்டேன்.
டைன் டைன்.
"done " என்றொரு மெசேஜ் வந்திருந்தது. உடனே என்னோட சுவிஸ் பேங்க் அக்கௌன்ட் பேலன்சை செக் பண்ணினேன். நாலு கோடி கூடி இருந்தது. ஏனோ கோகுல் இப்ப சிறையில் என்ன செஞ்சுகிட்டு இருப்பார்-ன்னு நெனச்சுகிட்டேன்.