Tuesday, December 2, 2008

டகுல பாண்டிக்கு வழங்கப்பட்ட செக்ஸ் ஆலோசனைகளும் அதன் விளைவுகளும்....!


திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு...
நான் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய மஞ்சள் பத்திரிக்கைகளை படித்து கொண்டிருந்தேன்.
"என்னடா பண்ணுற...???" - என் பின்னால் இருந்து ஒரு குரல் வந்தது. திரும்பினால், நம்ம நண்பன் அரை டவுசர் டோமரு எட்டிப்பார்த்தான். (நம்ம கூட சேர்ரவங்க எல்லோரும் இப்பிடித்தான் இருப்பாய்ங்களோ...???).
"ஹி..ஹி... ஒண்ணுமில்லண்ணே ..." என்று சொல்லிக் கொண்டே புத்தகத்தை மறைத்தேன்.
"சீன் புக்கு தானே... டேய்... இதெல்லாம் ஏட்டறிவு...ஏட்டு சொரைக்காய் கறிக்கு உதவாது."
"என்னது நம்ம ஏட்டு கறி சமைக்க போறாரா?"
"இந்த நக்கல் தானே வேணாங்கிறது. எதோ ஒன்னுந்தெரியாத புள்ளைக்கு நாலு advise- போடலாம்ன்னு பார்த்தா ரொம்ப தான் நக்கல் பண்றீங்கடா... அடாதீங்கடா. அடங்குங்க.."
"சரிண்ணே... சொல்லுங்கண்ணே..."
"புத்தகம்லாம் வேலைக்காவாது... அனுபவம் தான் வேலைக்காவும். என்ன மாதிரி அனுபவம் இருக்குறவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ..." என்றான் அர டவுசரு.
இவனுக்கு கல்யாணமாகியே ஒரு மாசந்தான இருக்கும். இவன் எதோ இதுல பி.ஹெச்.டி வாங்கிட்ட மாதிரி பேசுறான்.
"டேய்... செக்ஸ்ல சில விஷயங்கள் ரொம்ப முக்கியம். இதை எல்லாம் நீ மனசுல வச்சுக்கோ...
1. பொண்ணுங்க கண்ணாடி மாதிரி... ரொம்ப ஸாஃப்ட்டா handle பண்ணனும்..
2. அடிக்கடி கட்டி புடிச்சு ' லவ் யூடான்னு' புருடா விடனும்..
3. அடிக்கடி அவ அழகா இருக்கான்னு கவித சொல்லணும்...
4. அவ பண்ணி இருக்குற சாப்பாடு நல்லா இருக்குன்னு கத விடனும்...
5. மல்லிக பூவும் அல்வாவும் வாங்கி கொடுக்கணும்...
இப்பிடி ஏக பட்ட மேட்டர் இருக்குடா... "
அடங்கொய்யால.... நீயெல்லாம் சொல்லி நான் கேக்க வேண்டியதா போயிடுச்சு பாரு. என் நேரம்டா... என்று நினைத்துக் கொண்டே
"அண்ணே... இதுக்கும் செக்ஸுக்கும் என்னண்ணே சம்பந்தம்..."
"அட மடப்பயலே...! இப்பிடியெல்லாம் பண்ணினாத்தாண்டா, செக்ஸே நடக்கும். சரி. அந்த புக்க குடு நான் பாத்துட்டு தாரேன்... " என்று புத்தகத்தை புடிங்கிக் கொண்டு போய்விட்டான்.
டேய்... அனுபவம் இருக்குறவனுக்கு புக் எதுக்குடா?

அன்பர்கள், செக்ஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு இந்த இணைப்பை அணுகவும்...
நீங்கள் ஏற்கனவே டகுல பாண்டியின் முதலிரவில் நடந்தது என்ன? என்பதை பற்றி படித்திருப்பீர்கள். படிக்காதவர்கள் இங்கே போய் படிச்சுக்கலாம்.


திருமணத்திற்கு பின்பு... ரொம்ப நாள் கழிச்சு அவ அன்னிக்கு தான் சமையல் பண்ணினா. சரி இன்னிக்கு சமையல் நல்லாருக்குன்னு சொல்லி நைட்டுக்கு உஷார் படுத்தீரலாம் அப்படீன்னு நினைச்சுகிட்டே இருக்கும் போது அவளே சாப்பாடை பரிமாறினா.
"வட நல்லாருக்கு...." என்றேன் எந்த உணர்ச்சியையும் காட்டாமல்.
அவள் என்னை முறைத்தாள்.
"ஏன் " - என்றேன் திகைப்பாய்.
"இன்னிக்கு வடையே பண்ணல. அது பணியாரம். கொஞ்சம் இனிப்பு கம்மியா இருந்தா உடனே வடைன்னு சொல்லிருவீங்களா??"
சரி இன்னிக்கு கவித சொல்லி கரெக்ட் பண்ணிரலாம்னு கவிதைய யோசிச்சு கிட்டே இருக்கேன் ஒண்ணுமே வரல. முன்ன பின்ன கவித எழுதியிருந்தாவுல. சரி எங்கயாவது புத்தகத்துல படிச்சு காப்பி அடிச்சுடலாம்னு பார்த்த, படிக்குற பழக்கம் காலேஜ்ல இருந்து நமக்கு சுத்தமா கிடையாது. (அதுக்கு முன்னால மட்டும் இருந்தாதா என்ன..???)
இப்படியெல்லாம் யோசிச்சு கிட்டு (அட மக்கா யோசிக்கவெல்லாம் செய்ரியாடா ..) இருக்கும் போதே, அவ வந்தாள்.
"ஏங்க தல வலிக்குதுங்க... "
"தல வலி...
வலி தல ...
தலையில வலி
வலியில தல" - ரொம்ப சீரியசாக கவிதைக்கு முயன்று கொண்டிருந்தேன்.
என்னை எரித்து விடுவது போல் பார்த்தாள். ஏற்கனவே இருக்கும் தல வலியில், இந்த தல வலி(என் கவிதை தான்..!!?) வேறயா... ?? அப்படீன்னு நினச்சிருப்பாளோ...?


அவ கிச்சன்ல சமச்சுக்கிட்டு இருந்தா. அர டவுசர் டோமரு சொன்ன, கட்டிபுடி யோசனைய try பண்ணி பாக்கலாம்ன்னு போனேன். அவள கட்டி புடிக்குரதுங்குறது பெரிய காரியந்தான். அவ கொஞ்சம் (கொஞ்சமாடா?) குண்டுன்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன். ஒரு ஆல மரத்த கட்டிபுடிக்குற மாதிரி குத்து மதிப்பா புடிக்க வேண்டியதுதான்னு நெனைச்சு கிட்டு,
கைய விரிச்சுகிட்டு போனேனா... அப்ப பாத்து பக்கத்துல வேலைக்காரி நிக்குறா. சரி இருந்தாலும் பரவாயில்ல நம்ம பொண்டாட்டிய தானே கட்டி புடிக்க போறோம்ன்னு முன்னேறினேன்.
"ஐயோ...என்ன இது? " - என்று அவள் வெக்கப் பட்டுக்கொண்டே நெட்டி தள்ள நான் கிழே கிடந்தேன். மூக்காந்தண்டு உடைந்து ரத்தம் வந்து கொண்டு இருந்தது.
"அச்சச்சோ..." - பரிதாபப் பட்டாள்.புத்திசாலிகளுக்கு மட்டுமல்ல... ஆங்கிலம் தெரிந்த எல்லாருக்கும்.....

என் கல்லூரி நண்பர் செந்தில் நாதன், அவர் certification பண்ணியதையும், அவர் வீட்டில் திருடு போனதை பற்றியும் எழுதியுள்ளார். ஆங்கில அறிவுள்ள அன்பர்கள், கொடுக்கப் பட்டுள்ள இணைப்புகளில் போய் படித்துக் கொள்ளலாம்...

12 comments:

cable sankar said...

//"இன்னிக்கு வடையே பண்ணல. அது பணியாரம். கொஞ்சம் இனிப்பு கம்மியா இருந்தா உடனே வடைன்னு சொல்லிருவீங்களா??"//

நல்ல நகைச்சுவை..நவநீதன்.

குடுகுடுப்பை said...

நல்ல காமெடிதாங்க, அந்த கவுஜ எழுதுர ஐடியாவ எனக்கும் தள்ளுங்க

முரளிகண்ணன் said...

சுவராசியமா இருக்குங்க நவனீதன்

நவநீதன் said...

நன்றி கேபிள் சங்கர், குடுகுடுப்பை மற்றும் முரளி கண்ணன்....

நவநீதன் said...

// அந்த கவுஜ எழுதுர ஐடியாவ எனக்கும் தள்ளுங்க //
அதான் ஏற்கனவே கொடுத்தாச்சே....

ஜுர்கேன் க்ருகேர் said...

ஆஹா அஹ்கா ....பிரிச்சி மேஞ்சிட்டிங்க!
மிக உபயோகமான லிங்கை கொடுத்ததற்கு நன்றி:

நவநீதன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜுர்கேன்....

BALA said...

Nice one. :-)

நவநீதன் said...

நன்றி பாலா...!

ஆட்காட்டி said...

கவிதை நல்ல இருக்கு.

நவநீதன் said...

நன்றி ஆட்காட்டி அண்ணே...!

Bendz said...

Hi,

Wish u merry Xmas and Happy New Year 2009 ;) Advanced wishes ;)

Insurance Agent