Saturday, July 26, 2008

கவிதை 14

பிரிவு உபச்சார விழாவில்
ஆட்டோகிராப்
போட்டு
விடை பெற்றோம்!
மெலிதான
புன்னகையொடும்!
கனத்த
இதயத்தோடும்!

கலமென்னும்
சக்கரத்தில்
நம்மை நாமே
தொலைத்தோம்!

படித்துப் பெற்ற
பட்டத்தொடு
பெற்றோர் ஆசையாய்
கொடுத்த
தண்டச்சோறு
வெட்டிப்பயல்
போன்ற
பட்டங்களையும் பெற்று
கிடைத்த வேலையைக்
"கப்"பென்று
பிடித்துக் கொண்டேன்!

கண்ணாடியை
பார்க்கும்
போதுதான்
வயதானதே
உறைக்கிறது!
அந்த
அளவிற்கு
கடந்த கால
கல்லூரி நினைவுகள்
மனதை இளமையாய்
வைத்திருந்தன!

கடைத்தெருவில்
கால் கடுக்க
நடந்து
கொண்டிருந்த போது
சட்டென்று
திரும்பினேன்!
எங்கேயோ
பார்த்த
ஞாபகம்!

அருகில்
நெருங்கி
அவளிடம்
கேட்டேன்!
"என்னை
ஞாபகமிருக்கா..?"

"நீ...! நீ!
நவநீதன் தானே...!"
என்றள்
சற்றே தயக்கத்தோடு!

வழக்கமான
விசரிப்புகளுக்குப்
பின்
கணவனையும்
குழந்தைகளையும்
அறிமுகப்படுத்தினாள்!
புன்னகையுடன்
ஹலோ
சொன்னேன்!

வீட்டிற்கு
அழைத்து
விருந்து
படைக்க
எண்ணினாள்!
நாகரிகமாய்
நழுவினாலும்
காபிக்கு
ஒத்துக் கொண்டது
மனசு!

"இன்னிக்கு
வேலைக்காரி
லீவு!
காபி கூட
போடத் தெரியாது
அவளுக்கு"
என்றார்
அவள் கணவர்!

காபி
அமிர்தமாய்
இனித்தது!
அவள்
கை மணத்தாலா?
இல்லை
மனதால்!

No comments: