Saturday, July 26, 2008

கவிதை 35

ஒரு மாலை நேரம்!
கைக்குட்டையை
காதல் பரிசாக
அன்பு முத்தமிட்டு (கைக்குட்டைக்குத் தான்)
நீட்டினாள்
என்னவள்!

கைக்குட்டை
பரிசு தந்தால்
நட்பு நிலைக்காது
என்பதை
தயங்கித் தயங்கி
அவளிடம்
சொன்ன போது
பலத்து நகைத்து,
"அது ஃபிரண்ட்ஷிப்புக்குத்
தான்டா...
இது லவ்..." என்று
கையில் திணித்தாள்!

கைகுட்டை
நிராகரிக்கப் படலாம்!
அதில் தரப்பட்ட
முத்தம்..?
மறுபேச்சின்றி
வாங்கிக் கொண்டேன்!

மூன்று
மாதங்களுக்குப் பிறகு...
காலம்
என்னைக்
கடித்துத்
தின்று கொண்டிருந்தது!
கண்கள்
நிலை குத்தி
நின்றிருந்தன
அவளின்
திருமண அழைப்பிதழ்
மேலே...!

சட்டென்று
என் பார்வை
அவள்
பரிசாகத் தந்த
கைகுட்டை மேல்
விழுந்தது!
கண்ணீர்
கங்கை போல
பொங்கி
வழிந்தது!
என்
கண்ணீரை
கர்சிஃப்
எள்ளி
நகையாடியது!

பெண்ணின்
பின்னப்பட்ட
கூந்தலுக்கு
மணம் இருக்கலாம்!
அதோடு
அவிழ்க்கப்படத
பொய்களும்
இருக்கலாம்!

பெண்ணின்
கன்னங்கள்
ரோஜா இதழ்களைப்
போல
இருக்கலாம்!
அதனுள்
முட்களும்
இருக்கலாம்!

பெண்ணின்
குங்குமம்
மங்களகரமாக
இருக்கலாம்!
அதுவே
ஆபத்தின்
அறிகுறியாகவும்
இருகலாம்!

ஆகவே
இளைஞனே!
காதலிக்கும் முன்...
கொஞ்சம்
யோசித்துப் பார்!

காதல்
கண்களைப்
பார்த்துச்
செய்வது!
கல்யாணம்
பணத்தை மட்டுமே
பார்த்துச்
செய்யப்படுவது...!

என்றெல்லாம்
கிறுக்கிக் கொண்டே
எப்போது
உறங்கிப் போனேன்
என்பதே
தெரியவில்லை!

கலையில்
கண் விழித்த போது
எதிர் வீடுப் பெண்
தண்ணீர் குடம்
சுமந்து
ஜன்னலில்
புன்னகைத்தாள்!

முந்தய நாள்
எழுதிய கவிதை
காற்றில்
பறப்பதைக் கூட
அறியாமல்
அவளையே
பார்த்துக்
கொண்டிருந்தேன்!

No comments: