Monday, February 16, 2009

கூட்டாஞ்சோறு - 16/02/2009

நண்பர் அறிவுக்கரசு மெயிலில் அனுப்பிய படம்.....


படம் சரியா தெரியலேன்னா, கிளிக்கி பெரிசாக்கி பார்க்கவும்...

*********************

நண்பர் சத்யா எழுதிய கவிதைகள்....
ஒரு காலத்தில்
போரே வாழ்க்கை...!
இப்போதோ...
வாழ்க்கையே போர்...!
போர் குறைய
காரணம்....
அது விளையாட்டென்று
பெயர் மற்றப் பட்டிருக்கிறது...
கிரேக்க வீரர்களால்...!
அப்போது
மண்டைகள்
பந்துகளாக
உருண்டன....!
இப்போது
பந்துகள்
மண்டைகளாக
உருள்கின்றன...!

சத்யா, மதன் எழுதிய கி.மு. கி.பி.யை படித்துவிட்டு ஓவராக பீல் பண்ணீட்டார்ன்னு நினைக்கிறேன்...!
அவர் எழுதிய இன்னொரு கவிதை....

எச்சிலில் ஒரு தேசிய சிந்தனை...!
உங்கள் எச்சில் பழக்கம்,
தேசியக் கோடியில் உள்ள
சிவப்பின் அர்த்தத்தை
திரித்துக் கொண்டிருக்கிறது...!

அதான்...!ரூமுக்குள்ள அண்ணாந்து படுத்துக்கிட்டு யோசிக்ககூடதுங்கிறது...!

*********************

எங்க குரூப்ல டவுட் தனபால் அப்டீன்னு ஒருத்தர் இருக்கிறார்...
அவருக்கு வந்த சமீபத்துல வந்த சந்தேகம்...
"நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு"ன்னு ஏன் சொல்றாங்க..."நான் புடிச்ச பன்னிக்கு ஏன் மூணு காலு"ன்னு சொல்லல...
இதுக்கு வந்த பதில்கள்...
"ஆடு மேய்க்கிற பயலுக்கு இவ்வளவு அறிவான்னு பொறாமை... இத அப்படியே ஒரு கல்வெட்டுல செதுக்கி வச்சிட்டு நீயும் பக்கத்துல ஒக்காந்துக்க..."
"இத சொன்னவன் உன்ன பாக்கல... பாத்திருந்தா, உன்ன பிடிச்சிட்டு நான் புடிச்ச பன்னிக்கு ரெண்டு காலுன்னு சொல்லீருப்பான்..."

நம்ம பசங்களுக்கு என்னா ஒரு வில்லத்தனம்...!

*********************

நம்ம பசங்கள்ல கு.கு (குடிகார குப்பன்) ன்னு ஒருத்தன் இருக்கான்.
ஒரு பீர் அடிச்சிட்டு, குப்பைய குப்ப தொட்டில போடுறேன்னு சொல்லிட்டு, ஒரு நண்பர் மேல போட்டவன்...
இருநூத்தி இருபது ரூபா பில்லுக்கு நானூறு ரூபாய கொடுத்துட்டு மீதிய டிப்ச்சா வச்சுக்கோன்னு சொன்னவன்....
அவன பத்தி விரிவா இனி வரும் பதிவுகள்ள பார்ப்போம்...
ரெண்டு வாரத்துக்கு முன்னால கோயம்புத்தூருக்கு போயிருந்தோம்... அங்க நடந்த சுவாரசியாமான நிகழ்வுகளை மட்டும் இப்ப பார்ப்போம்...
கு.கு, நான் மற்றும் நண்பர்கள் சிலர் சரக்கடிக்க பாருக்கு போயிருந்தோம்...
சரக்கடிக்கும் போது, நண்பர் ஒருவர்ஒரு கவிதை சொன்னார்...
(ஒரு வேளை அவருக்கு ஏறிருக்குமோ...?!!)
உலகம் சுற்றுகிறது
என்கிற
உண்மை
இரண்டு பீருக்கு பின் தான்
தெரிகிறது...!
உடனே கு.கு. குஷியாகிட்டான்... நம்ம பிளாக்குல இருக்கிற கவிதைய அடிச்சு விட ஆரம்பிச்சிட்டான்... ஆனா என்ன ஒரு கருமாந்திரம்னா, அது யாருக்கும் புரியல...
அதுக்கு அப்புறம் கவிதைய சொன்னவரும், கு.கு.வும் ரொம்ப க்ளோஸ் பிரண்டு ஆகிட்டாங்க...!

இத்தோட பதிவ முடிச்சுக்கறேன்....! கு.கு. வை பத்தி இன்னொரு பதிவுல நிறைய....!

*********************

வழக்கம் போல பிடிச்சிருந்தா ஒட்டு போடுங்க...! பிடிக்கலேன்னா பின்னூட்டத்துல திட்டுங்க சாமியோவ்வ்..............!

Monday, February 9, 2009

நான் கடவுள் - என் பார்வையில் ...

முதலில் இந்த மாதிரி ஒரு கதையை எடுக்க நினைத்ததற்காகவே பாலாவை பாராட்டலாம்... ஆரம்ப காட்சிகளிலேயே காசியும், அங்கு நடக்கும் விசயங்களையும் பக்காவாக கண்முன் நிறுத்தி, நிமிர்ந்து உக்கார வைத்து விடுகிறார். வசனங்கள் கொஞ்சமே என்றாலும் நிறைவாய் இருக்கிறது...! வில்லன் பாத்திர படைப்பு எந்த அளவுக்கு நடை முறையில் சாத்தியம் என்று பாலா தான் விளக்க வேண்டும். மூட நம்பிக்கையோட இருக்கும் ஒவ்வொரு மனிதனையும் உண்மை நிலையை கொஞ்சம் கூட வேறுபாடில்லாமல் காட்டி, அனாயசமாக கேள்வி கேட்கிறது....! இப்படிப்பட்ட கஞ்சா அடிக்கிற ஒரு சாமியாரைத் தான் நாம் தருமம் என்ற பெயரில் காசிக்கு போய் பிச்சையிட்டு விட்டு வருகிறோம். பிணம் தின்னும், தன்னையே கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் எதோ ஒருவரை காசிக்கு போயிருந்தால் வணங்கி விட்டு வந்திருப்போம். ஆர்யாவை மற்ற கதா பாத்திரங்கள் எல்லாமே பெரிய சாமி என்று சொல்கிறது... உண்மையில் நாமும் இப்படித்தான் நடந்து கொள்கிறோம்... நான் எல்லா சாமியார்களையும் குறை சொல்ல வில்லை. ஆனால் காசி முழுவதும் கஞ்சா அடிக்கும் சாமிகள் தான் அதிகம்.... அவர்களை வணங்கும் மூடர்களும் அதிகம். முருகன் கதாப் பாத்திரத்தை, ஒவ்வொரு கடவுளும்/வேடத்திலிருக்கும் பிச்சைக்காரகள் கேட்கும் கேள்விகள்/வசனங்கள் ஒவ்வொன்றும் பளிச்சிடுகின்றன... ! அந்த குட்டி பையன் கலக்கியிருக்கிறான்.... கவிஞர் விக்ரமாதித்தன் கடவுளை தேவிடியா பய என்று சொல்லும் போது, அந்த பாத்திரத்தின் மன நிலையையே பிரதிபலிக்கிறார்... பல இடங்களில் நம்மை யோசிக்க வைக்கும் நகைச்சுவை, இழையோடுகிறது.... படத்தில் வரும் பழைய பாடல்களும் நச். அந்த பழைய பாடல் தெரிவிலும் நெஞ்சில் நிற்கிறார். பூஜாவிற்கு மொத்தமே மூன்று உடைகள் தான் படத்தில். ஆனால், அவர் முகத்தில் அழகழகான உணர்ச்சி மாற்றங்கள்...! தமிழ் சினிமா படங்களில் காதாநாயகன் வரும் காட்சிகள் தான் அதிகம் இருக்கும். அனால், இந்த படத்தில் அர்யாவோ கெஸ்ட் ரோலில் வருவது போல் வந்துவிட்டு போகிறார். ஆனால் வரும் காட்சிகளில் மனுஷன் பின்னி எடுத்திருக்கிறார்.... இந்த கதையில், இமேஜை நம்பும் அஜித்தை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.... என்னுடைய நண்பர் இன்னும் கொடூரமாக இருக்கும் என்று எதிர்பார்த்து வந்தேன் என்றார் (பாலா மேல அவ்வளவு நம்பிக்கை??). படம் திரையில் ரெண்டே கால் மணி நேரம் தான் ஓடுகிறது.... ஆர்யா, பூஜாவை கடித்து தின்னும் காட்சிகளை எடுத்ததாகவும், சென்சாரில் அது பறிபோய் விட்டதாகவும் என் நண்பன் சொன்னான்....! படத்திற்காக மூன்று கிளைமாக்ஸ் காட்சிகளை எடுத்ததாகவும் பத்திரிகைகளில் படித்தேன்....! படத்தில் குறைகள் சில இருந்தாலும், நிறைகள் மிக அதிகம்....! நான் கடவுள்....! கடவுளுக்கு மிக அருகில்.....!