செலவுக்கு
நூறு ரூபாய்
கொடுத்தால்
மாலையில்
அதை
அப்படியே
திருப்பிக்
கொடுப்பாய்!
அவ்வளவு
சிக்கனம்!
ஆனால்
அன்பு
செலுத்துவதில் மட்டும்
நீ செலவாளி!
திருமணத்திற்கு முன்
எனக்கு
எப்போதும்
பிடித்த
வெங்காய தோசை
இப்போது ஏனோ
பிடிப்பதில்லை!
உன் கண்களை
கஷ்டபடுத்தும்
வெங்காயத்தை
பிடிக்கவில்லை என்று
ஒதுக்கினேன்!
நீயும்
ஒதுங்கிவிட்டாய்
அதைச்
சமைப்பதிலிருந்து!
உன்னை
முத்தமிடும் போது
மீசை குத்துவதாக
செல்லமாய்
சிணுங்கினாய்!
மறுநாளே
மழித்து விட்டேன்
மீசையை!
அன்றிலிருந்து
இன்று வரை
மீசையே
வைப்பதில்லை
நான்!
"திருமண நாள்
பரிசாக
என்ன வேண்டும்?"
என்று கேட்டேன்.
பட்டுப் புடவை,
தங்கத் தோடு,
வைர நெக்லஸ்
இதில் ஏதாவது
ஒன்றை
எதிர்பார்த்திருந்த
எனக்கு
இன்ப அதிர்ச்சி!
என்னையே
கேட்டாய்!
எடுத்துக்கொள்
என்றேன்!
தழுவிக்
கொண்டாய்!
நீ
கேட்டு
எதையுமே
மறுத்ததில்லை
நான்!
எதையுமே
கேட்டதில்லை
நீ!
கடேசியாய்
ஒன்று
கேட்டாய்!
அதைக்
கொடுப்பதற்க்குத் தான்
மனமில்லை!
என் உயிரைக்
கேட்டிருந்தால் கூட
கொடுத்திருப்பேன்!
ஆனால்
நீ கேட்டது
விவாகரத்து!
சந்தேகம்
உன்னில்
முளைத்ததில்
சந்தோசம்
போனது
நம்மை விட்டு!
No comments:
Post a Comment