Saturday, July 26, 2008

கவிதை 16

இரண்டு வருடமாய்
ஏற்படாத உணர்வு
அன்று
எனக்குள்ளே!
மின்சாரம்
பாய்ச்சியதைப்
போல!

காதலென்று
உறுதி செய்தான்
நண்பன்
மாலையில்!

முதல்
காதலா?
இல்லை!
முப்பதாவது
காதல்! (உண்மையாவா???)


அதற்க்குப் பிறகு
கற்பனையிலேயே
காலத்தைக்
கடத்தினேன்!
காற்றிலே
உன் பெயரை
எழுதி எழுதிக்
கரைந்து போனேன்!

நிலவுக்கு
வெள்ளையடித்துப்
பார்த்தால்
நிச்சயம்
தெரியும்
உன் முகம்!
என்றெல்லாம்
கவிதையாய்
கிறுக்கியிருக்கிறேன்
நடு இரவில்!

ஒரு நாள்
பேய் மழை
பெய்து
கொண்டிருந்தது!
தொப்பல்
தொப்பலாக
நனைந்தேன்!
மழையிலா?
உன்
பார்வையில்தான்! (ஹி...!ஹி!)

அன்று இரவு
உறக்கம்
வரவில்லை!
ஆனால்
கனவு வந்தது!

என்னை
முத்தமிட்டிருக்கிறாய்!
அவ்வளவுதான்!
அதற்கு மேல்
எல்லை
தாண்டியதில்லை
நான்!
கனவில் கூட!

நீ
யாருடனாவது
சிரித்து
பேசும் போது
வயிறு எரியும்!
பீர் விட்டு
அணைத்து
விடுவேன்!

ஒவ்வொரு
நாளும்
உன்னிடம்
பேச எண்ணி
தோற்று
திரும்புவேன்!

விண் எரிகல்
மண்ணை
முத்தமிடுவதற்குள்
சம்பலாகி
உதிர்வதைப்
போல
என் காதலும்
உதிர்ந்தது!
நீ
திருமண
அழைப்பிதழை
நீட்டியவுடன்!

தண்ணியடித்து
தாடி
வளர்தேன்!
அடுத்த காதலி
கிடைக்கும் வரை!

No comments: