Saturday, July 26, 2008

தொலைந்து போன கேள்விகள்

கல்லூரியில்
கண்ணுக்கழகான
பெண்கள்
பலர்
இருந்தும்
என் கண்களுக்கு
நீ
அழகாகத்
தெரிந்தது ஏன்?

உன்னை
பார்த்தவுடன்
இதயம்
படபடப்பது ஏன்?

கடந்து போன
நீ
திரும்பிப்
பார்தது ஏன்?
திரும்பிப் பார்த்தும்
புன்னகைக்காதது
ஏன்?

நீ மழையில்
நனைந்த போது
நானும்
நனைந்தது ஏன்?
கையில்
குடையிருந்தும்!

நடுநிசியில்
உன்னை
நினைத்துக்
கவிதை
எழுதியது ஏன்?

தனிமையில்
கிடைத்த
வாய்ப்புகள்
யாவையும்
நழுவ விட்டது ஏன்?

காதலைச்
சொல்லும்
கவிதைகள்
பல இருந்தும்
அதை
உன் கையில்
கொடுக்கும்
தைரியம்
என்னிடம்
ஏன் இல்லை?

தயக்கதிலும்
உன்
அண்ணனின்
முரட்டுப் பார்வையிலும்
தொலைந்து போன
கேள்விகள்!

கடைசியில்
"தைரியம்
இல்லாதவனுக்கு
காதல்
எதற்கு?"
என்ற
நண்பனின்
கேள்விக்குக் கூட
பதில் இல்லை
என்னிடம்..!

கவிதை 41

ஜன்னல்
வைத்து
முதுகைக்
காட்டினாள்!
ஆனால்,
ஏனோ ...
இதயத்தை
மறைத்து விட்டள்!

கவிதை 40

அன்பே!
இனிமேல்
குளிர் கண்ணாடி
அணியாதே..!
ஏனென்றால்
குளிர் கண்ணாடியை
குளிர் சாதன பெட்டியில்
வைக்கத்
தேவையில்லை...!

கவிதை 39

கம்பன் வீட்டில்
கட்டுத் தறிதான்
கவி பாடும்!
ஆனால்
நீ
பயன்படுத்திய
சோப்பு,
முகம் பார்க்கும்
கண்ணாடி,
உன்
பாதங்கள்
சுமக்கும்
காலணி,
உனக்காகவே
பூப்படையும்
ரோஜா செடி,
உன் ஒற்றைப்
புன்னகை
என
ஒவ்வொன்றுமே
கவிதையாகிறதே
என் மனதில்!

கவிதை 38

மனவசியக்கலை (ஹிப்னாட்டிசம்)
பயின்ற
மன நல மருத்துவன்
நான்!
என்னையே
மன வசியம்
பண்ணி விட்டாயே...
நீ...!

நான் ஏன் புகைக்கிறேன்...?

உன்னை
மறப்பதற்காக்ப்
புகைக்க வில்லை!
உன்னை
நினைப்பதற்க்காக..!

என்றோ
நீ
சொன்னாய்!
புகை பழக்கத்தை
தூக்கி எரியச் சொல்லி!
அன்றே
துறந்தேன்
அதை!
என்னையே
தூக்கி எறிந்தாய்!
அதன் பின் தான்
எடுத்தேன்
இந்த புகைச் சுருளை!


நான்
உள்ளே
இழுப்பது
புகையை அல்ல!
உன் மூக்கை
மூக்கால்
உரசும் போது
என் மேலுதட்டில்
முட்டும்
உன்
உஷ்ணக் காற்றை!

நான்
வெளியே
விடுவதும்
புகையை அல்ல!
என் ஆவியை..!

புகை
உடல் உறுதிக்கு
கேடு!
சிகரெட் பாக்கெட்
சொன்னது!
ஆனால்
உன் நினைவுகளுக்கல்ல!
இது நான்
சொல்வது!

"தம்மடித்தால்
நுரையிரல்
கெட்டுப் போகும்"
டாக்டர் சொன்னார்!
உன்னைக்
காதலித்த பின்
என் இதயமே
கெட்டுப் போய் விட்டதே!
பின்
நுரையிரல் மட்டும்
இருந்து
என்ன பயன்?

ஒரு நாள்,
புகைக் கூட்டங்களுக்கு
நடுவே
திரைப்பட
கனவுக் காட்சியில்
காதலன் காதலியாக
நம்மை
நினைத்துக்
கொள்ளுவேன்!

சில நாட்களில்
ஏன் நீ
என்னை
ஏமாற்றினாய்?
ஏன் நீ
என்னை
உண்மையாக
காதலிக்கவில்லை?
எப்படி
உன்னால்
அவனோடு
சந்தோஷமாக
வாழ முடிகிறது?
இது போன்ற
விடை தெரியாத
கேள்விகளுடன்
அடுத்த தம்மை
ப்ற்ற வைத்துக்
கொள்கிறேன்!

கவிதை 36

உன் கண்களில்
ஆரம்பித்து
இதயம்,
இமைகள்,
இடை,
இதழ்கள்,
கூந்தல்
என்று
ஒவ்வொன்றாய்
வர்ணித்து
கவிதை பாடிய பின்
மனமுவந்து (மனமிரங்கி??)
"உன்
ஹேர் ஸ்டைல்
கூடத்தான்
அழகாயிருக்கு"
என்று
ரொம்பச்
சாதாரணமாகத் தான்
நீ
சொன்னாய்!

அன்றிலிருந்து
என்
சிகை அலங்காரத்தை
மாற்றவே
இல்லை
நான்..!

நான்
ஒவ்வொரு முறை
தலை முடியைச்
சரி செய்யும்
போதும்
என்
கண் முன்
தோன்றி
ஒரு மெலிதான
புன்னகை
பூத்து.
"உன்
ஹேர் ஸ்டைல்
நல்லாயிருக்கு"
என்று
சொல்லி
மறைவாய்!

அந்த
தருணத்திற்காகவே
அடிக்கடி
தலை வாரியதில்
முன் மண்டையில்
சின்னதாய்
வழுக்கை விழ
ஆரம்பித்திருந்தது!

ஆனால்
நீயோ
கரு கருவென
தலைமுடியுடன்
கூடிய
ஒருவனுடன்
சிரித்துக் கொண்டிருக்கிறாய்
உன்
கல்யாணப் பத்திரிக்கையில்!

கவிதை 35

ஒரு மாலை நேரம்!
கைக்குட்டையை
காதல் பரிசாக
அன்பு முத்தமிட்டு (கைக்குட்டைக்குத் தான்)
நீட்டினாள்
என்னவள்!

கைக்குட்டை
பரிசு தந்தால்
நட்பு நிலைக்காது
என்பதை
தயங்கித் தயங்கி
அவளிடம்
சொன்ன போது
பலத்து நகைத்து,
"அது ஃபிரண்ட்ஷிப்புக்குத்
தான்டா...
இது லவ்..." என்று
கையில் திணித்தாள்!

கைகுட்டை
நிராகரிக்கப் படலாம்!
அதில் தரப்பட்ட
முத்தம்..?
மறுபேச்சின்றி
வாங்கிக் கொண்டேன்!

மூன்று
மாதங்களுக்குப் பிறகு...
காலம்
என்னைக்
கடித்துத்
தின்று கொண்டிருந்தது!
கண்கள்
நிலை குத்தி
நின்றிருந்தன
அவளின்
திருமண அழைப்பிதழ்
மேலே...!

சட்டென்று
என் பார்வை
அவள்
பரிசாகத் தந்த
கைகுட்டை மேல்
விழுந்தது!
கண்ணீர்
கங்கை போல
பொங்கி
வழிந்தது!
என்
கண்ணீரை
கர்சிஃப்
எள்ளி
நகையாடியது!

பெண்ணின்
பின்னப்பட்ட
கூந்தலுக்கு
மணம் இருக்கலாம்!
அதோடு
அவிழ்க்கப்படத
பொய்களும்
இருக்கலாம்!

பெண்ணின்
கன்னங்கள்
ரோஜா இதழ்களைப்
போல
இருக்கலாம்!
அதனுள்
முட்களும்
இருக்கலாம்!

பெண்ணின்
குங்குமம்
மங்களகரமாக
இருக்கலாம்!
அதுவே
ஆபத்தின்
அறிகுறியாகவும்
இருகலாம்!

ஆகவே
இளைஞனே!
காதலிக்கும் முன்...
கொஞ்சம்
யோசித்துப் பார்!

காதல்
கண்களைப்
பார்த்துச்
செய்வது!
கல்யாணம்
பணத்தை மட்டுமே
பார்த்துச்
செய்யப்படுவது...!

என்றெல்லாம்
கிறுக்கிக் கொண்டே
எப்போது
உறங்கிப் போனேன்
என்பதே
தெரியவில்லை!

கலையில்
கண் விழித்த போது
எதிர் வீடுப் பெண்
தண்ணீர் குடம்
சுமந்து
ஜன்னலில்
புன்னகைத்தாள்!

முந்தய நாள்
எழுதிய கவிதை
காற்றில்
பறப்பதைக் கூட
அறியாமல்
அவளையே
பார்த்துக்
கொண்டிருந்தேன்!

கவிதை 34

நீ
பிறந்தவுடன்
அழுத போது,
வழிந்த கண்ணீர்த் துளிகள்
கீழே தானே
விழுந்திருக்க வேண்டும்!
எப்படி வானத்தில்
விண்மீன்களாய்
மின்னுகின்றன?

கவிதை 33

என்னவளே!
உன் இடை
மெல்லியதுதான்! (ஐஸ் ..?)
ஆனாலும்
அதை நான்
கொடியிடை என்று
சொல்ல வேண்டுமென்றால்
கொடி போல்
என் மேல்
படர்!

சுனாமி

கடல் அன்னையே!
புண்ணிய நதிகள் பல
உன்னிடம்
பரிணமித்தும்
நீ இன்னும்
புனிதமாக வில்லையா?
ஏன்
ஏழை மக்களின்
வயிற்றில் அடித்து
பாவத்தை
சம்பாதித்துக் கொள்கிறாய்?

கடவுளே!
உறவுகளையும்,
உடைமைகளையும்
இழந்து
அழும்
இவர்களுக்கு
ஆறுதல் சொல்ல
என்னிடம்
ஒரு வார்த்தை கூட
இல்லை!
உலக மொழிகளை
ஆரய்ந்து
ஏதாவது
ஒரு வார்த்தை
இருந்தாலாவது
சொல்!
சிலராவது
ஆறுதலடையட்டும்!

பகவானே!
பெற்றொரை
இழந்து
பசியால் அழும்
ஏழைக் குழந்தையிடம்
"இந்த மாற்றங்கள்
உலக நியதி"
என்று
தத்துவம்
பேசிக் கொண்டிருக்கிறாய்!
இது தகுமா?

இறுதியாக,
சுனாமி!
பத்திரிக்கைகளுக்கு
பரபரப்பு!
அரசியல்வாதிகளுக்கு
அரசியல்!
மக்களுக்கு
அனுதாபம்!
ஆனால்
பாதிக்கப்பட்டவர்க்களின்
எதிர்காலம் மட்டும்
அந்தோ... பரிதாபம்

கவிதை 31

பொக்கே ஷாப்
வைத்திருக்கிறேன்!
முகூர்த்த நாள்!
என் கடைப்
பிள்ளையாருக்கு
படைப்பதற்க்கு கூட
மலர்கள் இல்லை!
அனால்
ஒற்றை ரோஜாப்பூ
அவளுக்காக
காத்திருக்கிறது!

கவிதை 30

செலவுக்கு
நூறு ரூபாய்
கொடுத்தால்
மாலையில்
அதை
அப்படியே
திருப்பிக்
கொடுப்பாய்!
அவ்வளவு
சிக்கனம்!
ஆனால்
அன்பு
செலுத்துவதில் மட்டும்
நீ செலவாளி!


திருமணத்திற்கு முன்
எனக்கு
எப்போதும்
பிடித்த
வெங்காய தோசை
இப்போது ஏனோ
பிடிப்பதில்லை!
உன் கண்களை
கஷ்டபடுத்தும்
வெங்காயத்தை
பிடிக்கவில்லை என்று
ஒதுக்கினேன்!
நீயும்
ஒதுங்கிவிட்டாய்
அதைச்
சமைப்பதிலிருந்து!

உன்னை
முத்தமிடும் போது
மீசை குத்துவதாக
செல்லமாய்
சிணுங்கினாய்!
மறுநாளே
மழித்து விட்டேன்
மீசையை!
அன்றிலிருந்து
இன்று வரை
மீசையே
வைப்பதில்லை
நான்!

"திருமண நாள்
பரிசாக
என்ன வேண்டும்?"
என்று கேட்டேன்.
பட்டுப் புடவை,
தங்கத் தோடு,
வைர நெக்லஸ்
இதில் ஏதாவது
ஒன்றை
எதிர்பார்த்திருந்த
எனக்கு
இன்ப அதிர்ச்சி!
என்னையே
கேட்டாய்!
எடுத்துக்கொள்
என்றேன்!
தழுவிக்
கொண்டாய்!

நீ
கேட்டு
எதையுமே
மறுத்ததில்லை
நான்!
எதையுமே
கேட்டதில்லை
நீ!

கடேசியாய்
ஒன்று
கேட்டாய்!
அதைக்
கொடுப்பதற்க்குத் தான்
மனமில்லை!
என் உயிரைக்
கேட்டிருந்தால் கூட
கொடுத்திருப்பேன்!
ஆனால்
நீ கேட்டது
விவாகரத்து!

சந்தேகம்
உன்னில்
முளைத்ததில்
சந்தோசம்
போனது
நம்மை விட்டு!

கவிதை 29

அவளுடன்
ஒரே அறையில்
தேர்வெழுத
வாய்ப்புக் கிடைத்தது!

திடீரென
எழுந்து
பேனா
இல்லை
என்றாள்!

"பேனா
இல்லாம
நீயெல்லாம்
எதுக்கு
எக்ஸாம்
எழுத வர்ற..."
கடுகடுத்தார்
கண்காணிப்பாளர்!


எழுந்து
பேனாவை
நீட்டினேன்
அவளிடம்!
கொடுத்தது
நான் என்பதாலோ
என்னவோ
கொஞ்சம்
தயக்கம்
காட்டினாள்!
பின்பு
வேறு வழியில்லாமல்
வாங்கிக் கோண்டாள்!

தேர்வெழுத
முடியவில்லை
என்னால்!
அவளின்
ஒவ்வொரு
அசைவையும்
அருகிலிருந்து
ரசித்தது
என் மனம்!

படித்ததையெல்லாம்
முத்து முத்தாக
வெள்ளைத்தாளில்
கொட்டினாள்!
சில சமயம்
யோசிப்பதாக
பேனா நுனியைக்
கடித்தாள்!

பேனாவைத்
திரும்பக் கொடுத்து
அவள்
நன்றி சொன்ன போது
என் மனதில்
வண்ணத்துப் பூச்சிகளின்
அணிவகுப்பு!

அந்தப் பேனாவை
நான்
எப்போதும்
பயன்படுத்துவதில்லை!
ஆனால்
எப்போதாவது
பயன்படுத்துவதுண்டு!
இது போன்ற
கவிதை
எழுதும் போது
மட்டும்!!

கவிதை 28

அன்பே!
என் இதயம் கூட
வலம்புரிச்
சங்கு தான்!
எப்போதும்
உன் பெயரையே
உச்சரித்துக்
கொண்டிருப்பதால்!

நான் கூட
ஃபீனிக்ஸ்
பறவை தான்!
உன் பார்வைகளில்
ம்ரணித்து
உன் புன்னகைகளில்
உயிர்த் தெழுவதால்!

நீ கூட
கலைமான் தான்!
மானின்
மருட்சியோடு
கண்களால்
காதல் கலையை
எனக்கு
கற்பிப்பதால்!

காதல் பாடம்

வாத்தியாரின்
வாய்ச் சொற்க்கள் கூட
புரிவதில்லை!
ஆனால்
உன்
விழிகளின்
மொழிகள் மட்டும்
புரிகிறதே...!
தேர்வில்
தோற்றேன்!
ஒரு வேளை
நீ
சொல்லிக்
கொடுத்திருந்தால்
பாஸ்
பண்ணியிருப்பேனோ...
என்னவோ?

கவிதை 26

நாம்
காதலிக்கும் போது
உன் இதயத்தை
என்னிடம்
கொடுத்து
விட்டதாகச்
சொன்னாய்!
அதனால் தானோ?
இதயமே
இல்லாமல்
வேறொருவனைத்
திருமணம்
செய்து கொண்டாய்!

ஞாபகமிருக்கிறதா?

நண்பா!
சிறு வயதில்
அப்பா-அம்மா
விளையாட்டு
விளையாடுகையில்
எப்போதும்
அம்மாவாய்
அவள்!
அப்பாவுக்காய்
சண்டை வருமே
நமக்குள்!
அது ஞாபகமிருக்கிறதா?

மகாபலிபுரம் டூரில்
அவளுக்காக
ஆளுக்கொரு
மணல் கோட்டை
கட்டினோமே!
அதுவும் ஞாபகமிருக்கிறதா?

அவளுக்கு
கணக்குச் சொல்லித்
தருவதற்காகவே
கணக்குப் பாடத்தை
போட்டி போட்டுப்
படிப்போமே!
ஞாபகமிருக்கிறதா?

ஒன்பதாம் வகுப்பில்
அவளை
ஃபெயிலாக்கிய
வாத்தியாரின்
சைக்கிளை
மாறி மாறி
பங்சராக்கிய
ஞாபகமிருக்கிறதா?

ஒன்பதாம் வகுப்பு
ஏன்டா
பாஸானோம்
என்று
அடிக்கடி
அங்கலய்த்துக்
கொள்வோமே...
ஞாபகமிருக்கிறதா?

அப்பா-அம்மா
விளையட்டில் கூட
அவ்வப்போது
விட்டுக் கொடுத்துக்
கொள்ளும்
நமக்கு
பத்தாம் வகுப்பு
படிக்கையில்
அவளை
விட்டுக் கொடுக்க
மனசில்லை!

அதனால் தானோ?
இப்போது
அவளை
வேறொருவன்
கொத்திக் கொண்டு
போய்விட்டான்!

கவிதை 24

அமாவாசை
இருட்டில்
அவள்
விழிகளைச்
சந்திதேன்!
பின்பு
அவளிடம்
சொன்னேன்!
அன்பே!
இமைக்காதே...
உன்
விழிகளின்
வெளிச்சத்திலாவது
தொலைந்த
என்
இதயத்தைத்
தேடிக் கொள்கிறேன்!

கவிதை 23

ஆடிக்காற்றில்
அசையும்
உன் நூலிடை
அறுந்து விடக்
கூடாதென்று தான்
உன் இடையைப்
பற்றினேன்!
இதற்குப் போய்
கோவித்துக்
கொள்கிறாயே?

ஏமாற்றம்

உன் குரலோசையைக்
குயிலோசை என்று
எண்ணிச்
சிறகடித்து வந்த
ஆண் குயில்
ஏமாந்தது!

நானும் தான்
ஏமாந்தேன்!
உன் கடைக்கண்
பார்வையைக்
காதலென்று நம்பி!

கவிதை 21

அன்று
லாரியில்
மரங்களை (வெட்டி)
ஏற்றியதால்தான்
இன்று
தண்ணீரையும்
அதே லாரியில்
ஏற்றிக் கோண்டிருக்கிறோம் ..!

ரயில் பயண்ங்களில்

ஜெனரல்
கம்பார்ட்மெண்டின்
இரைச்சலான
சூழல்!

நிற்கும்
என்னை
பின்னிருப்பவன்
மிதிப்பதால்
ஏற்பட்ட
வேதனை!

பால்
இல்லாமல்
கதறி அழும்
சிறு குழந்தை!

அதைக்
கொஞ்சம் கூட
சட்டை செய்யாமல்
தூங்கும்
ஆண்கள்!

சாப்பிடுகிறீர்களா என்று
சம்பிரதாயத்துக்குக் கூட
கேட்காமல்
சப்பத்தியை
விழுங்கும்
சுயநலவாதி!

ஜன்னலில்
எப்போதாவது
தென்படும்
பரட்டைத் தலை
சிறுமியின்
கையசைப்பு!

என் முதுகின் மேல்
தன் முதுகைச்
சாய்க்கும்
குண்டு பெண்மணியின்
எடை!

இதையல்லாம்
தாண்டியும்
உன் ஞாபகம்
வருகிறதே!
இரவென்பதாலா..?

ரசனை

தெருவில்
பள்ளஙளில்
தேங்கியிருந்த
தண்ணீரால்
என்னவள்
பாவாடை
தூக்கி
காலழகு
காட்டினாள்!

டிசம்பர் மாத
மழைக்கும்
பள்ளத்திற்க்கும்
என் வீட்டு
ஜன்னலுக்கும்
நன்றி!

"ஜல்.. ஜல்.." என்ற
கொலுசுச் சத்ததில்
பூமி அதிர்ந்தது!
என்
மனதும் தான்!

அழகிய
வேலைப்படுக்கள்
கொண்ட
புதிய காலணி!
ஏனொ
அதை மட்டும்
ரசிக்க முடியவில்லை!

நேற்று
அவள்
அதே செருப்பைத்
காட்டி
"அடி வாங்குவே!"
என்று
சொன்னதாலோ!

நினைவுச் சின்னம்

என்னவள்
ஒற்றை மலரைக்
கிள்ளி
அழகாய் நுகர்ந்து
மணத்தில் லயித்து
தரையில்
வீசி விட்டு
சென்று விட்டாள்!

அம்மலரை
அள்ளி
அதனை
நுகர்தேன்!
அவள்
நுகர்ததாலோ
என்னவோ
மணம் கமழ்ந்தது!
ஒருவேளை
இதுதான்
அவள் வாசமோ?

அந்த
பொக்கிஷத்தை
பத்திரப்படுத்திக்
கொண்டேன்
அவளின்
ஞாபகார்த்தமாய்!

கவிதை 17

அட!
பூவுக்குள்ளே
பூ!
பூ போட்ட
சேலைக்குள்ளே
அவள்!

கவிதை 16

இரண்டு வருடமாய்
ஏற்படாத உணர்வு
அன்று
எனக்குள்ளே!
மின்சாரம்
பாய்ச்சியதைப்
போல!

காதலென்று
உறுதி செய்தான்
நண்பன்
மாலையில்!

முதல்
காதலா?
இல்லை!
முப்பதாவது
காதல்! (உண்மையாவா???)


அதற்க்குப் பிறகு
கற்பனையிலேயே
காலத்தைக்
கடத்தினேன்!
காற்றிலே
உன் பெயரை
எழுதி எழுதிக்
கரைந்து போனேன்!

நிலவுக்கு
வெள்ளையடித்துப்
பார்த்தால்
நிச்சயம்
தெரியும்
உன் முகம்!
என்றெல்லாம்
கவிதையாய்
கிறுக்கியிருக்கிறேன்
நடு இரவில்!

ஒரு நாள்
பேய் மழை
பெய்து
கொண்டிருந்தது!
தொப்பல்
தொப்பலாக
நனைந்தேன்!
மழையிலா?
உன்
பார்வையில்தான்! (ஹி...!ஹி!)

அன்று இரவு
உறக்கம்
வரவில்லை!
ஆனால்
கனவு வந்தது!

என்னை
முத்தமிட்டிருக்கிறாய்!
அவ்வளவுதான்!
அதற்கு மேல்
எல்லை
தாண்டியதில்லை
நான்!
கனவில் கூட!

நீ
யாருடனாவது
சிரித்து
பேசும் போது
வயிறு எரியும்!
பீர் விட்டு
அணைத்து
விடுவேன்!

ஒவ்வொரு
நாளும்
உன்னிடம்
பேச எண்ணி
தோற்று
திரும்புவேன்!

விண் எரிகல்
மண்ணை
முத்தமிடுவதற்குள்
சம்பலாகி
உதிர்வதைப்
போல
என் காதலும்
உதிர்ந்தது!
நீ
திருமண
அழைப்பிதழை
நீட்டியவுடன்!

தண்ணியடித்து
தாடி
வளர்தேன்!
அடுத்த காதலி
கிடைக்கும் வரை!

கவிதை 15

இந்த
உலகத்தில்
எதுவுமே
நிலையானது
இல்லை
என்று
புரிந்து கொண்டேன்!

இனிமேல்
தண்ணியடிக்கக் கூடாது
என்ற
புதுவருடக் கொள்கையை
நண்பனின்
பிறந்தநாள் பார்ட்டியில்
உடைத்த போது...!

உண்மையே
பேசுவேன் என்று
உறுதி பூண்டிருந்த வேளையில்
என் மனைவியிடம்
"நீ
அழகாய்
இருக்கிறாய்!"
என்ற போது!

என்னவள்
கொடுத்த
முத்தத்தின்
ஈரம்
காய்ந்த போது!

முப்பதாவது
முறையாக
காதலில்
தோற்ற போது!

என்
தாயின்
மரணத்தில்
அழுத போது!

என் வீட்டு
கண்ணடியில்
நரைமுடியைப்
பார்த்தபோது!

கவிதை 14

பிரிவு உபச்சார விழாவில்
ஆட்டோகிராப்
போட்டு
விடை பெற்றோம்!
மெலிதான
புன்னகையொடும்!
கனத்த
இதயத்தோடும்!

கலமென்னும்
சக்கரத்தில்
நம்மை நாமே
தொலைத்தோம்!

படித்துப் பெற்ற
பட்டத்தொடு
பெற்றோர் ஆசையாய்
கொடுத்த
தண்டச்சோறு
வெட்டிப்பயல்
போன்ற
பட்டங்களையும் பெற்று
கிடைத்த வேலையைக்
"கப்"பென்று
பிடித்துக் கொண்டேன்!

கண்ணாடியை
பார்க்கும்
போதுதான்
வயதானதே
உறைக்கிறது!
அந்த
அளவிற்கு
கடந்த கால
கல்லூரி நினைவுகள்
மனதை இளமையாய்
வைத்திருந்தன!

கடைத்தெருவில்
கால் கடுக்க
நடந்து
கொண்டிருந்த போது
சட்டென்று
திரும்பினேன்!
எங்கேயோ
பார்த்த
ஞாபகம்!

அருகில்
நெருங்கி
அவளிடம்
கேட்டேன்!
"என்னை
ஞாபகமிருக்கா..?"

"நீ...! நீ!
நவநீதன் தானே...!"
என்றள்
சற்றே தயக்கத்தோடு!

வழக்கமான
விசரிப்புகளுக்குப்
பின்
கணவனையும்
குழந்தைகளையும்
அறிமுகப்படுத்தினாள்!
புன்னகையுடன்
ஹலோ
சொன்னேன்!

வீட்டிற்கு
அழைத்து
விருந்து
படைக்க
எண்ணினாள்!
நாகரிகமாய்
நழுவினாலும்
காபிக்கு
ஒத்துக் கொண்டது
மனசு!

"இன்னிக்கு
வேலைக்காரி
லீவு!
காபி கூட
போடத் தெரியாது
அவளுக்கு"
என்றார்
அவள் கணவர்!

காபி
அமிர்தமாய்
இனித்தது!
அவள்
கை மணத்தாலா?
இல்லை
மனதால்!

புரியாத புதிர்

மார்கழி மாதம்
மனம் குளிரும்படி
குளியலாடி,
வானவில்லை
வளைத்து
கோலமிட்டுக்
கொண்டிருந்தாள்
அவள்...!

பார்த்தவுடன்
பைத்தியம்
பிடித்தவன்
போலானேன்!
ஆம்!
காதல்
பைத்தியம்...!

அவளை
அங்கே
எதிர்பார்க்க வில்லை!
கல்லூரியில்
கண்ணுங் கருத்துமாய்
கவனித்துக்
கொண்டிருந்தாள்
பாடத்தை!

லேட்டாய்
போனதால்
திட்டு வாங்கினாலும்
அவளின் சிரிப்பால்
அரை நொடிப் பொழுதில்
அதனை
மறந்தேன்!

உணவு இடைவேளையில்
புத்தகம் கேட்டேன்!
புன்னகை தந்தாள்!

கண்டு கொள்ளாமல்
போனாலும்
வலியச் சென்று
பேசினால்
காந்தப் பார்வையும்
மயக்கும் புன்னகையும்
கலந்த
"பளிச்" என்ற
பதில் வரும்!

பிறகு
நிறைய
பேசினோம்!
சிலசமயம்
தேவையாலும்!
பல சமயம்
தேவையில்லாமலும்!

அவளிடம்
காதலைச்
சொன்னேன்!
மௌனமாய்
இருன்தாள்!
மௌனம்
சம்மதமா?
பிறகு
போய்விட்டாள்!
சம்மதமில்லையோ?

அதற்குப் பிறகும்
வலியச் சென்று
பேசினால்
தடையில்லாமல்
பேசுகிறால்!
எதுவும்
தெரியாதவள்
போல!

எப்போதாவது
காதலைப்
பற்றி
பேசும் போது
மட்டும்
லாவகமாய்ப்
பேச்சை
மாற்றிவிடுகிறாள்!

என்னைக்
காதலிக்கிறாளா?
இல்லையா?
புதிராய் அவள்!
புரியாமல் நான்!!

கனவு காலம்... காதல் கோலம்...

என்னவளின்
இதழில்
வடிந்த தேனை
பருகத் துடித்த
தேனீக்கள்
முகத்தை
மறைத்தன...!

தேனீக்களை
விலக்கி
முகத்தை
பார்தேன்!
திக்குமுக்காடிப்
போனேன்!
புன்னகையில்
அவள்...!

திடீரென
தொடையில்
"சுர்" என்று
ஒரு வலி!
கொட்டியது
தெனீயா?
இல்லை!
கலைந்தது
கனவு!

அழகிய கனவை
விரல்களால்
கலைத்த
நண்பனிடம்
கோவப்பட்டேன்!
என்னால்
முடிந்தது
அவ்வளவே...!

தென்றல் படும் பாடு

பாறையின்
சிறு இடுக்குகளில் கூட
சுலபமாய்
நுழைந்து விடும்
தென்றல்,
உன் சிறு
இடுப்பு ம்டிப்புக்குள்
வளைந்து செல்ல
பட்ட பாட்டை
கவிதையாய்
என் காதில்
சொல்லியது!
எழுத்தில்
வடித்திருக்கிறேன்...!

காதல் நிலா

என்னவளே...
எனக்கு
வளர்பிறையும்
இல்லை!
தேய்பிறையும்
இல்லை!
தினமும்
பௌர்ணமி தான்...!
முழுநிலவாய்
நீ...!

Friday, July 25, 2008

ஜனநாயகம்

பத்து வீட்டுக்கு
ஒரு குழாய்
போட முடியாது...
கவுன்சிலர் சொன்னார்!
ஆனால் அவரின்
ஒரு
சின்ன வீட்டிற்க்கு
இரண்டு குழாய்...!

ஹைக்கூ

பள்ளிக்கூடத்தில்
குழந்தைத் தொழிலாளி...
சத்துணவு ஆயாவின் மகள்!

கவிதை 7

நீ
கோவப்படும்
போதுதான்
மிகவும்
அழகாக
இருக்கிறாய்...!
அழகாய்
தெரிவதற்க்குத் தான்
அடிக்கடி
கோவிக்கிறாயோ...!

அதிசயம்

முத்துக்களில்
ஒரு
கல்வெட்டு!
அவள் பற்கள்...
முதலாவது அதிசயம்!

தின்ன முடியாத
ஆப்பிள்!
அவள் கன்னங்கள் ...
இரன்டவாது அதிசயம்!

கருப்பாய்
நிலவு!
அவள் கருவிழிகள்...
மூன்றாவது அதிசயம்!

சிவப்பாய்
ஒரு
தேன்கூடு!
அவள் இதழ்கள்...
நான்காவது அதிசயம்!

கலையாத மேகம் !
அவள் கூந்தல்...
ஐந்தாவது அதிசயம்!

ஒடியாத கொடி!
அவள் இடை...
ஆறாவது அதிசயம்!

பறக்காத குயில்
என்னவள்...
ஏழாவது அதிசயம்!

என்னை
காதலித்து
விட்டு
என்னை
பிடிக்கவில்லை
என்று
சொன்னாயே...
அது தான்
எட்டாவது அதிசயம்!

பணக்கார கணவனோடு
சந்தோசமாய்
அவள்...
இன்னும்
வேலையற்றவனாய்
நான்...!

Wednesday, July 23, 2008

கவிதை 5

மீட்டாமலே
இசைக்குது
வீணை ...
அவள்
பேச்சு..!

வண்ணத்து பூச்சிகள்
சிறகடித்தன...
ஆச்சர்யம்!
ஆனால்
பறக்கவில்லை
அவள் இமைகள்..!

கவிதை 3

ஒரு
சிப்பிக்குள்
ஒரு
முத்து தானே
இருக்க முடியும்!
ஆனால்
என்னவளின்
இதழ்களுக்கு
இடையில்
எப்படி
முப்பத்திரெண்டு
முத்துக்கள்...!

கவிதை 2

நீ
தொட்டால்
பட்ட மரமும்
தளிர்க்கும்!
அதனால்தானோ...
மீசைகூட
முளைக்காத
என்
முகத்தில்
தாடி
தளிர்கிறது
நீ
தொட்டு கட்டிய
ரக்கியால்...!

Tuesday, July 22, 2008

கவிதை 4

தீண்டாமை
ஒரு பாவ செயல்!
ஒரு பெருங்குற்றம்!
ஒரு மனித தன்மையற்ற செயல்!
ஆகவே,
பெண்ணே
ஒரு முறை
தீண்டிடு
என்னை...!

இரட்டை டம்ளர்
முறை
ஒழிக்கப் படவேண்டும்!
அதனால் தான்
சொல்கிறேன்...
ஓரே கூல்டிரிங்சை
ஸ்ட்ரா போட்டு
உறிஞ்சுவோம்் வா!

தாழ்த்தப்பட்டவர்களும்
கோவிலுக்குள்
வர
அனுமதி
ஊண்டு!
ஆனால்,
வீட்டுக்குள்
வராதே
என்கிறார்
உன் அப்பா...!

தாழ்த்தப்பட்டவர்
தெருவுள்ளும்
சாமி சிலை
வர வேன்டும்!
அதனால்தான்,
சொல்கிறேன்
தேவியே...
நீ
என் வீட்டிற்க்கு
வர வேண்டும்...!

கவிதை 1

அன்பே !
மழையில் நனைந்து
விடாதே...!
உன்னை நனைத்த
திருப்தியில்
மழை
நின்றுவிடக் கூடும்...!

சோதனை பதிவு

இது ஒரு சோதனை பதிவு