Friday, November 28, 2008

ஒரு நல்லாசிரியரும் நொள்ள மாணவனும்..?!!


எங்க கல்லூரியில ஷேக் தாவூத் அப்படீன்னு ஒரு வாத்தியார் (லெக்சரர வேற எப்படிங்க கூப்பிடறது...) இருந்தார். அது தான் அவர் எங்களுக்கு எடுத்த முதல் வகுப்பு... அவரு சிரிச்சுகிட்டே தான் class எடுத்தாரு.... முன்னாடி இருந்த பொண்ணுங்களும் சிரிச்சுகிட்டே இருந்தாங்க... சரி போனா போகுதுன்னு நானும் சிரிச்சு வச்சேன்...

பக்கத்தில் இருந்த நண்பன் (கமலநாதன்னு நினைக்கிறேன்...) சிரிக்காமல் கிசுகிசுத்தான் "வேண்டாம் சிரிக்காத... அப்புறம் ஆப்புத்தான் ".
"ஏன்டா...?" .
இப்போ ஷேக் சார் நம்மள, பாத்து சொன்னாரு "தம்பி... பாடம் நடத்தும் போது பேசாத... ".

கொஞ்ச நேரம் கழிச்சு, என்கிட்டே ஒரு கேள்வி கேட்டார் (சிரிச்சுகிட்டே தான்). ரொம்ப ஈஸியான கேள்விதான். நானும் எந்திருச்சு நின்னு சிரிச்சுகிட்டே பதில் சொன்னேன்.
"என்ன தம்பி சொன்னீங்க... ? மறுபடியம் சொல்லுங்க..." என்றார். எனக்கு ஒரே டவுட்டகி போச்சு. நாம கரெக்டா தான் சொன்னமா இல்லையான்னு. அந்த காலத்தில நான் கொஞ்சம் shy டைப் வேற (இப்பவும் தான்...ஹி.. ஹி...). உடனே நான் தெரியலன்னு சொல்லிட்டேன். எனக்கு பக்கத்தில இருக்குறவன பாத்து, "தம்பி... நீ சொல்லு தம்பி " என்றார். அவனும் நான் சொன்னதையே அப்படியே சொன்னான்.
"நீயெல்லாம் நாளைக்கு இஞ்சினியராகி எப்படி ஒரு கம்பனிக்கு வேலைக்கு போகப்போற?? ஏன் தம்பி... ". அப்படீன்னு ஆரம்பிச்சு ஒரு பத்து நிமிசத்துக்கு திட்டினார். (நான் இஞ்சினியராகி நல்ல வேலையில இருக்குறது வேற விஷயம்.) நான் ரொம்ப பாவமா, நின்னு கிட்டு இருந்தேன். இப்போது சிரிப்பு அவர் முகத்திலும் இல்லை. பொண்ணுங்க முகத்திலும் இல்லை. என் முகத்திலும் இல்லை. எனக்கு என்ன தப்பு செய்தொம்னே புரியல. ஒரு shy-யான மாணவனை சமாளிக்க தெரியாமல் ஒரு ஆசிரியர் இப்படியா திட்டுவது என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.

அவர் பிரியடு முடிஞ்சவுடனே, "நான் தான் அப்பவே சொன்னேன்ல. அவர் வர்றதுக்கு முன்னாடியே சீனியர் கிட்ட கேட்டு அவர பத்தி தெரிஞ்சுகிட்டேன். அவருக்கு பொண்ணுங்க சிரிச்சா தான் புடிக்கும் பசங்க சிரிச்சா புடிக்காது " அப்படீங்கற உண்மைய சொன்னான் கமலநாதன். இதுல இப்படி ஒரு உள்குத்து இருக்கும்ன்னு தெரியாம போச்சேன்னு நானும் பேசாம இருந்துட்டேன்.

அதுக்கு அப்புறம் அவர் பிரியடுல சிரிக்காம இருக்க கத்துக்கிட்டேன். பொண்ணுங்க மட்டும் அவர் அடிக்குற மொக்க ஜோக்குக்கு எல்லாம் சிரிச்சுகிட்டு இருப்பாங்க. பசங்க எல்லாரும் எப்பிடிஜோக் அடிச்சாலும் சிரிக்க மாட்டங்க. இப்படி தான் போயிக்கிட்டு இருந்தது. ஆனா பொண்ணுங்கள பார்த்து, மொக்க ஜோக்குக்கு சிரிக்குராய்ங்களேன்னு எரிச்சலா வரும்.

செமஸ்டர் ரிசல்ட் வந்தது. அவர் பாடத்தில, சிரிக்குற பொண்ணுங்களுக்கு மட்டும் மார்க்க அள்ளி வீசியிருந்தார். வழக்கம் போல சிரிக்காத பையன்களுக்கு கொஞ்சம் கம்மி தான்.

அவர் வழக்கமா பசங்கள தம்பின்னு தான் கூபிடுவார். பொண்ணுங்கள பேர் சொல்லி தான் கூபிடுவார். எங்க சீனியர் ஒருத்தர் (மரியாதை??) "சார் எங்கள மட்டுன் தம்பின்னு கூப்பிடுரீங்க, பொண்ணுங்கள மட்டுன் ஏன் சார் தங்கச்சின்னு கூப்பிட மட்டேங்கிறேங்க...?? " ன்னு கேட்டுட்டார். சாருக்கு தர்ம சங்கடமா போச்சு. "தங்கச்சி வேண்டாம் அது நாள்ல இல்ல... வேணும்னா சிஸ்டர் ன்னு கூப்பிட்டுக்கலாம்..." என்று சொல்லிவிட்டு அன்று ஒரு நாள் மட்டும் ரொம்ப கஷ்டப் பட்டு சிஸ்டர்னு கூப்பிட்டாரம்.... அடுத்த நாளில் இருந்து வழக்கம் போல, பசங்க தம்பிகளா ஆயிட்டாங்க... பொண்ணுங்க பொண்ணுங்களாவே இருந்தாங்க...

அவர் கடேசி செமஸ்டர்ல, அதிகமா பாடம் நடத்த மாட்டாரு. சும்மா மொக்கையாத்தான் போடுவாரு. அதாவது எப்படின்னா "அப்துல் கலாம் ஜனாதிபதியா இருக்கலாமா? வேண்டாமா ?" ங்கிறது மாதிரி ஜெனரலான கேள்விக்கு எல்லோரையும் எந்திரிச்சு பதில் சொல்ல வைப்பாரு.

அன்னிக்கு என்ன கேள்வின்னா "ஒரு நல்ல ஆசிரியர் எப்படி இருக்கணும்?"ங்கிற கேள்வி. எல்லோரும் "ஒரு பிரண்டு மாதிரி இருக்கணும் சார்" அப்படின்னு சொல்லீட்டு உக்காந்துட்டாங்க. நான் என் பதில பிரிபேர் பண்ணிக்கிட்டேன் . என் முறை வரும் போது, எந்திரிச்சு டான்னு இந்த பதில சொன்னேன்.
"பொண்ணுங்க கிட்ட மட்டும் சிரிச்சு பேசிக்கிட்டு பசங்ககிட்ட சிரிக்காம பேசிக்கிட்டு அப்படி எல்லாம் இருக்க கூடாது சார். பொண்ணுகளுக்கு எல்லாம் லேப்ல அதிகமா மார்க் போட்டு பசங்களுக்கு மார்க் போடாம அப்படியெல்லாம் இருக்க கூடாது சார் ".

இந்த ரெண்டு பாயின்ட்ட சொல்லும் போது, எனக்கு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. பொண்ணுங்க எல்லாம் திரும்பி ஆச்சர்யமா பார்த்தாங்க. பசங்க எல்லாம் உள்ளுக்குள்ள ஆச்சர்யப்பட்டாலும் முகத்துல எந்த உணர்ச்சியும் காட்டல (வழக்கம் போல). அவருக்கும் உள்ளுக்குள்ள அதிர்ச்சி இருந்திருக்கணும். ஆனா வெளிய காட்டிகாம, ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு அடுத்த பையன கேட்க ஆரம்பிச்சிட்டார்.

எல்லோரும் பதில் சொல்லி முடிச்சதும், "நாம பொண்ணுங்க கிட்ட மட்டும் சிரிச்சு பேசிக்கிட்டு அப்படியா இருக்கோம்? இல்லைல... எல்லார்கிட்டையும் தான சிரிச்சு பேசுறோம். லேப்ல எல்லாம் நாம மார்க் போடுறதில்ல தம்பி நீங்க எடுக்குறது. " இதை தன்னிலை விளக்குமாத்தாக சாரி... விளக்கமாக சொன்னார். ஆனால் அது அப்பட்டமான பொய். லேபில் உள்ள நூறு மார்க்கும் அவர் போடுவது தான். யாருமே அவரை கேள்வி கேட்க முடியாது.

அன்னைக்கு அவர் போனதும் "ஏய்..! என்னடா இப்படி சொல்லிட்ட...உனக்கு தைரியம் அதிகம்டா..." ன்னு எல்லா பசங்களும் என் இடத்துக்கு வந்து சொல்லும் போது நான் ஒரு ஹீரோவாகவே ஆகிவிட்டதாக உணர்ந்தேன்.

பி.கு:
இது யாரையும் புண்படுத்துவதற்காக எழுதப் பட்டதல்ல. என் வாழ்வில் நடந்த சுவாரசியமான சம்பவத்தை பதிவு செய்திருக்கிறேன். இதை சம்பந்த பட்டவர்கள் படித்து, அவர்கள் மனம் ஒரு வேளை புண்பட்டால், அது வருத்தத்திற்குரியது.

Wednesday, November 19, 2008

சே.. எப்படி எல்லாம் யோசிக்குராங்கய்யா ...


நண்பர் அசோக் பெரிய பெட்டிக் கடையில் (ஒரு பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோரை வேற எப்டிங்க சொல்லறது...???) மொபைல் செக்சனில் மேனேஜராக இருக்கிறார். யாருடைய வேலை அதிகம் சிரமம் என்று பேச்சு வந்த போது இந்த சம்பவத்தை குறிப்பிட்டார். அதை அப்படியே தருகிறேன்.

"நண்பா... எங்க ஸ்டோர்ல exchange offer போட்ருக்காங்க... அதுல ஒரு திருட்டு mobile வந்தது... இப்போ எல்லாம் மொபைல் ரொம்ப advance -ஆகிடுச்சு. samsung mobile -ல emergency SMS எல்லாம் வந்துடுச்சு. அதாவது நீங்க emergency நம்பர்-ன்னு மூணு நம்பர் பதிஞ்சு வச்சுக்கலாம். யாரவது உங்க மொபைலை திருடி வேற ஒரு சிம் காரடை போடும் போது அந்த மூணு நம்பருக்கும் இது ஒரு மெசேஜ் அனுப்பும். எங்க ஸ்டோர்ல செக் பண்றதுக்காக வேற சிம்ம போட்டு பார்த்தாங்க. கொண்டுவந்தவன் exchage offer-ல வேற மொபில வாங்கிட்டு போயிட்டான். திருட்டு கொடுத்தவன் போன் பண்ணி கண்டமேனிக்கு திட்டுறான். இப்போ இந்த நிலமையில நீங்க இருந்திருந்தா என்ன பண்ணிருப்பீங்க...?"

"நான் என்ன பண்ணியிருப்பேன்?? மொபைல திருட்டு கொடுத்தவன் கிட்ட கொடுத்துட்டு செலவ கம்பனி தான் ஏத்துக்கணும்னு சொல்லி management-கிட்ட பேசியிருப்பேன்..."

"நண்பா... இதே மாதிரி வேற சில பேர் ஒரு மொபைல exchange offer-ல கொடுத்துட்டு, இன்னொருத்தன அனுப்பி திருட்டு மொபைல்ல்னு சொல்ல சொல்லி திரும்ப வாங்கிட்டு போயிட்டங்கன்னா என்ன பண்ணுவீங்க?? அதுவும் இல்லாம நீங்க வேல பாக்குற கம்பனிக்கு நீங்க எந்த செலவும் ஏற்படுத்த கூடாது. அப்படி வேல பாக்குறது தான் கரெக்ட்."

"அப்போ வேற வழி இல்ல. போலிசுக்கு போக வேண்டியது தான்... "

"நண்பா... போலிசுக்கு போனா பிரஸ்சுக்கு செய்தி போயிடும்...அப்புறம் எங்க ஸ்டோர்ல இருக்குற மொபைல் எல்லாமே திருட்டு மொபைல்-ன்னு பேச ஆரம்பிச்சுருவாங்க...யாவரம் படுத்திரும்..."

எந்த பக்கம் போனாலும் முட்டு கட்ட போடுறானே அப்படீன்னு ஒரு சில விநாடிகள் அமைதியாக அவனையே பார்த்தேன்...
"சரி அப்போ நீ என்ன தான் பண்ணின?" - நேரடியாக கேட்டே விட்டேன்.
"நான் என்ன பண்ணேன்னா... திருட்டு மொபைல கொண்டு வந்தவன் புது மொபைல வாங்கிட்டு புது சிம்மும் எங்க கடையில இருந்து வாங்கிருந்தான். எங்க ஸ்டோர்ல வாங்கி இருந்ததால அந்த நம்பர் எங்க கிட்ட இருந்தது. அவனுக்கு போன போட்டு, நாங்க வித்த மொபைல்ல software problem இருக்கு. உடனே கொண்டு வாங்க சரி பண்ணி தர்றேன் அப்படீன்னு கடை பையன விட்டு சொல்ல சொன்னேன். அவனும் சரின்னு வந்தான். அவன் வர்றதுக்கு முன்னாலேயே திருட்டு கொடுத்தவன, ஸ்டோருக்கு போன் போட்டு வர சொல்லிட்டேன். இப்ப, திருடுனவன் வந்ததும் அவன் கிட்ட இருந்த மொபைல வாங்கிட்டு, திருட்டு மொபைல அவன் கைல இந்தாப்பா உன் மொபைலுன்னு கொடுத்துட்டு, திருட்டு கொடுத்தவன் கிட்ட உன் மொபைலு அவன்கிட்ட தான் இருக்குன்னு சொல்லி அங்க இருந்து நேரடியா போலிஸ் ஸ்டேசனுக்கு கூட்டி போக ஆள் அனுப்பிட்டேன். போலீசுல பேர் வராத படி கவனிக்க சொல்லி, எங்க டேமஜருக்கு போன் பண்ணி சொல்லிட்டேன்... "

அவனோட இந்த பதில கேட்டதும், இந்த பதிவின் தலைப்ப நான் சொன்னேன்....

Sunday, November 2, 2008

சினிமாவும் நானும்....

இந்த தொடர் பதிவை எழுதலைன்னா.. வலையுலகம் என்னை பதிவன் என்று மதிக்காததாலும், நண்பர் மணிகண்டனின் அழைப்பை தட்ட முடியாததாலும், எனக்கு பதிவெழுத ரொம்ப நாள் கழித்து நேரம் கிடைத்ததாலும்,.....

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
வழக்கம் போல் எந்த வயதுன்னு ஞாபகம் இல்ல... ஆனா ஒரு நாள் பள்ளிகூடத்துக்கு கட் அடிச்சுட்டு எங்க ஏரியா பக்கத்துல இருந்த மஹாராணி தியேட்டருக்கு படத்துக்கு போயிட்டேன். படத்துக்கு காசுக்கு வீட்டுல சுட்டுட்டேன். ரெண்டரை மணி ஆட்டம். மாட்னி ஷோ. கர்ணன் படம். படம் பார்த்துட்டு ஜாலியா வெளிய வர்றேன். திடீர்னு பார்த்தா, எங்கயோ பார்த்தா மாதிரி இருந்தது. நல்லா கவனிச்சு பார்த்தா, எங்க அப்பா ஒரு பிரம்போட நிக்கிறார். அடியோ அடின்னு அடி... அப்பாவுக்கு தப்பிச்சு ஓடிப் போயி, ராத்திரி எல்லாரும் தூங்கினதுக்கு அப்புறம், பின்பக்கமா வீட்டுக்கு போறேன். அம்மா சாப்பாடு போட்டுகிட்டே கேட்டாங்க "ஏன்டா வீட்டுல எடுத்தது தான் எடுத்த, போயும் போயும் கர்ணன் படத்துக்காடா போவ...வேற நல்ல படமே கிடைக்கலையாடா...."
ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சேவல்...

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
ரெண்டு படம் பார்த்தேன். ஒன்னு சரோஜா... அரங்கில பார்த்திருக்கலாமோ என்ற ஏக்கத்தை உண்டு பண்ணியது... ரெண்டாவது ராமன் தேடிய சீதை... நம்பலையே பீலிங் பண்ண வச்சுட்டாங்கப்பா....


4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா ?
காதல் கொண்டேன், 7g ரெயின் போ காலனி, தசாவதாரம்.


5. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
அரசியல் எல்லா இடங்கள்லயும் இருக்கு... எங்க ஆபிஸ்ல கூட அரசியல் பண்ணுறாங்க... சினிமாவுலயும் அரசியல் இருக்கு... ஏன் அரசியல்ல கூட அரசியல் இருக்கு... அரசியல்ல இருக்குற சினிமா வேற .... சினிமாவில இருக்குற அரசியல் வேற... நீங்க எந்த அரசியல் பத்தி கேக்குறீங்க... (பதில் தெரியலேன்னா இப்பிடி குழப்புறது நம்ம பழக்கம் .... ஹி...ஹி...)

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
அபூர்வ சகோதரர்கள் படத்துல எப்படி அந்த குட்ட கமல கொண்டு வந்தாங்கன்னு இன்னும் ஆச்சர்யமா இருக்கு...
தசாவதாரத்துல, ஆரம்ப காட்சிகள்ல பறவை பார்வையில கேமரா பண்ணியிருக்கிற அதகளம் சூப்பர். அதே படத்துல, சைனீஸ் கமல முதல் முதலா காட்டுற சண்டை காட்சியில கேமராவும், ஒருவனும் கமலின் இடது புறம் இருப்பார்கள். கமல் அவனை தூக்கி வலது புறம் வீசுவார். இப்போது கேமராவும் வலது புறம் (கண்ணை உறுத்தாமல் ) நகர்ந்திருக்கும்....


6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
நிறையா... பதிவுலம் , தின மலர், ஆனந்த விகடன், குமுதம் இப்படி...


7.தமிழ்ச்சினிமா இசை?
தமிழ் சினிமா இசையை புதிய தளத்திற்கு இளையராஜா, எடுத்து சென்றார் என்பதை மறுக்க முடியாது. 80 களில், வந்த பாடல்களை இப்போதும் மறக்க முடியாது. ஆனால், ஏ ஆர் ரஹ்மானின் இசை, ரொம்பவும் புதுசா இருக்கு. ஏ ஆர் ரஹ்மான் இசையில் குவாலிட்டி-யை எதிர்பார்த்து போகலாம், துல்லியமும் இருக்கும். loud speaker-ல் இளைய ராஜாவும், head set-ல் ரஹுமானும் கேட்க பிடிக்கிறது.


௮. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
ம்ம்... நிறைய பாத்திருக்கிறேன்.... முக்காவாசி படத்துல, வசனமே இருக்காது.. அப்படியே இருந்தாலும் ஒண்ணுமே புரியாது... நீங்க எதோ உண்மையாவே உலகப் படம்ம்னு நினைச்சுடாதீங்க.... shame shame puppy shame....
இது தானே உலக படம். உலகத்துல எல்லாருக்கும் புரிகிற படம்...


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
நமக்கு நேரடி தொடர்பு இருக்குங்க. அவங்களுக்கு தான் இல்ல... நம்ம நேரடியா தானே
படம் பாக்குறோம்...அவங்க தான் நம்மள வந்து பாக்க மாட்டேங்கிறாங்க...

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நான் ஜோசியன் இல்லை... (ஹி... ஹி...)


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள்,செய்திகள் எதுவுமே பத்திரிகைகள்,தொலைக்காட்சி,இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
pass...
(தெரியல்லேன்னா வேற என்ன பண்றது... சொல்லுங்க...)


இந்த பதிவை எழுத யாரையாவது கூப்பிட்டு, அவங்கள கொடுமை படுத்த விரும்பல....
இந்த பதிவை எழுத யாரையாவது கூப்பிட்டு, அவங்கள கொடுமை படுத்த விரும்பல....
அப்படியே கொடுமை படுத்த நினைச்சாலும் யாரும் கிடைக்கப் போறதில்ல...