Saturday, July 26, 2008

கவிதை 29

அவளுடன்
ஒரே அறையில்
தேர்வெழுத
வாய்ப்புக் கிடைத்தது!

திடீரென
எழுந்து
பேனா
இல்லை
என்றாள்!

"பேனா
இல்லாம
நீயெல்லாம்
எதுக்கு
எக்ஸாம்
எழுத வர்ற..."
கடுகடுத்தார்
கண்காணிப்பாளர்!


எழுந்து
பேனாவை
நீட்டினேன்
அவளிடம்!
கொடுத்தது
நான் என்பதாலோ
என்னவோ
கொஞ்சம்
தயக்கம்
காட்டினாள்!
பின்பு
வேறு வழியில்லாமல்
வாங்கிக் கோண்டாள்!

தேர்வெழுத
முடியவில்லை
என்னால்!
அவளின்
ஒவ்வொரு
அசைவையும்
அருகிலிருந்து
ரசித்தது
என் மனம்!

படித்ததையெல்லாம்
முத்து முத்தாக
வெள்ளைத்தாளில்
கொட்டினாள்!
சில சமயம்
யோசிப்பதாக
பேனா நுனியைக்
கடித்தாள்!

பேனாவைத்
திரும்பக் கொடுத்து
அவள்
நன்றி சொன்ன போது
என் மனதில்
வண்ணத்துப் பூச்சிகளின்
அணிவகுப்பு!

அந்தப் பேனாவை
நான்
எப்போதும்
பயன்படுத்துவதில்லை!
ஆனால்
எப்போதாவது
பயன்படுத்துவதுண்டு!
இது போன்ற
கவிதை
எழுதும் போது
மட்டும்!!

No comments: