Monday, September 8, 2008

கோயில் .... (எழுத்து: நவநீதன் இயக்கம்: ஹரி அல்ல)

கோவிலுக்குச்
சென்றேன்...!
கொலுசொலி
இசைத்தது!
திரும்பினேன்!

கொடியிடை
தெரிய
புடவை கட்டிய
பதுமை நின்றது!

கொடி
நளினமாய்
அசைந்தது!
அவள்
என்னைக்
கடந்து சென்றாள்!

கோவில்
வாசலிலேயே
தேவி தரிசனம்
கிடைத்தது!

அர்ச்சனைத்
தட்டிலிருந்த
தீபம்
அவளை
தொடப் போகும்
சந்தோசத்தில்
ஆனந்த கூத்தாடியது!

கோவில் சிலைகள்
அழகு சிலையை
கண் கொட்டாமல்
பார்த்துக் கொண்டிருந்தன!

சிங்க முக
அரக்கன் கூட
அவளைப் பார்த்து
வாயைப்
பிளந்து விட்டான்!

திருமால்
அரக்கனைக்
கொல்ல
சக்கரத்தை
ஏவிக் கொண்டிருந்தார்!
அவள் பார்வைக்குக்
கட்டுப்பட்டு,
சக்கரம்
அங்கேயே
நின்றிருந்தது!

காளி கூட
பொறாமைத் தீயால்
கலா முகனை
மிதித்துக்
கொண்டிருந்தாள்!

கண்ணன்
அர்ச்சுனனுக்கு
கீதையைச்
சொல்லிக் கொண்டிருந்தான்!
அதைக் கடக்கையில்,
அவள்
ஓரவிழிப் பார்வை
ஒன்றை
உதிர்த்தாள்!
ஐயோ...!
அவ்வளவு தான்!
அங்கிருந்த
சிலைகளுள்
ஒன்றானேன்!

அனால்
அந்த பார்வை
சொன்ன
செய்தி தான்
என்ன???

9 comments:

மணிகண்டன் said...

really awesome navaneethan.

நமக்கு கவிதை அந்த அளவுக்கு பிடிக்காது. ஆனா இது சூப்பர்.

நவநீதன் said...

நன்றி மணிகண்டன்...

Anonymous said...

சுவாரசியமான கவிதை... :)

நவநீதன் said...

நன்றி தூயா...

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லா இருக்குங்க

கோவி.கண்ணன் said...

//அனால்
அந்த பார்வை
சொன்ன
செய்தி தான்
என்ன???//

பார்வை பார்(த்து) வை,

சிலையானால் காலடி பட்டு உயிர்கொடுக்க இராமன் அவதாரம் எடுத்து வர வேண்டி இருக்கும் என்று சொல்லி இருக்கும் !

:)

நவநீதன் said...

ரொம்ப நன்றி கோவியாரே...

//சிலையானால் காலடி பட்டு உயிர்கொடுக்க இராமன் அவதாரம் எடுத்து வர வேண்டி இருக்கும் என்று சொல்லி இருக்கும் !//

:-)

Anonymous said...

Hi Navanee - its simply amazing - especially 'Kodi Nalinamai Asainthathu Aval Ennai Kadanthu Sendral'

Please teach me to type in tamil
-Siva Raman Ganesan

நவநீதன் said...

Thanks for the compliments :)
இந்த இணைப்பை பயன்படுத்தி நீங்களும் தமிழில் டைப்பலாம் :)
http://www.google.com/transliterate/indic/tamil