ரத்தத்தை சூடேற்றும் காட்சி இன்று ஈ-மெயிலில் வந்தது.
காஷ்மீரத்தின் ஒரு கட்சி தலைவர் தேசியக் கொடியை எரிக்கும் காட்சி....
mail-லில் வந்ததை அப்படியே தமிழ் படுத்தி தருகிறேன்.
இந்த காட்சியை media-க்கள் கண்டுகொள்ளாதது ஆச்சர்யம் தான்.
ஒரு தேசியக் கொடியை எரிப்பதை கண்டுகொள்ளாத ஒரே நாடு இந்தியாகத் தான் இருக்கும்.
இதை சுடு செய்தியாக்காத (அதாங்க breaking news) media-க்களை என்ன செய்வது???
கீழே கொடுக்கப்பட்டவை எல்லாம் மசாலா சுடு செய்திகளாக இந்திய செய்தி நிறுவனங்களில் வந்தது.
1. தேசியக் கொடியை போலவே கேக் செய்து வெட்டியதற்காக, தெண்டுல்கர் மீது கண்டனம் தெரிவிக்கப் பட்டது.
2. மந்திரா பேடி, தேசிய கொடி போடப்பட்ட சேலையை அணிந்ததால் மன்னிப்பு கேட்க வைக்கப் பட்டார்.
3. கொல்கட்டவிலும், பெங்களுரிலும் ஒரு போலீசார் கொடியை கீழே எரிந்ததால் வேலையை இழந்தனர்.
மேலே கூறப்பட்ட சம்பவங்கள் சரி என்று கூறவில்லை. அதற்காக இங்கே காட்டப் பட்டுள்ள படங்கள் சரியும் அல்ல...
1. அமர்நாத் விவகாரத்தின் போது, ஜம்முவை சேர்த்த சிலர் "பாரத மாதா வாழ்க!" (bharath matha ki jai) என்று முழங்கிய போது, போலீசாரால் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
2. அதே அமர்நாத் விவகாரத்தின் போது, காஷ்மிரைச் சேர்ந்த சிலர் இந்திய தேசியக் கொடியை எரித்து விட்டு, பாகிஸ்தான் கொடியை வைத்துக் கொண்டு, "இந்தியா ஒழிக! பாகிஸ்தான் வாழ்க..!" (Hindustan Murdabad, Pakistan Jindabad) என்று முழக்க மிட்டனர். அதற்க்கு வெற்று கண்டனம் கூட தெரிவிக்கப் பட வில்லை.
3. ஒவ்வொரு ஆகஸ்ட் 14-யிலும் (பாகிஸ்தானின் சுதந்திர தினம்), காஷ்மீரில் உள்ள அரசு அலுவலகங்கள் உட்பட எல்லா இடங்களிலும் பாகிஸ்தான் கோடி ஏற்றப்பட்டு, மறுநாள் (இந்திய சுதந்திர தினம்) இந்திய கொடி எரிக்கப் படுகிறதாம்.
மேலே சொல்லப் பட்டதெல்லாம் உண்மையா??? விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ...!
அய்யா.. புண்ணியவான்களே... இது ஏதாவது blog-க்கில் ஏற்கனவே வந்துருந்தா சொல்லிருங்கைய்யா... நன்றின்னு சொல்லி பேர் போட்டு விடுகிறேன். நான் பதிவுத்திருடன் எல்லாம் கிடையாது... mail-லில் வந்ததை பதிவு செய்திருக்கிறேன்.
9 comments:
நண்பரே தேசிய கோடி அல்ல தேசிய கொடி
ஒரு சில தட்டச்சு பிழைகள் இருந்தன. சரி செய்து விட்டேன்.
நன்றி நண்பா...
remove the word verification please.
நியாயமான பதிவு..
@தூயா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
//ரத்தத்தை சூடேற்றும் காட்சி//
உண்மைதான்! :-(
//இந்த காட்சியை media-க்கள் கண்டுகொள்ளாதது ஆச்சர்யம் தான்//
இது வழக்கம்தான். :-(
//மேலே கூறப்பட்ட சம்பவங்கள் சரி என்று கூறவில்லை. அதற்காக இங்கே காட்டப் பட்டுள்ள படங்கள் சரியும் அல்ல..//
நியாயந்தான்!
தங்கள் கோபத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.
ஜெய் ஹிந்த்!!
அய்யா தேசியகொடியை எரித்ததற்கு உங்கள் தேச பக்தி இப்படி பொங்குகிறதே கீழே உள்ள லிங்கை கொஞ்சம் பாருங்களேன்.
1,
http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107Live_updates.asp
2,
http://brahmanicalterrorism.wordpress.com/2008/09/17/periyar-130/
மனுசனையே ரயிலோடவும் பஸ்ஸோடவும்
போட்டு கொளுத்தறவ்ங்களுக்கு
தேசியக்கொடி எல்லாம்
ஒரு பொருட்டல்ல.
இதையெல்லாம்
பார்த்து
நாம்தான்
பொருமிக்கொண்டிருக்க வேண்டும்.
நன்றி இளைய கரிகாலன், super links, மற்றும் அமிர்தவர்ஷினி அம்மா...
தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
@super links,
நீங்கள் கொடுத்த சுட்டிகளை பார்த்தேன். இதை பார்க்கும் போது என் மேல் ஏதோ இந்துத்வா சாயம் பூசப்படுவது போல் தெரிகிறது.
நீங்கள் குறிப்பிட்டுள்ளதை எதிர்ப்பதில் எதிர்ப்பதில் எனக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் தேசிய கோடியை எரிப்பதை தேசிய உணர்வுள்ள யாரும் எதிர்க்கவே செய்வார்கள். என் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறேன்.
நன்றி...!
ரொம்ப நாள் கழித்து என் தளத்தின் பக்கம் இப்போது தான் எட்டிப் பார்கிறேன். கொஞ்சம் தாமதமாக பதிலளித்தமைக்கு, மன்னிக்கவும்.
Post a Comment