Monday, February 9, 2009

நான் கடவுள் - என் பார்வையில் ...

முதலில் இந்த மாதிரி ஒரு கதையை எடுக்க நினைத்ததற்காகவே பாலாவை பாராட்டலாம்... ஆரம்ப காட்சிகளிலேயே காசியும், அங்கு நடக்கும் விசயங்களையும் பக்காவாக கண்முன் நிறுத்தி, நிமிர்ந்து உக்கார வைத்து விடுகிறார். வசனங்கள் கொஞ்சமே என்றாலும் நிறைவாய் இருக்கிறது...! வில்லன் பாத்திர படைப்பு எந்த அளவுக்கு நடை முறையில் சாத்தியம் என்று பாலா தான் விளக்க வேண்டும். மூட நம்பிக்கையோட இருக்கும் ஒவ்வொரு மனிதனையும் உண்மை நிலையை கொஞ்சம் கூட வேறுபாடில்லாமல் காட்டி, அனாயசமாக கேள்வி கேட்கிறது....! இப்படிப்பட்ட கஞ்சா அடிக்கிற ஒரு சாமியாரைத் தான் நாம் தருமம் என்ற பெயரில் காசிக்கு போய் பிச்சையிட்டு விட்டு வருகிறோம். பிணம் தின்னும், தன்னையே கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் எதோ ஒருவரை காசிக்கு போயிருந்தால் வணங்கி விட்டு வந்திருப்போம். ஆர்யாவை மற்ற கதா பாத்திரங்கள் எல்லாமே பெரிய சாமி என்று சொல்கிறது... உண்மையில் நாமும் இப்படித்தான் நடந்து கொள்கிறோம்... நான் எல்லா சாமியார்களையும் குறை சொல்ல வில்லை. ஆனால் காசி முழுவதும் கஞ்சா அடிக்கும் சாமிகள் தான் அதிகம்.... அவர்களை வணங்கும் மூடர்களும் அதிகம். முருகன் கதாப் பாத்திரத்தை, ஒவ்வொரு கடவுளும்/வேடத்திலிருக்கும் பிச்சைக்காரகள் கேட்கும் கேள்விகள்/வசனங்கள் ஒவ்வொன்றும் பளிச்சிடுகின்றன... ! அந்த குட்டி பையன் கலக்கியிருக்கிறான்.... கவிஞர் விக்ரமாதித்தன் கடவுளை தேவிடியா பய என்று சொல்லும் போது, அந்த பாத்திரத்தின் மன நிலையையே பிரதிபலிக்கிறார்... பல இடங்களில் நம்மை யோசிக்க வைக்கும் நகைச்சுவை, இழையோடுகிறது.... படத்தில் வரும் பழைய பாடல்களும் நச். அந்த பழைய பாடல் தெரிவிலும் நெஞ்சில் நிற்கிறார். பூஜாவிற்கு மொத்தமே மூன்று உடைகள் தான் படத்தில். ஆனால், அவர் முகத்தில் அழகழகான உணர்ச்சி மாற்றங்கள்...! தமிழ் சினிமா படங்களில் காதாநாயகன் வரும் காட்சிகள் தான் அதிகம் இருக்கும். அனால், இந்த படத்தில் அர்யாவோ கெஸ்ட் ரோலில் வருவது போல் வந்துவிட்டு போகிறார். ஆனால் வரும் காட்சிகளில் மனுஷன் பின்னி எடுத்திருக்கிறார்.... இந்த கதையில், இமேஜை நம்பும் அஜித்தை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.... என்னுடைய நண்பர் இன்னும் கொடூரமாக இருக்கும் என்று எதிர்பார்த்து வந்தேன் என்றார் (பாலா மேல அவ்வளவு நம்பிக்கை??). படம் திரையில் ரெண்டே கால் மணி நேரம் தான் ஓடுகிறது.... ஆர்யா, பூஜாவை கடித்து தின்னும் காட்சிகளை எடுத்ததாகவும், சென்சாரில் அது பறிபோய் விட்டதாகவும் என் நண்பன் சொன்னான்....! படத்திற்காக மூன்று கிளைமாக்ஸ் காட்சிகளை எடுத்ததாகவும் பத்திரிகைகளில் படித்தேன்....! படத்தில் குறைகள் சில இருந்தாலும், நிறைகள் மிக அதிகம்....! நான் கடவுள்....! கடவுளுக்கு மிக அருகில்.....!

7 comments:

முரளிகண்ணன் said...

நல்ல பாசிட்டிவ்வா விமர்சனம் பண்ணியிருக்கீங்க

நவநீதன் said...

நன்றி முரளி கண்ணன்....!

மணிகண்டன் said...

நல்ல விமர்சனம் நவநீதன்.

இது என்ன கடைசி பஞ்ச் லைன் !
நான் கடவுள்....! கடவுளுக்கு மிக அருகில்.....!

சன் டிவி பாத்து ரொம்பவே கெட்டு போய் இருக்கீங்க.

ச்சின்னப் பையன் said...

//நான் கடவுள்....! கடவுளுக்கு மிக அருகில்.....! //

:-))

நவநீதன் said...

நன்றி மணிகண்டன் மற்றும் ச்சின்னப் பையன்....!

டக்ளஸ்....... said...

காசியில "கஞ்சா" வுக்கு பேரு "சிவன்
மூலிகை" யாம்...(?!) அதுனாலதான்
காசியில சாமியார்ஸ் அத்த அடிச்சுட்டு
அந்தர் பல்டி அடிச்சுட்டு இருக்காங்க....

நவநீதன் said...

அப்படியா...? தெரியாத தகவலா இருக்கே...!
நன்றி டக்ளஸ் அண்ணே...!