Monday, February 16, 2009

கூட்டாஞ்சோறு - 16/02/2009

நண்பர் அறிவுக்கரசு மெயிலில் அனுப்பிய படம்.....


படம் சரியா தெரியலேன்னா, கிளிக்கி பெரிசாக்கி பார்க்கவும்...

*********************

நண்பர் சத்யா எழுதிய கவிதைகள்....
ஒரு காலத்தில்
போரே வாழ்க்கை...!
இப்போதோ...
வாழ்க்கையே போர்...!
போர் குறைய
காரணம்....
அது விளையாட்டென்று
பெயர் மற்றப் பட்டிருக்கிறது...
கிரேக்க வீரர்களால்...!
அப்போது
மண்டைகள்
பந்துகளாக
உருண்டன....!
இப்போது
பந்துகள்
மண்டைகளாக
உருள்கின்றன...!

சத்யா, மதன் எழுதிய கி.மு. கி.பி.யை படித்துவிட்டு ஓவராக பீல் பண்ணீட்டார்ன்னு நினைக்கிறேன்...!
அவர் எழுதிய இன்னொரு கவிதை....

எச்சிலில் ஒரு தேசிய சிந்தனை...!
உங்கள் எச்சில் பழக்கம்,
தேசியக் கோடியில் உள்ள
சிவப்பின் அர்த்தத்தை
திரித்துக் கொண்டிருக்கிறது...!

அதான்...!ரூமுக்குள்ள அண்ணாந்து படுத்துக்கிட்டு யோசிக்ககூடதுங்கிறது...!

*********************

எங்க குரூப்ல டவுட் தனபால் அப்டீன்னு ஒருத்தர் இருக்கிறார்...
அவருக்கு வந்த சமீபத்துல வந்த சந்தேகம்...
"நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு"ன்னு ஏன் சொல்றாங்க..."நான் புடிச்ச பன்னிக்கு ஏன் மூணு காலு"ன்னு சொல்லல...
இதுக்கு வந்த பதில்கள்...
"ஆடு மேய்க்கிற பயலுக்கு இவ்வளவு அறிவான்னு பொறாமை... இத அப்படியே ஒரு கல்வெட்டுல செதுக்கி வச்சிட்டு நீயும் பக்கத்துல ஒக்காந்துக்க..."
"இத சொன்னவன் உன்ன பாக்கல... பாத்திருந்தா, உன்ன பிடிச்சிட்டு நான் புடிச்ச பன்னிக்கு ரெண்டு காலுன்னு சொல்லீருப்பான்..."

நம்ம பசங்களுக்கு என்னா ஒரு வில்லத்தனம்...!

*********************

நம்ம பசங்கள்ல கு.கு (குடிகார குப்பன்) ன்னு ஒருத்தன் இருக்கான்.
ஒரு பீர் அடிச்சிட்டு, குப்பைய குப்ப தொட்டில போடுறேன்னு சொல்லிட்டு, ஒரு நண்பர் மேல போட்டவன்...
இருநூத்தி இருபது ரூபா பில்லுக்கு நானூறு ரூபாய கொடுத்துட்டு மீதிய டிப்ச்சா வச்சுக்கோன்னு சொன்னவன்....
அவன பத்தி விரிவா இனி வரும் பதிவுகள்ள பார்ப்போம்...
ரெண்டு வாரத்துக்கு முன்னால கோயம்புத்தூருக்கு போயிருந்தோம்... அங்க நடந்த சுவாரசியாமான நிகழ்வுகளை மட்டும் இப்ப பார்ப்போம்...
கு.கு, நான் மற்றும் நண்பர்கள் சிலர் சரக்கடிக்க பாருக்கு போயிருந்தோம்...
சரக்கடிக்கும் போது, நண்பர் ஒருவர்ஒரு கவிதை சொன்னார்...
(ஒரு வேளை அவருக்கு ஏறிருக்குமோ...?!!)
உலகம் சுற்றுகிறது
என்கிற
உண்மை
இரண்டு பீருக்கு பின் தான்
தெரிகிறது...!
உடனே கு.கு. குஷியாகிட்டான்... நம்ம பிளாக்குல இருக்கிற கவிதைய அடிச்சு விட ஆரம்பிச்சிட்டான்... ஆனா என்ன ஒரு கருமாந்திரம்னா, அது யாருக்கும் புரியல...
அதுக்கு அப்புறம் கவிதைய சொன்னவரும், கு.கு.வும் ரொம்ப க்ளோஸ் பிரண்டு ஆகிட்டாங்க...!

இத்தோட பதிவ முடிச்சுக்கறேன்....! கு.கு. வை பத்தி இன்னொரு பதிவுல நிறைய....!

*********************

வழக்கம் போல பிடிச்சிருந்தா ஒட்டு போடுங்க...! பிடிக்கலேன்னா பின்னூட்டத்துல திட்டுங்க சாமியோவ்வ்..............!

16 comments:

நட்புடன் ஜமால் said...

\\உங்கள் எச்சில் பழக்கம்,
தேசியக் கோடியில் உள்ள
சிவப்பின் அர்த்தத்தை
திரித்துக் கொண்டிருக்கிறது...!
\\

நல்லாதான் இருக்கு

நவநீதன் said...

நன்றி ஜமால் அண்ணே...!

SanJai காந்தி said...

என்னக் கொடுமை நவநீதன் இது? கூட்டாஞ்சோறையும் விட்டு வைக்கலையா? அதே தலைப்புல தான இனி நானும் பதிவு போடப் போறென்.. இன்னைக்கு கூட போட்ட்ருக்கேனே.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

பிரேம்குமார் said...

ஓ ! முதல் விளம்பரம் ரொம்ப விவகாரமா இருக்கும் போல.... டூ மச்

ச்சின்னப் பையன் said...

//உலகம் சுற்றுகிறது
என்கிற
உண்மை
இரண்டு பீருக்கு பின் தான்
தெரிகிறது...!
//

ஹிஹி... கீழே கீழே எழுதியிருக்கீங்க... இது நிஜமாவே கவிதைதான்......

:-)))

நவநீதன் said...

//SanJai காந்தி said...
என்னக் கொடுமை நவநீதன் இது? கூட்டாஞ்சோறையும் விட்டு வைக்கலையா? அதே தலைப்புல தான இனி நானும் பதிவு போடப் போறென்.. இன்னைக்கு கூட போட்ட்ருக்கேனே.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் //

நான் என்னங்க பண்றது...? பொறியல், அவியல், சுண்டல், கொத்து புரட்டா, கொத்தாத புரட்டான்னு எதையுமே நம்ம மக்கள் விட்டு வைக்கலியே...
புதுசோன்னு நினைச்சு, கூட்டாஞ்சோறு - ன்னு போட்டேன்...
அதுக்கும் நீங்க இருக்கீங்களா....?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி SanJai காந்தி....!

//பிரேம்குமார் said...

ஓ ! முதல் விளம்பரம் ரொம்ப விவகாரமா இருக்கும் போல.... டூ மச்//

நன்றி பிரேம்குமார்...!


// ச்சின்னப் பையன் said...
ஹிஹி... கீழே கீழே எழுதியிருக்கீங்க... இது நிஜமாவே கவிதைதான்......//

ஆச்சர்ய குறிய, விட்டுடீங்களே....!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ச்சின்னப் பையன்...!

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

Suresh said...

arumaiyana pathivu nanum oru pathivu potu irukan pdicha தமிழிச்ல ஒரு வோட்டு போடுங்க , யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

Newspaanai said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

கார்த்திகைப் பாண்டியன் said...

அந்த முதல் விளம்பரம் யாரு கொடுத்ததுன்னு சொல்லுங்க நண்பா.. யூஸ் பண்ணிக்கலாம்.. ச்சும்மா தமாசு.. நம்ம ஊருப்பக்கம் இருந்து எழுதுறீங்க.. வாழ்த்துக்கள்..

நவநீதன் said...

நன்றி பொன்னியின் செல்வன்..!

மணிகண்டன் said...

அண்ணேன், கு கு குறிப்புக்கள் எப்ப வரும் ?

நவநீதன் said...

ஞாபகம் வச்சிருந்து கேட்பதற்கு ரொம்ப நன்றி, மணிஜி....!
கட்சி வேலைகள் பின்னால் அழைப்பதால், சாரி, அலுவலக வேலைகள் முன்னால் அழைப்பதால், இப்ப எல்லாம் அதிகமா வலை பக்கமே வர முடியுறதில்ல....!
அப்புறம் எங்க எழுதுறது....!
பாக்கலாம்...!

senthil said...

Good work guys.. Keep it up..

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in