Friday, January 30, 2009

பாப்பா போட்ட தாழ்ப்பா....! (வயது வந்தவர்களுக்கு மட்டும்....)

"உங்கிட்ட பைக் இருக்கா? ஐ நாக்ஸ் போய் படம் பாக்கலாமா? பைக்ல உன்ன இருக்கமா கட்டி பிடிச்சுக்க்கறேன். ஆனா டிக்கெட் எல்லாம் நீதான் பாத்துக்கணும். ஒகேவா?" என்று அவள் என்னிடம் கேட்ட போது, அவள் என்னிடம் ப்ரபோஸ் பண்ணியதாகவே உணர்ந்தேன். இது நடந்த போது, சென்னையின் ஒரு பிரபல தனியார் கணினி பயிற்சியகத்தில் நாங்கள் நின்றிருந்தோம். அவள் ஒன்றும் அவ்வளவு அழகு இல்லை. டேய்...! இதெல்லாம் உன் ரேஞ்சுக்கு ரொம்ப ஓவர்...! எந்த பொண்ணுமே உன்ன திரும்பிக்கூட பாத்ததில்லடா...! என்று மனச்சாட்சி கேலி பேசியது. அதை எல்லாம் யாரு பாஸ் கேட்கிறா. ரெண்டு நாள் கழித்து, நான் அவ கிட்ட "ஐ லவ் யு" சொன்னேன்.
*************

"டேய்...! என்னடா ஒரு மொக்க பிகர பைக்ல கூட்டிகிட்டு சுத்துரியாமே...! என்ன லவ்வா? " - ரூம் மேட் தான் கேட்டான்.
"லவ்வா... சேச்சே.... நமக்கெல்லாம் மூணு ரூபா.... அரை மணி நேரம் அவ்வளவு தான்...."
என்ன புரியலையா...? மிக குறைந்த விலை காண்டமின் விலை மூன்று ரூபாய்....
*************

சிங்கார சென்னையில ஒரு பிகர வச்சு மெயின்டேயின் பண்றது ரொம்ப கஷ்டமாச்சென்னு கேக்குறீங்களா? இந்த பிரச்சனைய இப்டித்தான் சமாளிச்சேன்....
"அப்பா...! பிராஜெக்ட் பண்ணனும் ஒரு அஞ்சாயிரம் கொடுங்கப்பா...." எந்த பிராஜெக்ட் என்று அவரும் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை... ஹி.. ஹி...!
*************


இப்ப மூணு மாசம் ஆகிடுச்சு... அப்ப அப்ப மிஸ்டு கால் கொடுப்பா. நானும் கடல போட்டேன். கடல போடுறது அவ்வளவு ஈஸி இல்லைங்க.
1 . எங்கருக்க ?
2. என்ன பண்ணிக்கிட்டு இருக்க?
3 . சாப்பிட்டாச்சா...?
4 . என்ன சாப்பிட்ட?
5. என்ன கூட்டு?
6. என்ன பொரியல்?
7. என்ன கொழம்பு?
8. அப்புறம்?
9. இன்னும் தூங்கலியா?
இது போன்ற மொக்க கேள்விகளை தவிர்த்து, இன்னிக்கு அவகிட்ட என்ன பேசினேன்னா....
"எனக்கு எங்கம்மா மருதாணி வச்சு விட்டாங்க... "
"எங்க " - ரொம்ப முக்கியம்...!
"கைல.... ரெண்டு கைலயும்... "
எல்லோரும் மூஞ்சியிலையா மருதாணி வச்சுப்பாங்க....
"அப்புறம் எப்டி சாப்பிட்ட..." - உலக மகா புத்திசாலித்தனமான கேள்வியை கேட்டேன்..
"சாப்பிட்ட பிறகு தானே மருதாணியே வச்சாங்க...."
அதான் தெரியுமே .... திங்குரதுல உன்ன விட பெரிய ஆளு யாருமில்லைன்னு.... வாரா வாரம் ஓட்டல்ல காட்டு கட்டு கட்டுறத, பாத்துக் கிட்டு தானே இருக்கேன்...
"எங்கம்மா ஒரு கைல மருதாணி வச்சுக்கிட்டு இருந்தாங்களா... "
"ம் ..."
"எங்க அத்த இன்னொரு கைல மருதாணி வச்சுக்கிட்டு இருந்தாங்களா ...."
"ம் ..." - இதுல ஒரு கதையா தாங்கலடா சாமி....!
"திடீர்னு எங்க மாமா வந்தாரு... வந்து, எங்க அத்தை கிட்ட இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கன்னு கேட்டாரு... அதுக்கு உடனே அத்த சொன்னாங்க ம்ம்.... மருதாணி வச்சுகிட்டு இருக்கேன்.... உங்களுக்கும் வேணும்னா வச்சு விடவா...? ன்னு, உனக்கு கொழுப்பு ஜாஸ்தியாகிடுச்துன்னு சொல்லிட்டு மாமா போயிட்டாரு...."
*************

"எங்க இருக்க ?" - நான் தான் செல்போனில் கேட்டேன்...
"பஸ்ல... வீட்டுக்கு போயிட்டிருக்கேன்... "
"சரி! அப்புறம்...."
டேய்... இந்த அப்புறத்த விடவே மட்டிங்களாடா...?
"டாட்டா எலக்சி போகுது.... சின்ன வயசுல, ஏதாவது கார பாக்கும் போது, என் தம்பிகிட்ட அது என் வண்டின்னு சொல்லுவேன்... உடனே அவன், அத ஏற்கனவே அப்பா கிட்ட சொல்லி புக் பண்ணிட்டேம்பான்.... அதுக்கு முன்னால அந்த வண்டிய பாத்திருக்க கூட மாட்டான்..."
ஐயோ...கடவுளே....என்ன எப்டியாவது இந்த மாதிரியான மொக்கைல இருந்து காப்பாத்துப்பா....
கொஞ்ச நாளா, இவ இப்படி குழ்ந்தை தானமா பேசுறது ஜாஸ்தியாகிடுச்சு. வேகமா மேட்டர முடிச்சுட்டு கழாட்டி விட்ரனும்.....
"ம்.... ஸ்டாப் வந்துருச்சு.... ஆமா உங்க ரூமுக்கு என்ன கூப்பிடவே மாட்டியா...?"
ஆஹா, அதுவா வந்து மாட்டுது.... யூஸ் பண்ணிக்கடா...
"நாளைக்கு சாயுங்காலம் ஆறுமணிக்கு வாயேன்..."
*************

எங்கள் ரூம்! மாலை ஆறு மணி... !
அவள் வந்தாள். உள்ளே நுழைந்ததும், பேசக்கூட இடம் கொடுக்காமல், கட்டி அணைத்தேன். அவளுடைய உருண்டு திரண்ட மார்பகங்கள் என் மார்பில் அழுந்துவதை உணர்ந்தேன். கட்டி பிடித்துக்கொண்டே பின்னங்கழுத்திலும் காத்து மடல்களிலும், மீசையால் மென்மையாய் உராய்ந்தேன்.



இப்போது அவள் படுக்கை அறையில் இருந்த நிலைக்கண்ணாடிக்கு முன்பு, புடவை அவிழ்க்கப்பட்டு உரித்த கோழியாய் நின்றிருந்தாள். அவளை பின்புறம் இருந்து நான் கட்டிப் பிடிக்க...., அவள் பின்புறமாக என் கழுத்தில் கைகளை மாலையாக தொடுக்க....., என் கைகள் அவள் ஜாக்கட்டிலும், தொப்புள் பிரதேசங்களிலும் விளையாட..., அவள் வெக்கத்தில் துடிக்க..., என் இதழ்கள் அவள் கழுத்து வளைவில் விளையாட..., அவள் கூச்சத்தில் நெளிய...., என் கைகள் அவள் ஜாக்கெட் பொத்தான்களுக்கு ஒவ்வொன்றாய் விடுதலை கொடுக்க...., (எப்ப தான் இந்த வரிய, முடிப்பீங்க?)

அவள் தங்க சங்கிலியை வாயில் கவ்வியபடி, என் படுக்கையில் நிர்வாணமாக படுத்திருந்தாள். இரண்டு கைகளையும் நீட்டி வா என்று அழைத்தாள். நான் அருகே போனேன். உணர்ச்சிகளின் சங்கமத்தில், உரையாடலுக்கு என்ன வேலை? அவள் மேல் கை வைக்க எத்தனிக்கையில், "ட்ரிங்... ட்ரிங்...". நான் சில விநாடிகள் அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளும் அப்படித்தான். போனை எடுக்கும் படி கண் அசைத்தாள்.
"என்னடா பண்ணிக்கிட்டு இருக்க??? " - அவள் குரல். அதெப்படி நேரிலும் இருக்கிறாள். போனிலும் அவள் குரல்...! கண்ணை கசக்கி விட்டு பார்த்தால், அடச்சே...எல்லாம் கனவு...!
"நாளைக்கு வரும் போது, ப்ளூ கலர் புடவை கட்டிக்கிட்டு வா..."
"ஏன்டா..?"
இன்னிக்கு கனவுல உன்ன அந்த புடவைல தான் பார்த்தேன்... என்று சொல்ல நினைத்தேன்.
"உன்ன புடவையில பாத்து ரொம்ப நாளாச்சு..."
" சரி... குட் நைட்... ஸ்வீட் ட்ரீம்ஸ்... வச்சுரவா..."
என்னது... ஸ்வீட் ட்ரீம்சா... வந்த நல்ல கனவைத்தான் கலச்சுட்டியேடி...
*************

மறுநாள்....! மலை ஆறு மணி....! அவள் வந்தாள்...! வருவதற்கு முன்பே, ரூமை கொஞ்சம் சுத்தப் படுத்தி இருந்தேன். ரூம் மேட்களை ரூமில் இருக்காதீர்கள் என்று விரட்டி விட்டிருந்தேன்... (ஒரு முன்னேற்ப்பாடு தான்... ஹி.. ஹி...)
இப்போது நானும் அவளும் மட்டும் தனியாக....!
கொஞ்ச நேரம் ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன்....மன்னிக்கவும்... தவறாக சொல்லிவிட்டேன்.... அவள் மடியில் படுத்து பேசிக்கொண்டிருந்தேன் என்பது தான் சரியாக இருக்கும்...! கட்டியணைத்தேன்....! இதழ்களில் முத்தமிட்டேன்....! இதெல்லாம் தேவையை உணர்த்தும் முயற்சி என்று மஞ்சள் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன்....

மூன்றாவது இதழ் முத்தத்தின் போது, காலிங் பெல் சத்தம் கேட்டது....! கண்டுகொள்ளாமல் இதழ் முத்தத்தை தொடர்ந்து கொண்டிருந்தேன்...! அவள் தான் விலக்கி, "யாருன்னு பாரு.." என்றாள். போக மனமில்லாமல் போனேன். ஒரு செல்போன் கம்பெனியின் விற்பனை பிரதிநிதி, "என்ன சிம் சார் யூஸ் பண்றீங்க?" என்றார். எரிச்சலோடு அவரை அனுப்பி விட்டு திரும்பி பார்த்தால், உடையை சரி செய்து கொண்டு கிளம்புவதற்கு ரெடியாக நின்றாள்....!
வட போச்சே....!
*************

அடுத்த பிளான் போட்டேன்...
"நாளைக்கு எனக்கு பொறந்த நாளு...." - என்னைக்கோ வர்ற பிறந்த நாளை, பிளானுக்காக முன்னாடியே கொண்டுவந்துட்டேன்... இந்த போழப்புக்குன்னு நீங்க திட்டுறது எனக்கு கேக்குது. இருந்தாலும் எனக்கு வேற வழி தெரியல...
"அப்டியா...எங்க வச்சு கொண்டாடலாம்?"
"உங்க வீட்ல... நீதான் உங்க வீட்ல யாரும் இருக்க மாட்டாங்கன்னு சொன்னேல்ல..."
இதாங்க பிளான்...!
"சரி... வந்துரு.."
"எனக்கு நாளைக்கு என்ன கிப்ட் கொடுக்க போற...."
"அது சஸ்பென்ஸ்"
பிளான் நல்லாவே ஒர்க் அவுட் ஆகுது...!
*************

அடுத்த நாள்.... அவள் வீட்டிற்கு போனேன்...!
வீட்டின் முற்றத்தில் மட்டுமே விளக்கு எரிந்து கொண்டிருந்தது. உள்ளே ஒரே இருளாய். இருந்த ஒரே வெளிச்சம் கேக்கின் மேல் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியும், அவள் கண்களில் தெரிந்த பிரகாசமும் தான். "ஹேப்பி பெர்த் டே டூ யு...." என அழகான குரலில் பாடத் தொடங்கினாள்.மெழுகுவர்த்தியை ஊத்தி அணைக்கும் முன், "மனசுல ஏதாவது நினைச்சுக்கோ.... பெர்த் டே விஷ்.... கண்டிப்பா நடக்கும்... " என்றாள். அவளை இன்று அடைய வேண்டும் என்ற பிறந்த நாள் விருப்பத்தை நினைத்துக் கொண்டேன். கேக்கை வெட்டி அவளுக்கு ஊட்டினேன். அதில் பாதியயு எனக்கு ஊட்டினாள்.

"கிப்ட்?" என்றேன். என் கன்னத்தில் முத்தமிட்டு "இதான் கிப்ட்..." என்றாள். ஏசு நாதர் பாணியில் மறு கன்னத்தையும் காட்டினேன்.புன்னகையோடு முத்தமிட்டாள். பிறகு என் மார்பில் சாய்ந்து கதை பேச ஆரம்பித்து விட்டாள். அவள் என்ன பேசினாள் என்று நான் சத்தியமாக கவனிக்க வில்லை. என் கண்கள் அவள் மார்பகத்தின் மேலே நிலை குத்தியிருக்க, தேர்வு முடிவுக்கு காத்திருக்கும் மாணவனைப் போல பதட்டத்தோடு இருந்தேன். ஒரு ஐந்து நிமிடம் போயிருக்கும். அவள் இன்னமும் பேசிக் கொண்டிருந்தாள். நினைத்து பார்க்கவே முடியாத பாகத்தில் என் கையை வைத்து அழுத்தினேன். சட்டென்று நிமிர்ந்து என்னை தள்ளி விட்டாள். அவள் கண்களில் அழுகையும் ஆத்திரமும் பீறிட்டன.
"நீ இப்டி பண்ணுவேன்னு எதிர்பார்க்கல"
"இதுல என்ன தப்பு இருக்கு....நாம லவ் பண்றோம்... கல்யாணம் பண்ணிக்கப் போறோம். "
- நல்லவன் மாதிரி நடித்தேன்.
"அதுக்காக கல்யாணத்துக்கு முன்னாலயேவா.... உனக்கு என் உடம்பு மேல தான் ஆச. இத உன் ரூமுக்கு வந்தப்பவே கவனிச்சேன்."
"என் மேல நம்பிக்கை இல்லையா....?" - காதலிக்கும் எல்லோருடைய கடேசி அஸ்திரத்தை பிரயோகித்தேன்.
"இருந்தது.... அஞ்சு நிமிசத்துக்கு முன்னால வரைககும்... ஆனா இப்ப இல்ல... " என்று தீர்க்கமான குரலில் சொல்லிவிட்டு, என்னை வெளியே அனுப்பி கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டாள். (இப்ப தலைப்போட அர்த்தம் புரிஞ்சுதா...?)
*************

பி.கு. 1
இந்த கதைக்கான கரு மனதில் தோன்றியதுமே, நான் படித்தது கேபிள் சங்கரின் இந்த நிதர்சன கதைகளைத்தான்.
என்னை பிடிக்கலையா....?
தேவர் மாப்பிள்ளை....
கல்யாணம்....
இவற்றில் எதன் தாக்கமும் வந்துவிடக் கூடாதே என்ற பயம் வேறு. தாக்கம் இருக்கிறதா இல்லையா? என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

பி.கு.2 :
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால், பின்னூட்டமிட்டும், தமிழ் மணத்திலும் தமிழிஷிலும் ஓட்டு போட்டு உற்ச்சாக படுத்துங்கள். பிடிக்க வில்லை என்றால், பின்னூடத்தில் உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.

15 comments:

நட்புடன் ஜமால் said...

ஏன் ...

நட்புடன் ஜமால் said...

ஓட்டு போட்டாச்சு.

கார்த்திகைப் பாண்டியன் said...

கிளுகிளுப்பு சமாச்சாரத்தை மட்டும் கொஞ்சம் கொரச்சிருக்கலாம்.. கதை நல்லா இருக்கு..

shabi said...

vote pottacchu/idhu innum niraya kadhaihal ezhudhungal

மங்களூர் சிவா said...

பதிவோட தலைப்பு ரொம்ப நல்லா புரிஞ்சது!!
:)))

அருமை

ஓட்டு போட்டாச்சு!

மணிகண்டன் said...

நவநீதன், பிச்சி உதரறீங்க.

malar said...

இது...........யாரையா இந்த சீமான் போட்டு இந்த தாக்கு தாக்கி இருகிஹ........

நாடோடிப் பையன் said...

கதை நல்லா இருக்கு.

Anonymous said...

ம்ஹூம் ஒண்யும் எபக்ட் இல்ல.

ஆதவா said...

தலைப்புக்கேத்த கதைதான்.. கொஞ்சம் விரசமா இருக்கு...

நம்மள மாதிரி ஆளுங்களுக்கு ஓகேதான் :D

ஆதவா said...

அந்த மூணாவது படம் கூட ஓகே சார்... இரண்டாவது படம்தான் வீட்ல வெச்சு பார்க்க முடியலை...

ஏதோ நம்மளை ஒருமாதிரியா பார்க்கறாய்ங்க...

Cable சங்கர் said...

நம்ம கதையையும், ஒரு பொருட்டா மதிச்சு, உங்க பக்கதில இணைப்பு கொடுத்ததுக்கு மிக்க் நன்றி நவநீதன்..

ஷாஜி said...

//வட போச்சே....!//

-புரியலையே....

நவநீதன் said...

ஊருக்கு போய் விட்டதால், ஒரு ரெண்டு நாளா வலை பக்கம் எட்டி பார்க்க முடியவில்லை....
பின்னூட்டம் கொஞ்சம் தாமதாமாய் இட்டதற்கு மன்னிக்கவும்...

>> நட்புடன் ஜமால் said...
>> ஓட்டு போட்டாச்சு.
நன்றி ஜமால்....!

>> கார்த்திகைப் பாண்டியன் said...
>>கிளுகிளுப்பு சமாச்சாரத்தை மட்டும் கொஞ்சம் கொரச்சிருக்கலாம்.. கதை நல்லா இருக்கு..
ஒரு காமுகனின் பார்வையில் எழுதப்பட்டதால் அதை தவிர்க்க முடியவில்லை....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கார்த்திகைப் பாண்டியன்!

>>shabi said...
>> vote pottacchu/idhu innum niraya kadhaihal ezhudhungal
கண்டிப்பா எழுதுறேன்... நன்றி shabi...!

>>மங்களூர் சிவா said...
>> பதிவோட தலைப்பு ரொம்ப நல்லா புரிஞ்சது!!
>>அருமை
>>ஓட்டு போட்டாச்சு!
ரொம்ப நன்றி சிவா...!

>>மணிகண்டன் said...
>>நவநீதன், பிச்சி உதரறீங்க.
ரொம்ப நன்றி மணிகண்டன்....

>>malar said...
>> இது...........யாரையா இந்த சீமான் போட்டு இந்த தாக்கு தாக்கி இருகிஹ........
நான் யாரையும் தாக்கவில்லை.... இது ஒரு கற்பனை கதை...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மலர்...

>>நாடோடிப் பையன் said...
>> கதை நல்லா இருக்கு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நாடோடிப் பையன் ....

>>Anonymous said...
>>ம்ஹூம் ஒண்யும் எபக்ட் இல்ல.
உங்கள் கருத்துக்கு நன்றி அனானி...
எந்த மாதிரியான எபக்ட்டை நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள்?

நவநீதன் said...

>> ஆதவா said...
>> தலைப்புக்கேத்த கதைதான்.. கொஞ்சம் விரசமா இருக்கு...
>> நம்மள மாதிரி ஆளுங்களுக்கு ஓகேதான்
நன்றி அதவா...!


>> Cable Sankar said...
>> நம்ம கதையையும், ஒரு பொருட்டா மதிச்சு, உங்க பக்கதில இணைப்பு கொடுத்ததுக்கு >> மிக்க் நன்றி நவநீதன்..
உங்க கதை தான் ஒரு முன் மாதிரி தலைவா....!
80,000 ஹிட்ஸ்....
200 பதிவு போட்டுள்ள நீங்கள் தான் பெரிய பதிவர்...
உங்கள் பக்கத்திற்கு இணைப்பு கொடுத்தது எனக்கு தான் பெருமை...!

>>ஷாஜி said...
>> //வட போச்சே....!//
>> -புரியலையே....
தனக்கு கிடைக்கவேண்டியவள் கிடைக்க வில்லையே....! என்கிற ஆதங்கம் தான் அது...
இப்போது புரிந்ததா....?
நன்றி ஷாஜி...!