Wednesday, November 19, 2008

சே.. எப்படி எல்லாம் யோசிக்குராங்கய்யா ...


நண்பர் அசோக் பெரிய பெட்டிக் கடையில் (ஒரு பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோரை வேற எப்டிங்க சொல்லறது...???) மொபைல் செக்சனில் மேனேஜராக இருக்கிறார். யாருடைய வேலை அதிகம் சிரமம் என்று பேச்சு வந்த போது இந்த சம்பவத்தை குறிப்பிட்டார். அதை அப்படியே தருகிறேன்.

"நண்பா... எங்க ஸ்டோர்ல exchange offer போட்ருக்காங்க... அதுல ஒரு திருட்டு mobile வந்தது... இப்போ எல்லாம் மொபைல் ரொம்ப advance -ஆகிடுச்சு. samsung mobile -ல emergency SMS எல்லாம் வந்துடுச்சு. அதாவது நீங்க emergency நம்பர்-ன்னு மூணு நம்பர் பதிஞ்சு வச்சுக்கலாம். யாரவது உங்க மொபைலை திருடி வேற ஒரு சிம் காரடை போடும் போது அந்த மூணு நம்பருக்கும் இது ஒரு மெசேஜ் அனுப்பும். எங்க ஸ்டோர்ல செக் பண்றதுக்காக வேற சிம்ம போட்டு பார்த்தாங்க. கொண்டுவந்தவன் exchage offer-ல வேற மொபில வாங்கிட்டு போயிட்டான். திருட்டு கொடுத்தவன் போன் பண்ணி கண்டமேனிக்கு திட்டுறான். இப்போ இந்த நிலமையில நீங்க இருந்திருந்தா என்ன பண்ணிருப்பீங்க...?"

"நான் என்ன பண்ணியிருப்பேன்?? மொபைல திருட்டு கொடுத்தவன் கிட்ட கொடுத்துட்டு செலவ கம்பனி தான் ஏத்துக்கணும்னு சொல்லி management-கிட்ட பேசியிருப்பேன்..."

"நண்பா... இதே மாதிரி வேற சில பேர் ஒரு மொபைல exchange offer-ல கொடுத்துட்டு, இன்னொருத்தன அனுப்பி திருட்டு மொபைல்ல்னு சொல்ல சொல்லி திரும்ப வாங்கிட்டு போயிட்டங்கன்னா என்ன பண்ணுவீங்க?? அதுவும் இல்லாம நீங்க வேல பாக்குற கம்பனிக்கு நீங்க எந்த செலவும் ஏற்படுத்த கூடாது. அப்படி வேல பாக்குறது தான் கரெக்ட்."

"அப்போ வேற வழி இல்ல. போலிசுக்கு போக வேண்டியது தான்... "

"நண்பா... போலிசுக்கு போனா பிரஸ்சுக்கு செய்தி போயிடும்...அப்புறம் எங்க ஸ்டோர்ல இருக்குற மொபைல் எல்லாமே திருட்டு மொபைல்-ன்னு பேச ஆரம்பிச்சுருவாங்க...யாவரம் படுத்திரும்..."

எந்த பக்கம் போனாலும் முட்டு கட்ட போடுறானே அப்படீன்னு ஒரு சில விநாடிகள் அமைதியாக அவனையே பார்த்தேன்...
"சரி அப்போ நீ என்ன தான் பண்ணின?" - நேரடியாக கேட்டே விட்டேன்.
"நான் என்ன பண்ணேன்னா... திருட்டு மொபைல கொண்டு வந்தவன் புது மொபைல வாங்கிட்டு புது சிம்மும் எங்க கடையில இருந்து வாங்கிருந்தான். எங்க ஸ்டோர்ல வாங்கி இருந்ததால அந்த நம்பர் எங்க கிட்ட இருந்தது. அவனுக்கு போன போட்டு, நாங்க வித்த மொபைல்ல software problem இருக்கு. உடனே கொண்டு வாங்க சரி பண்ணி தர்றேன் அப்படீன்னு கடை பையன விட்டு சொல்ல சொன்னேன். அவனும் சரின்னு வந்தான். அவன் வர்றதுக்கு முன்னாலேயே திருட்டு கொடுத்தவன, ஸ்டோருக்கு போன் போட்டு வர சொல்லிட்டேன். இப்ப, திருடுனவன் வந்ததும் அவன் கிட்ட இருந்த மொபைல வாங்கிட்டு, திருட்டு மொபைல அவன் கைல இந்தாப்பா உன் மொபைலுன்னு கொடுத்துட்டு, திருட்டு கொடுத்தவன் கிட்ட உன் மொபைலு அவன்கிட்ட தான் இருக்குன்னு சொல்லி அங்க இருந்து நேரடியா போலிஸ் ஸ்டேசனுக்கு கூட்டி போக ஆள் அனுப்பிட்டேன். போலீசுல பேர் வராத படி கவனிக்க சொல்லி, எங்க டேமஜருக்கு போன் பண்ணி சொல்லிட்டேன்... "

அவனோட இந்த பதில கேட்டதும், இந்த பதிவின் தலைப்ப நான் சொன்னேன்....

12 comments:

ரவி said...

என்னடா ஹிட்டு வருது ஆனா யாரும் பின்னூட்டம் போடமாட்டேன்ங்குறாங்களே அப்படீன்னு பாக்குறீங்களா ?

நம்ம தமிழ் பதிவர்கள் சோம்பேறிகள்...

வேர்ட் வெரிப்பிக்கேஷனை நீக்குங்க...

மற்றபடி எல்.ஜி மொபைலுக்கு விளம்பரம் கொடுத்ததுக்கு நன்றி...

http://urupudaathathu.blogspot.com/ said...

அரை சதத்திற்கு வாழ்த்துக்கள் நணபரே

அப்புறம் இந்த (Word verification)
வேர்ட் வெரிப்பிக்கேஷனை நீக்குங்க...

நவநீதன் said...

நன்றி செந்தழல் மற்றும் அணிமா...

ஆமால்ல... (ஆமாவா இல்லையான்னு கேக்க கூடாது.) அம்பது அடிச்சசுல்ல....
அம்பது என்னங்க? அதுக்கு மேலேயே அடிச்சுருக்கேன்...!!!
டாஸ்மாக் பாருல...ஹி... ஹி... !

http://urupudaathathu.blogspot.com/ said...

வேர்ட் வெரிப்பிக்கேஷனை நீக்கியதற்கு மிக்க நன்றி..

நாங்க எல்லாம் நைன்ட்டின்னு தான் சொல்லுவோம்.. ( கட்டிங்க்னா,90 )
அம்பது மேல அடிசீங்க அப்படின்னு சொன்ன நீங்க சின்ன புள்ள..

நவநீதன் said...

அப்ப நீங்க இதுல கரை (பாட்டில்) கண்டவரா இருப்பீங்க போல இருக்கே...

நான் பேசிக்காவே கொஞ்சம் நல்லவங்க...
அதனால அடிப்போம்... ஆனா அடிக்காத மாதிரி காட்டிபோம்...
இன்னும் இந்த உலகம் நம்மள நல்லவன்னு நம்பிகிட்டு இருக்கா???

http://urupudaathathu.blogspot.com/ said...

/// நவநீதன் said...

நான் பேசிக்காவே கொஞ்சம் நல்லவங்க...
அதனால அடிப்போம்... ஆனா அடிக்காத மாதிரி காட்டிபோம்...
இன்னும் இந்த உலகம் நம்மள நல்லவன்னு நம்பிகிட்டு இருக்கா???////////


இப்படி எல்லாம் சொன்னா நாங்க நம்பிடுவோமா என்ன??
ஒரே தாகமா இருக்கு, வாங்கி தண்ணி குடிச்சிட்டு வரலாம்..
( நான் சொன்னது தண்ணி , என்னையும் நம்புங்கோ )

ஆட்காட்டி said...

சே நமக்கு எல்லாம் இப்பிடித் தோண மாட்டேங்குதே..

நவநீதன் said...

@அணிமா,
தண்ணி தானே... (நானும் தண்ணிய தான் சொல்றேன் )
வாங்க போகலாம்...

@ஆட்காட்டி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே....

நட்புடன் ஜமால் said...

இப்படி ஒரு அருமையான பதிவப்போட்டு, இனி திருட்டு மொபைலை விக்க வற்றவனுங்களை உஷார் பன்னீட்டீங்களே.

என்ன செய்தாலும் ஏதாவது ஒன்னு சொல்லிடவேண்டியது -

என்ன பன்றதுங்க மொக்கையா பதிவு தான் போட தெரியலை, ஒரு கமெண்டாவது முயற்சி தான்.

http://urupudaathathu.blogspot.com/ said...

/////நவநீதன் said...

@அணிமா,
தண்ணி தானே... (நானும் தண்ணிய தான் சொல்றேன் )
வாங்க போகலாம்...////////

நான் தண்ணி குடிக்க போறேன்..
சொல்லிட்டேன்.. சொல்லிட்டேன்..
பில் நீங்க தான் குடுக்குனும்

நவநீதன் said...

நன்றி ஜமால்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

நவநீதன் said...

அணிமா அண்ணே (என்னா ஒரு எதுகை மோனை பாருங்க...)...
எப்ப வேணும்னாலும் நானும் ரெடிண்ணே...