Sunday, November 2, 2008

சினிமாவும் நானும்....

இந்த தொடர் பதிவை எழுதலைன்னா.. வலையுலகம் என்னை பதிவன் என்று மதிக்காததாலும், நண்பர் மணிகண்டனின் அழைப்பை தட்ட முடியாததாலும், எனக்கு பதிவெழுத ரொம்ப நாள் கழித்து நேரம் கிடைத்ததாலும்,.....

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
வழக்கம் போல் எந்த வயதுன்னு ஞாபகம் இல்ல... ஆனா ஒரு நாள் பள்ளிகூடத்துக்கு கட் அடிச்சுட்டு எங்க ஏரியா பக்கத்துல இருந்த மஹாராணி தியேட்டருக்கு படத்துக்கு போயிட்டேன். படத்துக்கு காசுக்கு வீட்டுல சுட்டுட்டேன். ரெண்டரை மணி ஆட்டம். மாட்னி ஷோ. கர்ணன் படம். படம் பார்த்துட்டு ஜாலியா வெளிய வர்றேன். திடீர்னு பார்த்தா, எங்கயோ பார்த்தா மாதிரி இருந்தது. நல்லா கவனிச்சு பார்த்தா, எங்க அப்பா ஒரு பிரம்போட நிக்கிறார். அடியோ அடின்னு அடி... அப்பாவுக்கு தப்பிச்சு ஓடிப் போயி, ராத்திரி எல்லாரும் தூங்கினதுக்கு அப்புறம், பின்பக்கமா வீட்டுக்கு போறேன். அம்மா சாப்பாடு போட்டுகிட்டே கேட்டாங்க "ஏன்டா வீட்டுல எடுத்தது தான் எடுத்த, போயும் போயும் கர்ணன் படத்துக்காடா போவ...வேற நல்ல படமே கிடைக்கலையாடா...."
ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சேவல்...

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
ரெண்டு படம் பார்த்தேன். ஒன்னு சரோஜா... அரங்கில பார்த்திருக்கலாமோ என்ற ஏக்கத்தை உண்டு பண்ணியது... ரெண்டாவது ராமன் தேடிய சீதை... நம்பலையே பீலிங் பண்ண வச்சுட்டாங்கப்பா....


4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா ?
காதல் கொண்டேன், 7g ரெயின் போ காலனி, தசாவதாரம்.


5. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
அரசியல் எல்லா இடங்கள்லயும் இருக்கு... எங்க ஆபிஸ்ல கூட அரசியல் பண்ணுறாங்க... சினிமாவுலயும் அரசியல் இருக்கு... ஏன் அரசியல்ல கூட அரசியல் இருக்கு... அரசியல்ல இருக்குற சினிமா வேற .... சினிமாவில இருக்குற அரசியல் வேற... நீங்க எந்த அரசியல் பத்தி கேக்குறீங்க... (பதில் தெரியலேன்னா இப்பிடி குழப்புறது நம்ம பழக்கம் .... ஹி...ஹி...)

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
அபூர்வ சகோதரர்கள் படத்துல எப்படி அந்த குட்ட கமல கொண்டு வந்தாங்கன்னு இன்னும் ஆச்சர்யமா இருக்கு...
தசாவதாரத்துல, ஆரம்ப காட்சிகள்ல பறவை பார்வையில கேமரா பண்ணியிருக்கிற அதகளம் சூப்பர். அதே படத்துல, சைனீஸ் கமல முதல் முதலா காட்டுற சண்டை காட்சியில கேமராவும், ஒருவனும் கமலின் இடது புறம் இருப்பார்கள். கமல் அவனை தூக்கி வலது புறம் வீசுவார். இப்போது கேமராவும் வலது புறம் (கண்ணை உறுத்தாமல் ) நகர்ந்திருக்கும்....


6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
நிறையா... பதிவுலம் , தின மலர், ஆனந்த விகடன், குமுதம் இப்படி...


7.தமிழ்ச்சினிமா இசை?
தமிழ் சினிமா இசையை புதிய தளத்திற்கு இளையராஜா, எடுத்து சென்றார் என்பதை மறுக்க முடியாது. 80 களில், வந்த பாடல்களை இப்போதும் மறக்க முடியாது. ஆனால், ஏ ஆர் ரஹ்மானின் இசை, ரொம்பவும் புதுசா இருக்கு. ஏ ஆர் ரஹ்மான் இசையில் குவாலிட்டி-யை எதிர்பார்த்து போகலாம், துல்லியமும் இருக்கும். loud speaker-ல் இளைய ராஜாவும், head set-ல் ரஹுமானும் கேட்க பிடிக்கிறது.


௮. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
ம்ம்... நிறைய பாத்திருக்கிறேன்.... முக்காவாசி படத்துல, வசனமே இருக்காது.. அப்படியே இருந்தாலும் ஒண்ணுமே புரியாது... நீங்க எதோ உண்மையாவே உலகப் படம்ம்னு நினைச்சுடாதீங்க.... shame shame puppy shame....
இது தானே உலக படம். உலகத்துல எல்லாருக்கும் புரிகிற படம்...


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
நமக்கு நேரடி தொடர்பு இருக்குங்க. அவங்களுக்கு தான் இல்ல... நம்ம நேரடியா தானே
படம் பாக்குறோம்...அவங்க தான் நம்மள வந்து பாக்க மாட்டேங்கிறாங்க...

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நான் ஜோசியன் இல்லை... (ஹி... ஹி...)


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள்,செய்திகள் எதுவுமே பத்திரிகைகள்,தொலைக்காட்சி,இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
pass...
(தெரியல்லேன்னா வேற என்ன பண்றது... சொல்லுங்க...)


இந்த பதிவை எழுத யாரையாவது கூப்பிட்டு, அவங்கள கொடுமை படுத்த விரும்பல....
இந்த பதிவை எழுத யாரையாவது கூப்பிட்டு, அவங்கள கொடுமை படுத்த விரும்பல....
அப்படியே கொடுமை படுத்த நினைச்சாலும் யாரும் கிடைக்கப் போறதில்ல...

5 comments:

மணிகண்டன் said...

naveneethan, thanks for writing on my request..

"shame shame puppy shame" - world class film !!!!

நவநீதன் said...

ஹி... ஹி...
:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மணிகண்டன்....

முரளிகண்ணன் said...

சுவராசியமாக எழுதியிருக்கிறீர்கள் நவனீதன்

Veera said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்!

நவநீதன் said...

நன்றி முரளி கண்ணன் மற்றும் வீர சுந்தர்....