Wednesday, October 22, 2008

ஒரு டகுல பாண்டியின் முதலிரவில் நடந்தது என்ன..??? - அதிர்ச்சி ரிப்போர்ட்

இதில் வரும் சம்பவங்களும் பாத்திரங்களும் கற்பனையே. யாருடைய வாழ்க்கையோடும் ஒத்துப் போனால் அது தற்செயலானதே..

நான் கட்டிலில் உட்கார்ந்திருந்தேன். அவள் பால் டம்ளருடன் உள்ளே வந்தாள். அவள் சைசுடன் ஒப்பிடும் போது பால் டம்ளர் சிறியதாக இருந்தது. சைசுன்னா தப்பா நினைச்சுக்காதீங்க. அவ கொஞ்சம் குண்டு. இன்னிக்கு காலையில (கல்யாணத்தப்ப), ஒருத்தர் "இந்த காலத்து பசங்களுக்கு நமீதா மாதிரி கொழு கொழுன்னு இருந்தா தான் பிடிக்குது " ன்னு கமெண்ட்டிட்டார். ஹி.. ஹி.. (ஐ... இப்பவே ஒரு கமெண்ட் கெடச்சுருச்சு...).



இப்ப அவ பக்கத்தில் வந்திருந்தாள். பால் டம்ளரை நீட்டினாள். வாங்கிக் கொண்டேன். அவள் கையில் பால் டம்ளர் சிறியதாக இருந்ததாலும், அவளுக்கு ஒரு சொம்பு பாலே பத்தாது என்பதாலும், நான் கொஞ்சம் பதட்டமாக இருந்ததாலும், (இப்பிடியே எத்தனை இருந்தாதாலும் போடுவீங்க???) .... பாலை குடிப்பது போல் பாவனை செய்து விட்டு அவளிடம் கொடுத்து விட்டேன். அவள் கண நேரத்தில் அதை ஸ்வாகா பண்ணி விட்டாள்.

"இங்க தானே இருக்கும். காணோம் ??", என்று சொல்லிக்கொண்டே அவள் பருத்த இடையை பற்றினேன்.
"என்ன??" - கொஞ்சம் மிரட்டும் தொனியில் தான் அவள் கேட்டாள்.
"இல்ல, இடுப்பு இங்க தானே இருக்கும். அத காணோமே-ன்னு கேட்டேன்..." - என்று கொஞ்சம் பம்மினேன். ஐயோ... ஐயோ... இதை மட்டும் என் பிரண்ட்ஸ் கேட்ட்ருந்தாங்கன்னா, என்ன அடிச்சே கொன்றுப்பாங்க...
"ச்சீ.. போங்க..." என்று கையை தட்டி விட்டாள். இதுக்கு பேரு தான் வெட்கமாம். கடவுளே என்னை எப்படியாவது காப்பாத்துப்பா...


என் பார்வை அங்கே வைக்கப் பட்டிருந்த லட்டு மேல் விழுந்தது. முதல்வன் படத்தில், அர்ஜுனும், மனீஷா கொய்ராலாவும் பீடாவை இரண்டு வாய்களுக்கும் இடையில் கால்பந்து விளையாடுவதைப் போல லட்டை வைத்து விளையாடினால் என்ன என்ற எண்ணம் மனதில் ஓடியது. அதை செயலாக்கிட முடிவு செய்து, ஒரு லட்டை எடுத்து அவள் வாயில் ஊட்டினேன். லபக் என்று லட்டை வாங்கிக்கொண்டாள்(வாயால் தான்... ஹி.. ஹி..). நல்ல வேளை கையை கடிக்க வில்லை. இப்போது அவள் ஆரம்பித்து விட்டாள் (Now, she takes over.). லட்டை சாப்பிடத்தான். ஒவ்வொரு பதார்த்தமாக பதம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் எப்படி கொழு கொழு என்று இருக்கிறாள் என்பதற்கான காரணம் அப்போது தான் தெரிந்தது. இப்படி சாப்பிட்டே என் சொத்தில் பாதியை அழிக்கப் போகிறாள். நான் பரிதாபமாக அங்கே உட்கார்ந்திருந்தேன். அவளுடைய வாய் மெஷினை விட வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது.

சரி. நாம ஆரம்பிக்கலாம் என்று சொல்லி என் வாயை அவள் அருகே கொண்டு போனேன். ஒரே வாய் துர்நாற்றம். எல்லாம் லட்டு செய்த மாயம். சரி உதட்டுல முத்தமிட வேண்டாம் என்று பக்கத்தில் இருந்த கன்னத்துக்கு இடத்தை (டார்கெட்டை) மாற்றினேன். கன்னத்தில் இருந்த ஒரு பவுடரில் ஒரு லேயர் என் வாய்க்குள் போனது.


சரி அடுத்து என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, "அந்த ஃபேனை போடுங்க... வேர்க்குது " - என்றாள். பெண்கள் எப்படித் தான் இப்படி அடுத்தவர்களை ஈஸியாக வேலை வாங்குகிறார்களோ? என்று எண்ணிக்கொண்டே ஃபேனை போட்டேன். வேலை வாங்குவது என்றவுடன் ஒரு சம்பவத்தின் ஞாபகம் வருகிறது. அதையும் இங்கே இடை செருகலாக சொருகி விடுகிறேன்.

நாங்கள் மேன்சனில் தங்கி இருந்த போது, "இந்த துவைக்கிற வேலைக்காகவே கல்யாணம் பண்ணிக்கனும்டா மச்சி..." என்று அங்கலாய்ப்பதுண்டு.
அப்போது ஒருவன் "இதுக்காக கல்யாணம் பண்ணினேன்னா, அப்புறம் தொவைக்கிற வேலை டபுள் ஆகிடும். அவ துணியவும் செத்து துவைக்க வேண்டி வரும். ஜாக்கிரதை" என்றான்.

இப்படியாக நான் சிந்தனையில் இருக்கும் போது, "நீங்க சாப்பிடலை?" என்று அவள் தான் (ஏழெட்டு தட்டுகளை சுத்தமாக முடித்த பிறகு) மனமுவந்து கேட்டாள். மனைவி சொல்லை தட்ட முடியுமா?? அதுவும் முதலிரவில். கடேசியாக மிச்சமிருந்த ஒரு லட்டை எடுத்து அதில் பாதியை கடித்தேன். மீதியில் என் சட்டை குளித்தது. ஹி..ஹி.. என்று பல்லைக் காட்டினாள்.

"சரி எனக்கு தூக்கம் வருது " என்று சொல்லிவிட்டு படுத்த அடுத்த கணத்தில் குறட்டை விட ஆரம்பித்தாள். நான் வேகமாக ஓடிக்கொண்டிருந்த ஃ பேனை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

8 comments:

யூர்கன் க்ருகியர் said...

எவ்வளவு பெரிய தண்டனை?
பாவம்!

சிவகுமார் சுப்புராமன் said...

இப்படி பகிரங்கமா உண்மைய சொல்ல உன்னை விட்டா வேற யாருக்கும் தைரியமில்லைப்பா...

நவநீதன் said...

சிவகுமார் அண்ணே....
நான் கல்யாணமாகாத கன்னிப் பையன்னே....

@சிவகுமார் மற்றும் ஜுர்கேன் க்ருகேர்.....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.....

ஆட்காட்டி said...

சும்மா தானே?

குடுகுடுப்பை said...

சிவகுமார் அண்ணே....
நான் கல்யாணமாகாத கன்னிப் பையன்னே...

அதுக்கு முன்னாடியே முதலிரவா

நவநீதன் said...

//Blogger ஆட்காட்டி said...

சும்மா தானே?//
ஆமாங்க...:)
படிச்சு பாத்து கருத்து சொன்னதுக்கு நன்றி...

நவநீதன் said...

//குடுகுடுப்பை said...

சிவகுமார் அண்ணே....
நான் கல்யாணமாகாத கன்னிப் பையன்னே...

அதுக்கு முன்னாடியே முதலிரவா//
ஆஹா...கெளம்பிட்டாங்கய்யா....
கெளம்பிட்டாய்ங்க.... :)

ச.பிரேம்குமார் said...

என்ன கொடுமை சார் இது???