Saturday, October 11, 2008

ஒரு அப்பாவியை நாய் கடித்த கதை.

நான், நண்பர் சத்யா, வேலுமணி இன்னும் பிற நண்பர்களுடன் அலுவலக கான்டீனில் டீ சாப்பிட்டுகிட்டு இருந்தோம்.
வேலுமணி தான் ஆரம்பித்தார். "என்ன நாய் கடிச்சுடுசுப்பா". சொல்லும்போதே சத்யா சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.
"எப்படிங்க??" - இது நான்.
"பேசிக்கிடே வந்துக்கிட்டு இருந்தேன். கீழ இருந்த நாயை கவனிக்கல. மிதிச்சுட்டேன். கடிச்சுடுச்சு." ரொம்ப பாவமாக சொல்லிக்கொண்டிருந்தார் வேலுமணி.
இப்போது சத்யா சிரித்துக்கொண்டே "ஏய்! பேசிக்கிடேவா வந்த என்ன திட்டிகிட்டே இல்ல வந்த. அதான் நாய் கடிச்சுடுச்சு "
"ஏங்க அந்த நாய் உயிரோட இருக்கான்னு பார்த்தீங்களா? உங்களைக் கடிச்சு நாய்க்கு ஏதாவது ஆகிரப்போகுது?" - நான் தான் கொஞ்சம் கலகலப்பூட்ட முயற்சித்தேன்.
"அதெல்லாம் பார்த்துட்டேன். ஒண்ணும் ஆகல. நல்லத்தான் இருக்கு. நமக்குத்தான் ஊசி போட்டு நூறு ரூபாய் செலவு" - என்றார் அப்பாவியாக. (ரூமில் எல்லோரும் அந்த நாய் செத்தால் உங்களுக்கும் ஏதாவது ஆகிடும்-ன்னு பயமுறுத்தி இருந்தார்கள்.)
"அது, வேலு மிலிட்டரி ஓட்டல்ல எலும்புக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்திருக்கும். அந்த சமயத்தில வேலு மிதிச்சதால, வேலுவோட எலும்பை பதம் பார்த்திருக்கும்"
(இதில் குறிப்பிடத்தக்க ஒன்று வேலு கொஞ்சம் ஒல்லியாக இருப்பார்.)
சரி இன்னும் டேமேஜ் ஆக வேண்டாமே என்று வேலு மணி கிளம்பிவிட்டார். சரி அன்றைய கொட்ட முடிந்தது என்று நாங்களும் கிளம்பி விட்டோம் வேலையை பார்க்க.

8 comments:

Unknown said...

:)))

நவநீதன் said...

நன்றி ஸ்ரீமதி...!

கோவி.கண்ணன் said...

//(இதில் குறிப்பிடத்தக்க ஒன்று வேலு கொஞ்சம் ஒல்லியாக இருப்பார்.)//

:)

ஒத்த நாடி ஆளுங்களை என்னமா ஓட்டுறிங்க !

மணிகண்டன் said...

பாவம் வேலு - உங்க குரூப்ல மாட்டிகிட்டு இருக்காரு.

நவநீதன் :- உங்கள ஒரு தொடருக்கு கூப்பிட்டு இருக்கேன். நான் புதுசா எழுதற ப்ளாக்ல.

thodar.blogspot.com

நவநீதன் said...

கோவிக்கும் மணிகண்டனுக்கும் நன்றி....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

நவநீதன் said...

என்னை கூப்பிட்டதுக்கு ரொம்ப நன்றி மணிகண்டன்...
நான் கண்டிப்பா எழுதுறேன்...

குகன் said...

Too much...! Blog la elutha evvalavo nalla vishayangal irukku.. Puthumaya irukkumnu blog la title poattutu ippidi mokkaya onnu eluthi en nanbanai asingapaduthi blogoda mathippai neengale irakkirukka vendaam...! Puratchikarama yosikkaavittalum, puthumaya yosichu nalla kavithaikalai intha blogla eluthuveerkal endra nambikkaiyudan vidaiperukiren nanbare..!

நவநீதன் said...

நண்பரே,

யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு இதை எழுதவில்லை....
blog-கை ஒரு டிஜிட்டல் டைரியாகத்தான் பயன்படுத்தி வருகிறேன். சுவாரசியமான நினைவுகளை கால ஓட்டம் அழித்து விடக் கூடாது என்பதற்காகத்தான் இதில் பதிவு செய்கிறேன்....

இந்த பதிவை நான் எப்போதாவது படிக்கும் போது (இப்போ இல்ல... ரெண்டு வருஷம் கழிச்சோ... அல்லது இன்னும் பல வருடங்கள் கழிச்சோ...), வேலு மணியும், சத்தியாவும், ஏன் இந்த பதிவுக்கு பினூட்டமிட்ட நீங்களும் என் நினைவில் வருவீர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது...

ஆக இது ஒரு ஞாபக சின்னம் அவ்வளவு தான்....