ரத்தத்தை சூடேற்றும் காட்சி இன்று ஈ-மெயிலில் வந்தது.
காஷ்மீரத்தின் ஒரு கட்சி தலைவர் தேசியக் கொடியை எரிக்கும் காட்சி....
mail-லில் வந்ததை அப்படியே தமிழ் படுத்தி தருகிறேன்.
இந்த காட்சியை media-க்கள் கண்டுகொள்ளாதது ஆச்சர்யம் தான்.
ஒரு தேசியக் கொடியை எரிப்பதை கண்டுகொள்ளாத ஒரே நாடு இந்தியாகத் தான் இருக்கும்.
இதை சுடு செய்தியாக்காத (அதாங்க breaking news) media-க்களை என்ன செய்வது???
கீழே கொடுக்கப்பட்டவை எல்லாம் மசாலா சுடு செய்திகளாக இந்திய செய்தி நிறுவனங்களில் வந்தது.
1. தேசியக் கொடியை போலவே கேக் செய்து வெட்டியதற்காக, தெண்டுல்கர் மீது கண்டனம் தெரிவிக்கப் பட்டது.
2. மந்திரா பேடி, தேசிய கொடி போடப்பட்ட சேலையை அணிந்ததால் மன்னிப்பு கேட்க வைக்கப் பட்டார்.
3. கொல்கட்டவிலும், பெங்களுரிலும் ஒரு போலீசார் கொடியை கீழே எரிந்ததால் வேலையை இழந்தனர்.
மேலே கூறப்பட்ட சம்பவங்கள் சரி என்று கூறவில்லை. அதற்காக இங்கே காட்டப் பட்டுள்ள படங்கள் சரியும் அல்ல...
1. அமர்நாத் விவகாரத்தின் போது, ஜம்முவை சேர்த்த சிலர் "பாரத மாதா வாழ்க!" (bharath matha ki jai) என்று முழங்கிய போது, போலீசாரால் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
2. அதே அமர்நாத் விவகாரத்தின் போது, காஷ்மிரைச் சேர்ந்த சிலர் இந்திய தேசியக் கொடியை எரித்து விட்டு, பாகிஸ்தான் கொடியை வைத்துக் கொண்டு, "இந்தியா ஒழிக! பாகிஸ்தான் வாழ்க..!" (Hindustan Murdabad, Pakistan Jindabad) என்று முழக்க மிட்டனர். அதற்க்கு வெற்று கண்டனம் கூட தெரிவிக்கப் பட வில்லை.
3. ஒவ்வொரு ஆகஸ்ட் 14-யிலும் (பாகிஸ்தானின் சுதந்திர தினம்), காஷ்மீரில் உள்ள அரசு அலுவலகங்கள் உட்பட எல்லா இடங்களிலும் பாகிஸ்தான் கோடி ஏற்றப்பட்டு, மறுநாள் (இந்திய சுதந்திர தினம்) இந்திய கொடி எரிக்கப் படுகிறதாம்.
மேலே சொல்லப் பட்டதெல்லாம் உண்மையா??? விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ...!
அய்யா.. புண்ணியவான்களே... இது ஏதாவது blog-க்கில் ஏற்கனவே வந்துருந்தா சொல்லிருங்கைய்யா... நன்றின்னு சொல்லி பேர் போட்டு விடுகிறேன். நான் பதிவுத்திருடன் எல்லாம் கிடையாது... mail-லில் வந்ததை பதிவு செய்திருக்கிறேன்.