Monday, October 24, 2011

குறிப்பறிதல் - சவால் சிறுகதைப் போட்டி -2011



SP கோகுல் அந்த குறிப்பை என்னிடம் நீட்டினார். நான் அதை வாங்கி பார்த்தேன்.
Mr. கோகுல்...
S W H2 6F - இதுதான் குறியீடு. கவனம்.
-விஷ்ணு.

விஷ்ணு ஒரு உளவாளி. அவனுடன் நான் பல வழக்குகளில் வேலை செய்திருக்கிறேன். ஏற்கனவே ஏகப்பட்ட கேஸ் பெண்டிங்குல இருக்கு... இதுல இன்னொன்னா? எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்குவான்னு நல்லா தெரிஞ்சு வச்சுருக்காரு என்று மனதில் நினைத்துக்கொண்டே ஒரு சல்யூட்டை வைத்து விட்டு வீட்டுக்கு கிளம்பினேன்.
***
வீட்டில், கூரியர் வந்திருந்தது. உள்ளே ஒரு குறிப்பு.
Sir,
எஸ்.பி.கோகுலிடம் நான் தவறான குறியீடை தான் கொடுத்திருக்கிறேன்.
கவலை வேண்டாம்.
-விஷ்ணு
இதில் தவறான குறியீடை "தவறான குறியீடு" என்று நீங்கள் புரிந்துகொண்டால் அது தவறான புரிதல். குழப்பாதே என்கிறீர்களா? தவறான குறியீடு என்றால் எங்களுடைய சங்கேத வார்த்தையில் மிரர் இமேஜ். அதாவது கண்ணாடியில் இந்த குறியீட்டை பார்த்தால் என்ன கிடைக்குமோ அது தான் குறியீடு. ஆக, நிஜமான குறியீடு 2 W HS d7 .
அனால் எதற்காக விஷ்ணு இரண்டு குறிப்புகள் அனுப்ப வேண்டும்? அதுவும் தவறான ஒன்றை SP-க்கும் இன்னொன்றை எனக்கும்? ஏன்டா இவன் இப்பிடி யோசிக்குரான்னு பாக்குறீங்களா? எங்க முதல் வேலையே சந்தேகப்படுறது தான்.... ஏன்னா, நான் போலீஸ்காரன்.




இரண்டு குறிப்புகளையும் வைத்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருந்த போதே அந்த போன் வந்தது. விஷ்ணுவிடமிருந்து தான்.
"எங்கே?"
"ஹோட்டல் ஹீரா இன்டர்நேசனல் ரூம் நம்பர் 305 "
"பொருள்?"
"கரும்பு சக்கை"
"எப்போ?"
"நாளைக்கு சாயுங்காலம் ஆறு மணி"
"கன்பார்ம்டு ?"
"எஸ். கன்பார்ம்டு"
விஷ்ணு சொன்ன ஒரு விஷயம் கூட உண்மையில்லை. என்ன பாக்குறீங்க? கடேசியாக நான் கன்பார்ம்டு என்று கேட்டதற்கு எஸ் என்று மட்டும் சொல்லியிருந்தால் விஷயம் உண்மை என்று அர்த்தம். "எஸ் கன்பார்ம்டு" என்று சொல்லியதால் விஷயம் உண்மையில்லை. அவன் எதோ சிக்கலில் இருக்கிறான். அவனை எப்படியாவது காப்பாத்தனும்.
***
மறு நாள். ரிப்போட்டர் என்னை பார்த்து, "எப்படி சார் கண்டுபுடிச்சீங்க?"
"விஷ்ணு ஆபத்துல மாட்டியிருக்கான்னு தெரிஞ்ச வுடனே, நடந்ததெல்லாம் ஒரு நாடகம்-ன்னு நல்லா தெரிஞ்சுடுச்சு. போலிச திசை திருப்புறதுக்காக இதை பண்ணிருக்காங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன்.
உடனே எல்லா போலிஸ் ஸ்டேசனுக்கும் தகவல் அனுப்பி எல்லா செக் போஸ்ட்லயும் தீவிரமா செக் பண்ண சொன்னேன். அதுல போதை மருந்தை கடத்திகிட்டு இருந்த ஒரு ஆள் சிக்கினான்"
" போதை மருந்தோட மதிப்பு எவ்ளோ இருக்கும் சார்?"
"சுமார் 50 லட்சம்."
"அப்புறம் விஷ்ணுவை எப்டி சார் காப்பாத்துனீங்க?"
"போதை பொருள் கடத்துனவன பிடிச்சு போலிஸ் பாணில விசாரிச்சதுல இருந்து விஷ்ணு இருக்குற இடம் தெரிஞ்சது. "
"இதுல SP கோகுல் எப்டி சம்பந்த பட்ருக்கார்-ன்னு கண்டுபிடிச்சீங்க சார்?"
"விஷ்ணுவை காப்பாத்தி அவர்கிட்ட விசாரிக்கும் போது அவர் எந்த குறிப்புமே அனுப்பலைன்னு தெரிஞ்சது. அவர துப்பாக்கி முனையில போன் பண்ண வச்சிருக்காங்க. இதுல குறிப்பிடத்தக்க விஷயம் ஒரு குறிப்பை என்கிட்ட கொடுத்தது SP கோகுல் தான். அதனால CM கிட்ட ஸ்பெஷல் பெர்மிசன் வாங்கி, அந்த குறிப்பு எப்டி வந்ததுன்னு கோகுல்கிட்ட விசாரிச்சப்போ ஒரு பெரிய போதை மருந்து கும்பலே இதுக்கு பின்னாடி இருக்குங்கிறது தெரிய வந்தது. கும்பல்ல இருக்குற பல பேர் தலை மறைவாயிட்டாங்க. அவங்கள புடிக்க ஸ்பெஷல் டீம் அமைச்சிருக்கோம். "
"நன்றி சார்"

***

"குற்றம் நடந்தது என்ன" நிகழ்ச்சியில் என்னோட கதை தான் ஓடிக்கொண்டிருந்தது. அதை மனைவியுடன் ரசித்து பார்த்துக்கொண்டே, "task done " என்றொரு மெசேஜ்-ஐ தட்டி விட்டேன்.
டைன் டைன்.
"done " என்றொரு மெசேஜ் வந்திருந்தது. உடனே என்னோட சுவிஸ் பேங்க் அக்கௌன்ட் பேலன்சை செக் பண்ணினேன். நாலு கோடி கூடி இருந்தது. ஏனோ கோகுல் இப்ப சிறையில் என்ன செஞ்சுகிட்டு இருப்பார்-ன்னு நெனச்சுகிட்டேன்.


Thursday, April 28, 2011

ஐஸ்கிரீம் கவுஜ (ஐஸ் வாங்கலியோ... ஐஸ்...)


* என் ஐஸ்கிரீம் பார்லருக்கு
வந்து
"அம்பது கிலோ ஐஸ்கிரீம்
வேணும்"
என்றான்.
அவனிடம்
எப்படி சொல்வது
உன்னை விற்பதில்லை
என்று?
(வாயால தான் சொல்லணும். வேற எதாலடா சொல்லுவ?)

* ஒரு ஐஸ்க்ரீம்
கடைக்கு போனேன்.
என்ன வேண்டும்
என்று கேட்டான்!
உன் பெயரை
சொன்னேன்.
அப்படி ஒரு
ஐஸ் க்ரிமே இல்லை என்றான்!
அவன் உன்னை
பார்த்ததில்லை போல!
( டேய்... நீயும் என்ன சரியா பாத்ததில்ல..! மவனே, கீழ்பாக்கத்துக்கு போக வேண்டிய கேசுடா நீ...)

* ஹோட்டலுக்கு போய்
ஐஸ்கிரீம் ஆர்டர்
பண்ணினேன்!
அவள் எதிரே
வந்து அமர்ந்தாள்!
சின்ன ஐஸ்கிரீம்
கேட்டா,
பெரிய ஐஸ்கிரீம்
குடுக்குறாங்க!
( அப்பிடியே சாப்பிடு... மூஞ்சில மட்டும் இல்ல ஒடம்புல எல்லா எடத்துலயும் குடுப்பாய்ங்க...! நல்லா வாங்கிக்கோ...)

* இனிமேல் நீ
ஐஸ்கிரீம் கடைக்கு
போகாதே!
"இந்த ஐஸ்கிரீம்
வேணும்" என்று
உன்னை கேட்பவர்களிடம்
இருந்து
காப்பாற்றி கூட்டி வருவதே
பெரும் பாடாய்
இருக்கிறது எனக்கு....!
( உன்ன இப்டியே மிதிக்கிறதா? இல்ல ஓட விட்டு மிதிக்கிறதான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்...)

* அன்பே!
வெண்ணிலா,
ஸ்ட்ரா பெர்ரி,
பிஸ்தா,
சாக்லேட்,
பட்டர் ஸ்காட்
இப்படி எத்தனை
புன்னகை இருக்கிறது
உன்னில்?
( உன் மூஞ்சில என் பிச்சாங்கைய வைக்க.... இனிமே கவுஜ எழுத எவனாவது கெளம்புனீங்க.... தொலைச்சு புடுவேன் தொலைச்சு...! )

Monday, February 16, 2009

கூட்டாஞ்சோறு - 16/02/2009

நண்பர் அறிவுக்கரசு மெயிலில் அனுப்பிய படம்.....


படம் சரியா தெரியலேன்னா, கிளிக்கி பெரிசாக்கி பார்க்கவும்...

*********************

நண்பர் சத்யா எழுதிய கவிதைகள்....
ஒரு காலத்தில்
போரே வாழ்க்கை...!
இப்போதோ...
வாழ்க்கையே போர்...!
போர் குறைய
காரணம்....
அது விளையாட்டென்று
பெயர் மற்றப் பட்டிருக்கிறது...
கிரேக்க வீரர்களால்...!
அப்போது
மண்டைகள்
பந்துகளாக
உருண்டன....!
இப்போது
பந்துகள்
மண்டைகளாக
உருள்கின்றன...!

சத்யா, மதன் எழுதிய கி.மு. கி.பி.யை படித்துவிட்டு ஓவராக பீல் பண்ணீட்டார்ன்னு நினைக்கிறேன்...!
அவர் எழுதிய இன்னொரு கவிதை....

எச்சிலில் ஒரு தேசிய சிந்தனை...!
உங்கள் எச்சில் பழக்கம்,
தேசியக் கோடியில் உள்ள
சிவப்பின் அர்த்தத்தை
திரித்துக் கொண்டிருக்கிறது...!

அதான்...!ரூமுக்குள்ள அண்ணாந்து படுத்துக்கிட்டு யோசிக்ககூடதுங்கிறது...!

*********************

எங்க குரூப்ல டவுட் தனபால் அப்டீன்னு ஒருத்தர் இருக்கிறார்...
அவருக்கு வந்த சமீபத்துல வந்த சந்தேகம்...
"நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு"ன்னு ஏன் சொல்றாங்க..."நான் புடிச்ச பன்னிக்கு ஏன் மூணு காலு"ன்னு சொல்லல...
இதுக்கு வந்த பதில்கள்...
"ஆடு மேய்க்கிற பயலுக்கு இவ்வளவு அறிவான்னு பொறாமை... இத அப்படியே ஒரு கல்வெட்டுல செதுக்கி வச்சிட்டு நீயும் பக்கத்துல ஒக்காந்துக்க..."
"இத சொன்னவன் உன்ன பாக்கல... பாத்திருந்தா, உன்ன பிடிச்சிட்டு நான் புடிச்ச பன்னிக்கு ரெண்டு காலுன்னு சொல்லீருப்பான்..."

நம்ம பசங்களுக்கு என்னா ஒரு வில்லத்தனம்...!

*********************

நம்ம பசங்கள்ல கு.கு (குடிகார குப்பன்) ன்னு ஒருத்தன் இருக்கான்.
ஒரு பீர் அடிச்சிட்டு, குப்பைய குப்ப தொட்டில போடுறேன்னு சொல்லிட்டு, ஒரு நண்பர் மேல போட்டவன்...
இருநூத்தி இருபது ரூபா பில்லுக்கு நானூறு ரூபாய கொடுத்துட்டு மீதிய டிப்ச்சா வச்சுக்கோன்னு சொன்னவன்....
அவன பத்தி விரிவா இனி வரும் பதிவுகள்ள பார்ப்போம்...
ரெண்டு வாரத்துக்கு முன்னால கோயம்புத்தூருக்கு போயிருந்தோம்... அங்க நடந்த சுவாரசியாமான நிகழ்வுகளை மட்டும் இப்ப பார்ப்போம்...
கு.கு, நான் மற்றும் நண்பர்கள் சிலர் சரக்கடிக்க பாருக்கு போயிருந்தோம்...
சரக்கடிக்கும் போது, நண்பர் ஒருவர்ஒரு கவிதை சொன்னார்...
(ஒரு வேளை அவருக்கு ஏறிருக்குமோ...?!!)
உலகம் சுற்றுகிறது
என்கிற
உண்மை
இரண்டு பீருக்கு பின் தான்
தெரிகிறது...!
உடனே கு.கு. குஷியாகிட்டான்... நம்ம பிளாக்குல இருக்கிற கவிதைய அடிச்சு விட ஆரம்பிச்சிட்டான்... ஆனா என்ன ஒரு கருமாந்திரம்னா, அது யாருக்கும் புரியல...
அதுக்கு அப்புறம் கவிதைய சொன்னவரும், கு.கு.வும் ரொம்ப க்ளோஸ் பிரண்டு ஆகிட்டாங்க...!

இத்தோட பதிவ முடிச்சுக்கறேன்....! கு.கு. வை பத்தி இன்னொரு பதிவுல நிறைய....!

*********************

வழக்கம் போல பிடிச்சிருந்தா ஒட்டு போடுங்க...! பிடிக்கலேன்னா பின்னூட்டத்துல திட்டுங்க சாமியோவ்வ்..............!

Monday, February 9, 2009

நான் கடவுள் - என் பார்வையில் ...

முதலில் இந்த மாதிரி ஒரு கதையை எடுக்க நினைத்ததற்காகவே பாலாவை பாராட்டலாம்... ஆரம்ப காட்சிகளிலேயே காசியும், அங்கு நடக்கும் விசயங்களையும் பக்காவாக கண்முன் நிறுத்தி, நிமிர்ந்து உக்கார வைத்து விடுகிறார். வசனங்கள் கொஞ்சமே என்றாலும் நிறைவாய் இருக்கிறது...! வில்லன் பாத்திர படைப்பு எந்த அளவுக்கு நடை முறையில் சாத்தியம் என்று பாலா தான் விளக்க வேண்டும். மூட நம்பிக்கையோட இருக்கும் ஒவ்வொரு மனிதனையும் உண்மை நிலையை கொஞ்சம் கூட வேறுபாடில்லாமல் காட்டி, அனாயசமாக கேள்வி கேட்கிறது....! இப்படிப்பட்ட கஞ்சா அடிக்கிற ஒரு சாமியாரைத் தான் நாம் தருமம் என்ற பெயரில் காசிக்கு போய் பிச்சையிட்டு விட்டு வருகிறோம். பிணம் தின்னும், தன்னையே கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் எதோ ஒருவரை காசிக்கு போயிருந்தால் வணங்கி விட்டு வந்திருப்போம். ஆர்யாவை மற்ற கதா பாத்திரங்கள் எல்லாமே பெரிய சாமி என்று சொல்கிறது... உண்மையில் நாமும் இப்படித்தான் நடந்து கொள்கிறோம்... நான் எல்லா சாமியார்களையும் குறை சொல்ல வில்லை. ஆனால் காசி முழுவதும் கஞ்சா அடிக்கும் சாமிகள் தான் அதிகம்.... அவர்களை வணங்கும் மூடர்களும் அதிகம். முருகன் கதாப் பாத்திரத்தை, ஒவ்வொரு கடவுளும்/வேடத்திலிருக்கும் பிச்சைக்காரகள் கேட்கும் கேள்விகள்/வசனங்கள் ஒவ்வொன்றும் பளிச்சிடுகின்றன... ! அந்த குட்டி பையன் கலக்கியிருக்கிறான்.... கவிஞர் விக்ரமாதித்தன் கடவுளை தேவிடியா பய என்று சொல்லும் போது, அந்த பாத்திரத்தின் மன நிலையையே பிரதிபலிக்கிறார்... பல இடங்களில் நம்மை யோசிக்க வைக்கும் நகைச்சுவை, இழையோடுகிறது.... படத்தில் வரும் பழைய பாடல்களும் நச். அந்த பழைய பாடல் தெரிவிலும் நெஞ்சில் நிற்கிறார். பூஜாவிற்கு மொத்தமே மூன்று உடைகள் தான் படத்தில். ஆனால், அவர் முகத்தில் அழகழகான உணர்ச்சி மாற்றங்கள்...! தமிழ் சினிமா படங்களில் காதாநாயகன் வரும் காட்சிகள் தான் அதிகம் இருக்கும். அனால், இந்த படத்தில் அர்யாவோ கெஸ்ட் ரோலில் வருவது போல் வந்துவிட்டு போகிறார். ஆனால் வரும் காட்சிகளில் மனுஷன் பின்னி எடுத்திருக்கிறார்.... இந்த கதையில், இமேஜை நம்பும் அஜித்தை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.... என்னுடைய நண்பர் இன்னும் கொடூரமாக இருக்கும் என்று எதிர்பார்த்து வந்தேன் என்றார் (பாலா மேல அவ்வளவு நம்பிக்கை??). படம் திரையில் ரெண்டே கால் மணி நேரம் தான் ஓடுகிறது.... ஆர்யா, பூஜாவை கடித்து தின்னும் காட்சிகளை எடுத்ததாகவும், சென்சாரில் அது பறிபோய் விட்டதாகவும் என் நண்பன் சொன்னான்....! படத்திற்காக மூன்று கிளைமாக்ஸ் காட்சிகளை எடுத்ததாகவும் பத்திரிகைகளில் படித்தேன்....! படத்தில் குறைகள் சில இருந்தாலும், நிறைகள் மிக அதிகம்....! நான் கடவுள்....! கடவுளுக்கு மிக அருகில்.....!

Friday, January 30, 2009

பாப்பா போட்ட தாழ்ப்பா....! (வயது வந்தவர்களுக்கு மட்டும்....)

"உங்கிட்ட பைக் இருக்கா? ஐ நாக்ஸ் போய் படம் பாக்கலாமா? பைக்ல உன்ன இருக்கமா கட்டி பிடிச்சுக்க்கறேன். ஆனா டிக்கெட் எல்லாம் நீதான் பாத்துக்கணும். ஒகேவா?" என்று அவள் என்னிடம் கேட்ட போது, அவள் என்னிடம் ப்ரபோஸ் பண்ணியதாகவே உணர்ந்தேன். இது நடந்த போது, சென்னையின் ஒரு பிரபல தனியார் கணினி பயிற்சியகத்தில் நாங்கள் நின்றிருந்தோம். அவள் ஒன்றும் அவ்வளவு அழகு இல்லை. டேய்...! இதெல்லாம் உன் ரேஞ்சுக்கு ரொம்ப ஓவர்...! எந்த பொண்ணுமே உன்ன திரும்பிக்கூட பாத்ததில்லடா...! என்று மனச்சாட்சி கேலி பேசியது. அதை எல்லாம் யாரு பாஸ் கேட்கிறா. ரெண்டு நாள் கழித்து, நான் அவ கிட்ட "ஐ லவ் யு" சொன்னேன்.
*************

"டேய்...! என்னடா ஒரு மொக்க பிகர பைக்ல கூட்டிகிட்டு சுத்துரியாமே...! என்ன லவ்வா? " - ரூம் மேட் தான் கேட்டான்.
"லவ்வா... சேச்சே.... நமக்கெல்லாம் மூணு ரூபா.... அரை மணி நேரம் அவ்வளவு தான்...."
என்ன புரியலையா...? மிக குறைந்த விலை காண்டமின் விலை மூன்று ரூபாய்....
*************

சிங்கார சென்னையில ஒரு பிகர வச்சு மெயின்டேயின் பண்றது ரொம்ப கஷ்டமாச்சென்னு கேக்குறீங்களா? இந்த பிரச்சனைய இப்டித்தான் சமாளிச்சேன்....
"அப்பா...! பிராஜெக்ட் பண்ணனும் ஒரு அஞ்சாயிரம் கொடுங்கப்பா...." எந்த பிராஜெக்ட் என்று அவரும் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை... ஹி.. ஹி...!
*************


இப்ப மூணு மாசம் ஆகிடுச்சு... அப்ப அப்ப மிஸ்டு கால் கொடுப்பா. நானும் கடல போட்டேன். கடல போடுறது அவ்வளவு ஈஸி இல்லைங்க.
1 . எங்கருக்க ?
2. என்ன பண்ணிக்கிட்டு இருக்க?
3 . சாப்பிட்டாச்சா...?
4 . என்ன சாப்பிட்ட?
5. என்ன கூட்டு?
6. என்ன பொரியல்?
7. என்ன கொழம்பு?
8. அப்புறம்?
9. இன்னும் தூங்கலியா?
இது போன்ற மொக்க கேள்விகளை தவிர்த்து, இன்னிக்கு அவகிட்ட என்ன பேசினேன்னா....
"எனக்கு எங்கம்மா மருதாணி வச்சு விட்டாங்க... "
"எங்க " - ரொம்ப முக்கியம்...!
"கைல.... ரெண்டு கைலயும்... "
எல்லோரும் மூஞ்சியிலையா மருதாணி வச்சுப்பாங்க....
"அப்புறம் எப்டி சாப்பிட்ட..." - உலக மகா புத்திசாலித்தனமான கேள்வியை கேட்டேன்..
"சாப்பிட்ட பிறகு தானே மருதாணியே வச்சாங்க...."
அதான் தெரியுமே .... திங்குரதுல உன்ன விட பெரிய ஆளு யாருமில்லைன்னு.... வாரா வாரம் ஓட்டல்ல காட்டு கட்டு கட்டுறத, பாத்துக் கிட்டு தானே இருக்கேன்...
"எங்கம்மா ஒரு கைல மருதாணி வச்சுக்கிட்டு இருந்தாங்களா... "
"ம் ..."
"எங்க அத்த இன்னொரு கைல மருதாணி வச்சுக்கிட்டு இருந்தாங்களா ...."
"ம் ..." - இதுல ஒரு கதையா தாங்கலடா சாமி....!
"திடீர்னு எங்க மாமா வந்தாரு... வந்து, எங்க அத்தை கிட்ட இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கன்னு கேட்டாரு... அதுக்கு உடனே அத்த சொன்னாங்க ம்ம்.... மருதாணி வச்சுகிட்டு இருக்கேன்.... உங்களுக்கும் வேணும்னா வச்சு விடவா...? ன்னு, உனக்கு கொழுப்பு ஜாஸ்தியாகிடுச்துன்னு சொல்லிட்டு மாமா போயிட்டாரு...."
*************

"எங்க இருக்க ?" - நான் தான் செல்போனில் கேட்டேன்...
"பஸ்ல... வீட்டுக்கு போயிட்டிருக்கேன்... "
"சரி! அப்புறம்...."
டேய்... இந்த அப்புறத்த விடவே மட்டிங்களாடா...?
"டாட்டா எலக்சி போகுது.... சின்ன வயசுல, ஏதாவது கார பாக்கும் போது, என் தம்பிகிட்ட அது என் வண்டின்னு சொல்லுவேன்... உடனே அவன், அத ஏற்கனவே அப்பா கிட்ட சொல்லி புக் பண்ணிட்டேம்பான்.... அதுக்கு முன்னால அந்த வண்டிய பாத்திருக்க கூட மாட்டான்..."
ஐயோ...கடவுளே....என்ன எப்டியாவது இந்த மாதிரியான மொக்கைல இருந்து காப்பாத்துப்பா....
கொஞ்ச நாளா, இவ இப்படி குழ்ந்தை தானமா பேசுறது ஜாஸ்தியாகிடுச்சு. வேகமா மேட்டர முடிச்சுட்டு கழாட்டி விட்ரனும்.....
"ம்.... ஸ்டாப் வந்துருச்சு.... ஆமா உங்க ரூமுக்கு என்ன கூப்பிடவே மாட்டியா...?"
ஆஹா, அதுவா வந்து மாட்டுது.... யூஸ் பண்ணிக்கடா...
"நாளைக்கு சாயுங்காலம் ஆறுமணிக்கு வாயேன்..."
*************

எங்கள் ரூம்! மாலை ஆறு மணி... !
அவள் வந்தாள். உள்ளே நுழைந்ததும், பேசக்கூட இடம் கொடுக்காமல், கட்டி அணைத்தேன். அவளுடைய உருண்டு திரண்ட மார்பகங்கள் என் மார்பில் அழுந்துவதை உணர்ந்தேன். கட்டி பிடித்துக்கொண்டே பின்னங்கழுத்திலும் காத்து மடல்களிலும், மீசையால் மென்மையாய் உராய்ந்தேன்.



இப்போது அவள் படுக்கை அறையில் இருந்த நிலைக்கண்ணாடிக்கு முன்பு, புடவை அவிழ்க்கப்பட்டு உரித்த கோழியாய் நின்றிருந்தாள். அவளை பின்புறம் இருந்து நான் கட்டிப் பிடிக்க...., அவள் பின்புறமாக என் கழுத்தில் கைகளை மாலையாக தொடுக்க....., என் கைகள் அவள் ஜாக்கட்டிலும், தொப்புள் பிரதேசங்களிலும் விளையாட..., அவள் வெக்கத்தில் துடிக்க..., என் இதழ்கள் அவள் கழுத்து வளைவில் விளையாட..., அவள் கூச்சத்தில் நெளிய...., என் கைகள் அவள் ஜாக்கெட் பொத்தான்களுக்கு ஒவ்வொன்றாய் விடுதலை கொடுக்க...., (எப்ப தான் இந்த வரிய, முடிப்பீங்க?)

அவள் தங்க சங்கிலியை வாயில் கவ்வியபடி, என் படுக்கையில் நிர்வாணமாக படுத்திருந்தாள். இரண்டு கைகளையும் நீட்டி வா என்று அழைத்தாள். நான் அருகே போனேன். உணர்ச்சிகளின் சங்கமத்தில், உரையாடலுக்கு என்ன வேலை? அவள் மேல் கை வைக்க எத்தனிக்கையில், "ட்ரிங்... ட்ரிங்...". நான் சில விநாடிகள் அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளும் அப்படித்தான். போனை எடுக்கும் படி கண் அசைத்தாள்.
"என்னடா பண்ணிக்கிட்டு இருக்க??? " - அவள் குரல். அதெப்படி நேரிலும் இருக்கிறாள். போனிலும் அவள் குரல்...! கண்ணை கசக்கி விட்டு பார்த்தால், அடச்சே...எல்லாம் கனவு...!
"நாளைக்கு வரும் போது, ப்ளூ கலர் புடவை கட்டிக்கிட்டு வா..."
"ஏன்டா..?"
இன்னிக்கு கனவுல உன்ன அந்த புடவைல தான் பார்த்தேன்... என்று சொல்ல நினைத்தேன்.
"உன்ன புடவையில பாத்து ரொம்ப நாளாச்சு..."
" சரி... குட் நைட்... ஸ்வீட் ட்ரீம்ஸ்... வச்சுரவா..."
என்னது... ஸ்வீட் ட்ரீம்சா... வந்த நல்ல கனவைத்தான் கலச்சுட்டியேடி...
*************

மறுநாள்....! மலை ஆறு மணி....! அவள் வந்தாள்...! வருவதற்கு முன்பே, ரூமை கொஞ்சம் சுத்தப் படுத்தி இருந்தேன். ரூம் மேட்களை ரூமில் இருக்காதீர்கள் என்று விரட்டி விட்டிருந்தேன்... (ஒரு முன்னேற்ப்பாடு தான்... ஹி.. ஹி...)
இப்போது நானும் அவளும் மட்டும் தனியாக....!
கொஞ்ச நேரம் ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன்....மன்னிக்கவும்... தவறாக சொல்லிவிட்டேன்.... அவள் மடியில் படுத்து பேசிக்கொண்டிருந்தேன் என்பது தான் சரியாக இருக்கும்...! கட்டியணைத்தேன்....! இதழ்களில் முத்தமிட்டேன்....! இதெல்லாம் தேவையை உணர்த்தும் முயற்சி என்று மஞ்சள் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன்....

மூன்றாவது இதழ் முத்தத்தின் போது, காலிங் பெல் சத்தம் கேட்டது....! கண்டுகொள்ளாமல் இதழ் முத்தத்தை தொடர்ந்து கொண்டிருந்தேன்...! அவள் தான் விலக்கி, "யாருன்னு பாரு.." என்றாள். போக மனமில்லாமல் போனேன். ஒரு செல்போன் கம்பெனியின் விற்பனை பிரதிநிதி, "என்ன சிம் சார் யூஸ் பண்றீங்க?" என்றார். எரிச்சலோடு அவரை அனுப்பி விட்டு திரும்பி பார்த்தால், உடையை சரி செய்து கொண்டு கிளம்புவதற்கு ரெடியாக நின்றாள்....!
வட போச்சே....!
*************

அடுத்த பிளான் போட்டேன்...
"நாளைக்கு எனக்கு பொறந்த நாளு...." - என்னைக்கோ வர்ற பிறந்த நாளை, பிளானுக்காக முன்னாடியே கொண்டுவந்துட்டேன்... இந்த போழப்புக்குன்னு நீங்க திட்டுறது எனக்கு கேக்குது. இருந்தாலும் எனக்கு வேற வழி தெரியல...
"அப்டியா...எங்க வச்சு கொண்டாடலாம்?"
"உங்க வீட்ல... நீதான் உங்க வீட்ல யாரும் இருக்க மாட்டாங்கன்னு சொன்னேல்ல..."
இதாங்க பிளான்...!
"சரி... வந்துரு.."
"எனக்கு நாளைக்கு என்ன கிப்ட் கொடுக்க போற...."
"அது சஸ்பென்ஸ்"
பிளான் நல்லாவே ஒர்க் அவுட் ஆகுது...!
*************

அடுத்த நாள்.... அவள் வீட்டிற்கு போனேன்...!
வீட்டின் முற்றத்தில் மட்டுமே விளக்கு எரிந்து கொண்டிருந்தது. உள்ளே ஒரே இருளாய். இருந்த ஒரே வெளிச்சம் கேக்கின் மேல் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியும், அவள் கண்களில் தெரிந்த பிரகாசமும் தான். "ஹேப்பி பெர்த் டே டூ யு...." என அழகான குரலில் பாடத் தொடங்கினாள்.மெழுகுவர்த்தியை ஊத்தி அணைக்கும் முன், "மனசுல ஏதாவது நினைச்சுக்கோ.... பெர்த் டே விஷ்.... கண்டிப்பா நடக்கும்... " என்றாள். அவளை இன்று அடைய வேண்டும் என்ற பிறந்த நாள் விருப்பத்தை நினைத்துக் கொண்டேன். கேக்கை வெட்டி அவளுக்கு ஊட்டினேன். அதில் பாதியயு எனக்கு ஊட்டினாள்.

"கிப்ட்?" என்றேன். என் கன்னத்தில் முத்தமிட்டு "இதான் கிப்ட்..." என்றாள். ஏசு நாதர் பாணியில் மறு கன்னத்தையும் காட்டினேன்.புன்னகையோடு முத்தமிட்டாள். பிறகு என் மார்பில் சாய்ந்து கதை பேச ஆரம்பித்து விட்டாள். அவள் என்ன பேசினாள் என்று நான் சத்தியமாக கவனிக்க வில்லை. என் கண்கள் அவள் மார்பகத்தின் மேலே நிலை குத்தியிருக்க, தேர்வு முடிவுக்கு காத்திருக்கும் மாணவனைப் போல பதட்டத்தோடு இருந்தேன். ஒரு ஐந்து நிமிடம் போயிருக்கும். அவள் இன்னமும் பேசிக் கொண்டிருந்தாள். நினைத்து பார்க்கவே முடியாத பாகத்தில் என் கையை வைத்து அழுத்தினேன். சட்டென்று நிமிர்ந்து என்னை தள்ளி விட்டாள். அவள் கண்களில் அழுகையும் ஆத்திரமும் பீறிட்டன.
"நீ இப்டி பண்ணுவேன்னு எதிர்பார்க்கல"
"இதுல என்ன தப்பு இருக்கு....நாம லவ் பண்றோம்... கல்யாணம் பண்ணிக்கப் போறோம். "
- நல்லவன் மாதிரி நடித்தேன்.
"அதுக்காக கல்யாணத்துக்கு முன்னாலயேவா.... உனக்கு என் உடம்பு மேல தான் ஆச. இத உன் ரூமுக்கு வந்தப்பவே கவனிச்சேன்."
"என் மேல நம்பிக்கை இல்லையா....?" - காதலிக்கும் எல்லோருடைய கடேசி அஸ்திரத்தை பிரயோகித்தேன்.
"இருந்தது.... அஞ்சு நிமிசத்துக்கு முன்னால வரைககும்... ஆனா இப்ப இல்ல... " என்று தீர்க்கமான குரலில் சொல்லிவிட்டு, என்னை வெளியே அனுப்பி கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டாள். (இப்ப தலைப்போட அர்த்தம் புரிஞ்சுதா...?)
*************

பி.கு. 1
இந்த கதைக்கான கரு மனதில் தோன்றியதுமே, நான் படித்தது கேபிள் சங்கரின் இந்த நிதர்சன கதைகளைத்தான்.
என்னை பிடிக்கலையா....?
தேவர் மாப்பிள்ளை....
கல்யாணம்....
இவற்றில் எதன் தாக்கமும் வந்துவிடக் கூடாதே என்ற பயம் வேறு. தாக்கம் இருக்கிறதா இல்லையா? என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

பி.கு.2 :
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால், பின்னூட்டமிட்டும், தமிழ் மணத்திலும் தமிழிஷிலும் ஓட்டு போட்டு உற்ச்சாக படுத்துங்கள். பிடிக்க வில்லை என்றால், பின்னூடத்தில் உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.

Monday, December 29, 2008

சுடிதாரை ஒழிக்கணும் - டகுல பாண்டியின் குமுறல்...!


"டேய் டகுலா, எனக்கு பொண்ணு பாத்திருக்காங்கடா... "
"ஏன்டா, பொண்ணு வீட்ல உன்ன பத்தி சரியா விசாரிக்கலையா என்ன? "
"ஏன்டா அப்டி சொல்ற ?"
"விசாரிச்சா உனக்கெல்லாம் எவண்டா பொண்ணு குடுப்பான்?"
"டேய்..?!! " - கொஞ்சம் கடுப்பாகி விட்டான் பாஸ்கரன்.
இப்பவும் நான் விடலியே...
"எப்படின்னாலும் உன்ன பார்த்துட்டு பொண்ணு ஓடப்போகுது. சரி... பொண்ணு யாரு? என்ன மேட்டரு...?"
"தெக்கு தெரு, பிள்ளையார் கோயில் சந்துல தான் பொண்ணு வீடு... அவங்க அப்பா மளிகை கடை வச்சுருக்காருடா.... "
"அடுத்த மாசத்துல இருந்து உங்க வீட்டுக்கு மளிகை செலவு மிச்சம்ன்னு சொல்லு ..."
"விளையாடாதடா...நாளைக்கு சாயுங்காலம் ஏழு மணிக்கு நம்ம சிவன் கோயில்ல பொண்ணு பாக்க போறோம்... நீயும் வர்ற... "
ஒ... இது தானா மேட்டரு... எங்க பிரண்ட்ஸ் குருப்லையே, நான் ஒருத்தன் தான் கொஞ்சம் கருப்பு. அதனால, பொண்ணு பாக்க தொணைக்கு ஆள் பிடிக்குது நாயி...(அய்யய்யோ... நாய் கோவிச்சுகிச்சுன்னா என்ன பண்றது? ).
எப்டீன்னாலும் என்னைய விட்டா இவனுக்கு வேற ஆள் கிடையாது. இது தான் சாக்குன்னு கொஞ்சம் பிகு பண்ணுவோம்.
"நாளைக்கு எனக்கு வேல ஜாஸ்திடா... ஆடிட்டிங் வேற இருக்கு..."
"எப்படியாவது வந்துர்ரா மச்சி... நான் உங்க ஆபிச்லையே கூட வந்து பிக் அப் பண்ணிக்கிர்றேன்..."
பாருங்க மகா ஜனங்களே...! எப்படி கால்ல விழுகுரான்னு.
"சரி... பொண்ணு பாக்குறப்ப நீ பாட்டுக்கு சைட் அடிக்குரப்ப பாக்குற மாதிரி, நாக்க தொங்க போட்டுக்கிட்டு பார்த்து வைக்காத. பொண்ணு மெரண்டுர போகுது. கொஞ்சம் டீசெண்டா பாரு. சரியா...? எங்க ஒரு ரொமான்ட்டிக் லுக் விடு... "
பாஸ்கரன் என்னை பார்த்து முறைத்தான்.
"இது தான் உங்க ஊர்ல ரொமான்ட்டிக் லுக்காடா... எப்படியோ ஒரு பொண்ணு தப்பிக்க போகுது... சரி நான் வர்றேன்..."

* * * * * * * * * *


மறுநாள் மாலை ஏழு மணி... சிவன் கோவில்...

பாஸ்கர், நானு, அவனோட அப்பா அம்மா என நாலு பேர் மட்டும் மாப்பிள்ளை சைடுல வந்திருந்தோம். பொண்ணு வீட்ல இருந்து ஒரு பெரிய ஊர்வலம் மாதிரி வந்திருந்தாங்க... பொண்ணு, பொண்ணோட அப்பா அம்மா தவிர, ரெண்டு கெழடு கட்டைங்க, மூன்று நான்கு சம வயது பெண்கள், ரெண்டு மூணு சிறு குழந்தைகள்.... எல்லோரும் வந்திருந்தாங்க...
புரோக்கர் வந்து பொண்ணையும், மாப்பிள்ளையையும் அறிமுகப்படுத்தினார்.
பொண்ணு பக்கத்தில நின்னா நானே சிவப்பா இருந்தேன். டேய் இந்த பொண்ண பாக்குரதுக்காடா, யாரு கருப்பா இருக்கான்னு பாத்து என்ன கூட்டி வந்த?
அது சரி! இந்த மொன்ன நாயிக்கு இந்த பொண்ண விட்டா, வேற எந்த பொண்ணு கிடைக்கும்?
ஒரு லட்சம் ரொக்கம் தர்றேன்னு சொன்ன உடனே ஆன்னு வாயப் பிளந்துட்டான். இருந்தாலும், பொண்ணு கூட தனியா ரெண்டு நிமிஷம் பேசனும்னு தள்ளிக்கிட்டு போயிட்டான்.
அப்ப தான் அவளை பார்த்தேன். சிகப்பு கலர் சுடிதார்ல கண்ணாடி போட்ட ஒரு தேவதை மாதிரி இருந்தாள். சிறு குழந்தைகளோடு விளையாடிக்கொண்டும், கையில் ஒரு கைக் குழந்தையை வைத்து, அதை கொஞ்சிக் கொண்டும் இருந்தாள். நான் அவளை பார்த்தேன். சில சமயம் பெருமிதமாய் புன்னகைத்தாள். சில சமயம் நான் பார்க்கிறேனா என்று பார்த்துக் கொண்டாள். அரை மணி நேரம் இரண்டே வினாடிகளில் கடந்து விட்டதாய் உணர்ந்தேன். எல்லோரும் கிளம்புகையில், அவளை பார்த்து "போயிட்டு வர்றேன்" என்றேன். புன்னகையுடன் தலையாட்டினாள்.


* * * * * * * * * *
இரவு 9 மணி...!
"பாஸ்கர், இன்னிக்கு பொண்ணு பாத்தப்ப, எனக்கு ஒரு பிகரு சிக்கிருச்சுடா... நீ தாண்டா இதுக்கு ஹெல்ப் பண்ணனும்..."
"யாருடா அது? " - ரொம்ப ஆச்சர்யம் கலந்த உற்சாகத்தோட கேட்டான். நமக்கு பிகர் கிடைக்குறது இவனுக்கு ஆச்சர்யமா இருக்கு. எல்லாம் பொறாமை.
"கண்ணாடி போட்ருந்தால்ல... "
"அவங்க வீட்ல அவங்க அப்பா உள்பட, எல்லோருமே கண்ணாடி போட்ருந்தாங்கடா... வேற ஏதாவது அடையாளம் சொல்லு..."
"கொஞ்சம் குட்டையா...."
"டேய் அவங்க வீட்ல எல்லாருமே குட்ட தாண்டா..."
"சிகப்பு கலர் சுடிதார் போட்டு, சின்ன குழந்தைங்க கூட விளையாடிக்கிட்டு இருந்தாள்ல..." என்று சொன்ன உடனே கொஞ்ச நேரத்துக்கு என்னை முறைத்து பார்த்தன்.
"பொண்ணோட அம்மா பக்கத்துல நின்னுகிட்டு இருந்தாங்களே அவங்களா..." என்றான். அவங்களா என்ற மரியாதை என்னை என்னவோ பண்ணியது. அதுவும் இல்லாமல் அவனிடம் முதலில் இருந்த உற்ச்சாகம் காணாமல் போயிருந்தது.
"அமாண்டா...! " என்றேன்.
"அவங்க பொண்ணோட அக்காடா...அவங்களுக்கு கல்யாணமாகி ரெண்டு கொழந்தை இருக்கு... கூட விளையாடிக்கிட்டு இருந்ததே அது அவங்க குழந்தை தாண்டா... " என்று அவன் சொல்லி முடிக்கவும், "அப்படியா..." என்று அசடு வழிந்து கொண்டே வீட்டுக்கு வந்தேன் என்று சொல்லவும் வேண்டுமா...?!!
* * * * * * * * * *
நேரு உள் விளையாட்டு அரங்கம்.குட்டையான, திருமணமான பெண்கள் சுடிதார் அணியக்கூடாது என்ற சட்டத்தை முதலமைச்சர் அமல் படுத்தினார். நான் உற்சாகத்தோடு கைத்தட்டினேன். என் பக்கத்தில் இருந்தவன் ரொம்ப வேகமாக கை தட்டினான். என்னை விட அதிகம் பாதிக்கப் பட்டிருப்பான் போலிருக்கிறது. திடீரென்று மழை வந்தது. "இன்னிக்கு ஆபிசுக்கு லீவா...? எட்டு மணியாகுது இன்னும் தூங்குற... " என்று அம்மா கேட்டுக் கொண்டிருந்தார்கள், கையில் தண்ணீர் சொம்போடு.
* * * * * * * * * *

Friday, December 26, 2008

எண்ணங்கள் - டாக்டர் M S உதய மூர்த்தி



எண்ணங்கள், நல்ல எண்ணங்களை எண்ணுங்கள் என்று சொல்லுகிற நல்ல புத்தகம்....! ஆனால் நீங்கள் நினைப்பது எல்லாம் நடக்கும் என்று டெலிபதி ரேஞ்சுக்கு போவது தான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது...! உதாரணத்திற்கு, நீங்கள் உங்கள் வகுப்பிலோ அலுவலகத்திலோ உள்ள ஒரு பெண் உங்களை திரும்பி பார்ப்பாள் என்று எண்ணிக்கொண்டே இருந்தால் அது நிச்சயம் நடக்கும் என்பது போல் சொல்லுவது, எண்ணினால் போதும் அது நடந்துவிடும் என்ற மாய தோற்றத்தை கொடுக்கிறது. எண்ணங்களை செயல் படுத்த முயற்சிக்க வேண்டும் என்பதை சொல்லாமல் விட்டுவிட்டது என்கிற வருத்தம் என்னிடம் உண்டு. இப்படியான சில அபத்தங்களை தள்ளி விட்டு பார்த்தால் தமிழில் வந்த சிறந்த புத்தகங்களுள் ஒன்று...!


எனக்கு பிடித்த சுவாரசியமான பகுதிகளில் சில....


மனிதனின் எண்ணங்களே மனிதனை உருவாக்குகின்றன.
- புத்தர்


எண்ணங்களை
உள்ளே விடுங்கள். முடியும் என்ற எண்ணங்களை திரும்ப திரும்ப எண்ணுவதன் மூலம் மனதில் நம்பிக்கை பிறக்கிறது. நமது நம்பிக்கையைதிரும்ப திரும்ப சிந்திக்கும் பொது அது செயலாக பரிணமிக்கிறது. திரும்ப திரும்ப செய்யும் ஒரு செயல் பழக்கமாகிறது. பல பழக்கங்கள் மனிதனின் (character) குண நலன்களாகின்றன.
-
ரால்ப் வல்டோ டிரைன்
கொலை வாளினை எடடா
அந்த கொடியோர் செயல் அறவே...!
-
பாரதி தாசன்

இரண்டாம் உல போரின் சமயத்தில் காப்டன் ரிக்கன் பெக்கரும் அவருடைய எட்டு உதவியாளர்களும் பசுபிக் கடலில் சிறிய படகில் திசை தப்பி தத்தளித்தனர். சாப்பிட உணவு இல்லை. வழியோ தெரிய வில்லை. அவர்களிடம் இருந்தது சிறிய பைபிள் புத்தகம். ஆகவே அவர்கள் அதை திறந்து, "தண்ணீருக்கு எங்கே போவேன், சாப்பிட என்ன செய்வேன் என்று கவலைபடாதே" என்ற மாத்யூவின் வாசகங்களை படித்தனர். படித்த ஒரு கணத்தில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. எங்கிருந்தோ ஒரு கடல் புறா காப்டனின் தலை மீது அமர்ந்தது. காப்டன் அதை எளிதாக பிடித்து அனைவருக்கும் உணவாக வழங்கினார். மீண்டும் அரை மணியில் மழை பெய்தது. அவர்கள் குடிக்க தண்ணீர் கிடைத்தது. அவர்களுக்கு இப்போது பிழைத்துக் கொள்வோம் என்கிற நம்பிக்கை பிறந்தது. சில நாட்களில் அவர்கள் படகை பாதுகாப்பு விமானங்கள் கண்டுபிடித்தன. அவர்கள் காப்பாற்றப் பட்டார்கள்.
ஒரு வாளியில் இருந்த கறந்த பாலில் இரு தவளைகள் தவறி விழுந்தன. ஒரு தவளை எண்ணியது "நான் செத்தேன். எப்படி இதிலிருந்து பிழைக்க போகிறேன்" என்று புலம்பியது. உடனே அதன் கையும் காலும் சக்தி இழந்தன. சற்று நேரத்தில் அது இறந்தது.

இரண்டாவது
தவளையோ "இதிலிருந்து நான் எப்படியாவது தப்ப வேண்டும்" என்று எண்ணி கையையும் காலையும் உதைத்தது கொண்டதில் சற்று நேரத்தில் பால் நன்றாக கடையப் பட்ட நிலையை அடைந்தது. அதிலிருந்து வெண்ணை மிதக்க தொடங்கியது. சற்று நேரத்தில் அந்த தவளை வெண்ணையின் மீது சவுகர்யமாக உட்கார்ந்து கொண்டு ஒரு எம்பு எம்பி வெளியே குதித்தது.

ஒரு குழந்தை படம் வரைந்தது.
அதன் தந்தை "என்ன படம் வரைந்தாய் கண்ணே" என்று கேட்டார்.
"மாடு புல் தின்கிறது" என்றது குழந்தை.
"கண்ணே ! மாடு இருக்கிறது. புல் எங்கே" தந்தை கேட்டார்.
"இல்லை அப்பா! மாடு புல்லை தின்று விட்டது!" என்றது குழந்தை.

லண்டனில் ஒரு பணகார கிழவன் ஓர் ஏழை விவசாயிக்கு கடன் கொடுத்தான். விவசாயியால் பணத்தை திருப்பி கொடுக்க முடிய வில்லை. விவசாயிக்கு அழகு மிக்க பெண் இருந்தாள். அவளை தனக்கு திருமணம் செய்து கொடுத்தால் கடனை தள்ளி விடுவதாக கிழவன் சொன்னான். இதற்க்கு விவசாயியும் அவன் மகளும் உடன் பட வில்லை. பிறகு கிழவன் ஒரு யோசனை சொன்னான். "நமது முடிவை கடவுளிடம் விட்டு விடுவோம். இந்த காசுப் பையில் ஒரு வெள்ளை கூழாங்கல்லையும் கருப்பு கூழாங்கல்லையும் போடுகிறேன். உன் பெண் கையை விட்டு வெள்ளை கூழாங்கல்லையும் எடுத்தால் அவள் என்னை திருமணம் செய்ய வேண்டும். கருப்பு கூழாங்கல்லை எடுத்தால் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டாம். கடனை தள்ளி விடுகிறேன்." என்றான். வேறு வழி தோன்றாததால், விவசாயியும் அவன் மகளும் இதை ஒப்பு கொண்டனர். ஒரு நாள் மாலை கூழாங்கல்லையும் நிறைந்து கிடந்த தோட்ட பக்கமாக மூவரும் நடந்து கொண்டிருந்தனர். அபோது கிழவன் குனிந்து கூழாங்கற்களை எடுத்து பையில் போட்டான். அந்த பொல்லாத கிழவன் இரண்டு வெள்ளை கூழகாங்கல்லை எடுத்து போடுவதை அந்த பெண் கவனித்து விட்டாள். ஏதாவது ஒரு கல்லை எடுக்க சொன்ன போது, அவள் பையில் கையை விட்டாள். ஒரு கூழாங்கல்லை எடுத்தாள். உடனடியாக அதை நழுவ விட்டாள். கீழே கிடந்த மாற்ற கற்களுடன் ஒன்றாக அது மறைந்து விட்டது. "எனக்கு கை நடுங்குகிறது " என்றாள் அவள்.

"நீங்கள் பையில் பாக்கி இருப்பது என்ன நிற கல் என்று பார்த்தால் நான் எதை எடுத்தேன் என்று தெரிந்துவிடும்." என்றால். பையில் பாக்கியிருந்தது வெள்ளை நிற கல். ஆதலின் எடுத்தது கறுப்பாக தான் இருக்க வேண்டும். அவள் அந்த கிழவனை மணம் முடிப்பதிலிருந்து தப்பி விட்டாள். கடனும் தீர்ந்தது.
பிரச்னையை நான்கு கூறுகளாக பாகு படுத்தலாம்.
1. பிரச்சனை என்ன?
2. என்ன முடிவை விரும்புகிறோம்?
3. அந்த முடிவை அடையும் வழிகள் யாவை?
4. அவற்றில் சிறந்த வழி எது?
தன்னம்பிக்கையை வளர்க்க,

1. முகத்தில் புன்னகையை தவழ விடுங்கள்.
2. கொஞ்சம் கம்பீரமாக பாருங்கள்.
3.தலை நிமிர்ந்து நடங்கள்.
4.நடக்கும் வேகத்தை சிறிது அதிகப் படுத்தி பாருங்கள்.
5.பிறருடன் பேசும் போது குரலை உள்ளே விழுங்காமல் தெளிவாக நிதானமாக பேசி பாருங்கள்.
6. கூடங்களில் முன் வரிசைகளில் அமர்ந்து பழகுங்கள்.
7.பிறருடன் பேசும் போது கண்களை கண்ட இடத்திலும் பரவ விடாமல் பேசுபவரின் கண்களை நோக்கி செலுத்துங்கள்.


"தமிழ் நாட்டில் எந்த ஊரில் எந்த ஆறு ஓடுகிறது. எந்த ஊருக்கு கட்டை வண்டியில் போக வேண்டும் என்பதெல்லாம் எனக்கு தெரியும். இதெல்லாம் பூகோள படமில்லை என்றால் நான் படிக்காதவன் தான்"
- கர்ம வீரர் காமராஜர்.


மேதை தனம் என்பதெல்லாம் ஒரு சதம் உத்வேகமும் 99 சதம் கடின உழைப்பும் தான்.
வெற்றிக்கு உழைப்பு தான் குறுக்கு வழி.
மேலே செல்லுங்கள்.
விடா முயற்சிக்கு ஈடாக இவ்வுலகில் எதுவும் இல்லை. திறமை ஈடாகாது. திறமை இருந்தும் தோல்வி பெறுவோர் சகஜம்.
மேதை தனம் ஈடாகாது.
பலன் காணா மேதைகள் என்பது பழ மொழி.
கல்வி மட்டும் ஈடாகாது.
இந்த உலகம் படித்தும் பாதை தவறியவர்களால் நிறைந்திருக்கிறது.
விடா முயற்சியும் உறுதியும் மட்டும் சர்வ வல்லமை படித்தவை.
- கால்வின் கூலிக் ( அமெர்க்க ஜனாதிபதி)


பயமெனும் பேய்தனை அடித்தோம்
பொய்மை பாம்பை பிளந்துயிரைக் குடித்தோம்.


சிறிய விசயங்களை பற்றி என் கவலைப்பட வேண்டும்? அதனால் ஒன்றும் தலை போய் விடாது. பெரிய விசயங்களை பற்றி என் கவலைப் பட வேண்டும்? என்ன தான் கவலை பட்டாலும் அதன் விளைவுகள் மாறப் போவதில்லை. ஆகவே, எப்படி பார்த்தாலும் சிறிய விஷயங்களுக்கோ பெரிய விஷயங்களுக்கோ கவலை படுவதில் அர்த்தமே இல்லை.

அமெரிக்க டெலிவிசன் செய்தி ஆசிரியர்களுள், எரிக் சவரைட் என்பவர் புகழ் பெற்றவர். அவர் எழுதுகிறார். "நாங்கள் பர்மா காட்டிற்குள் சிக்கி கொண்டோம். பலர் இறந்து போனார்கள். எங்கள் கதி என்ன என்று பிறர் அறிய வழி ஏதும் இல்லை. என் காலில் காயங்கள். காலை எடுத்து வைக்க முடியாத நிலை. சுமார் 140 மைல்கள் நடந்தால், நகர் எல்லையில் உள்ள எங்கள் முகாமுக்கு போய் சேரலாம். எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு மைல் நடப்போம் ஏதாவது ஊர் வரும் என்று எண்ணியவாறு நடந்தேன். ஒவ்வொரு மைலாக கடந்தேன். சில நாட்களுக்கு பிறகு ஒரு கிராமம் தெரிந்தது."


இந்த இணைப்பை பயன்படுத்தி எண்ணங்கள் புத்தகத்தின் ஒலி வடிவை நீங்கள் கேட்கலாம்....